நெடுந்தீவு மக்களை கொந்தளிக்க வைத்த ‘வாடைக்காற்று’

(Maniam Shanmugam)
1970ஆம் ஆண்டு பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலங்கைத் தேசியத்தை அடிப்படையாக வைத்து பொருளாதார, அரசியல், கலாச்சாரத் துறைகளில் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து வந்த மூன்றாத்தர, நாலாந்தர மஞ்சள் மற்றும் நச்சு வெளியீடுகள் தடை செய்யப்பட்டன.

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது.

என்னத்த சொல்றது…

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களே. உண்மையாக நீங்கள் யார்.?

ஒவ்வொரு நாளிலும் பத்திரிகை பேட்டியில் பேசுவது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு நாள் சொன்னீர்கள், கவலை வேண்டாம்.
கவனம் போதும் என்று.

விவசாயிகளுக்காக அரசு செய்ய வேண்டியது என்ன?

ஊரடங்கால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விளைபொருட்களைத் தடையின்றி விற்கவும், விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவும் மா.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், அரசுக்குச் சில பரிந்துரைகளை முன்வைக்கிறது. இந்தப் பரிந்துரைகள் திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலானவை.

புத்தகம்…..

(சாகரன்)

(உலக புத்தக தினத்தை முன்னிட்டு இப்பதிவை எழுதியுள்ளேன்)

அகரம் என்ற அரிச்சுவடியை மதிப்பிற்குரிய மூத்தவரின் மடியில் இருந்து தாம்பாளத்தில் உள்ள பச்சையரிசியில் விஜயதசமி அன்று என் பிஞ்சுக் கரம் பற்றி ஏடு தொடக்கிய நாளில் கற்கண்டு உடன் அ இலிருந்து ஃ வரையிலான எழுத்துக்களையுடைய அரிச்சுவடிதான் நான் பெற்ற முதல் புத்தகம். இது பனை ஓலையிலான் ஆனது. ஒரு பக்கமாக இருந்தாலும் இது இன்றி நான் இல்லை.. நாம் இல்லை. இன்றளவிற்கு மிகப் பெரிய பொக்கிஷமாக… முதல் புத்தகமாக இதனை நான் என் வாழ்நாளில் கருதுகின்றேன்.

தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு இப்போதாவது வழி பிறக்குமா?

கரோனாவுக்கு எதிரான போரில் அரசுத் துறை நிறுவனங்களின் தேவைகளையும் சேவைகளையும் சமூகம் உணரத் தொடங்கியுள்ளது. மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சித் துறைகள் பாராட்டப்படுகின்றன. தூய்மைப் பணியாளர்களின் சவால் நிறைந்த பணியையும் சமூகம் உணரத் தலைப்படுகிறது என்றாலும் மற்ற துறைகளுக்கு இருக்கும் அதிகாரமோ, கிடைக்கும் மரியாதையோ, மற்றவர்கள் பெறும் உரிமைகளோ எதுவும் என்றைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

கோத்தாவும் கொரோனாவும்

உயிர்த்தஞாயிறன்று இசுலாமிய அடிப்படைவாத கொலைக்கும்பலால் நடத்தப்பட்ட நரபலி வெறியாட்டத்தைத் தொடர்ந்து இசுலாமியர்கள் மீது சிங்கள மக்களிடத்தில் மேலிட்ட பகையுணர்வானது, இசுலாமியர்களை முடக்கி அவர்களை சிறிலங்காவின் பொருண்மியத்திலும் அரசியலிலும் எந்தவொரு தாக்கத்தையும் செலுத்த இயலாதவர்களாக்கி சிறிலங்காவை அச்சுறுத்தலற்ற நாடாக்க வேண்டும் என்ற வேணவாவை சிங்களவர்களிடத்தில் ஏற்படுத்தியதன் விளைவாக, அப்படியொரு விடயத்தை செயற்படுத்தவல்ல ஆளுமையாக கோத்தாபயவினை சிங்கள மக்கள் பார்த்தார்கள்.

கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான விளக்க பதிவு!!

நான் Dr.P.மணி.
நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.

ஜோதிகா கூறிய கருத்துகள் சரியானவையே

(அன்பரசன் நடராஜா)

பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தூய்மையினையும் ,
படப்பிடிப்புக்காக தான் சென்ற மருத்துவமனையின் கேவலத்தையும் ஒப்பிட்டு நடிகை ஜோதிகா பேசிய பேச்சை சங்கிகளுடன் சேர்ந்து சில ஈழத்தமிழர்களும் கண்டித்து , அவரை வசைபாடுவதை காணக்கூடியதாகவுள்ளது.

வாட்ஸ் அப் புதிய ஸ்டிக்கர் பேக் அறிமுகம்: உலக சுகாதார மையத்துடன் இணைந்து முயற்சி

உலக சுகாதார மையத்துடன் இணைந்து, ‘வீட்டிலேயே இணைந்திருப்போம்’ (Together at home) என்ற தலைப்பில் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.