ஆதலினால் காதல் செய்வீர்……

(சாகரன்)

(புகைப் படத்தை ஒரு கணம் பாருங்கள் பின்பு பதிவை வாசிக்க தொடங்குங்கள்…..)

மனிதர்களுக்கிடையே இடைவெளி அவர்களிடம் ஒரு மன இறுக்த்தை தளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது தற்போதைய பேரிடர். இது நாம் பலரும் தற்போதைய கொரனா தொற்றுக் காலத்தில் எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனை. ஒரு நிச்சயமற்ற இலக்கு அற்ற பயணத்தை நோக்கி நாம் பயணிக்கின்றோமா என்ற நம்பிக்கையீனங்களை…. விரக்த்தியை நம்மில் பலரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிறது கேரளம்!

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு மாநிலங்களும் தடுமாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், கேரளம் எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஜனவரி 30 அன்று கேரளத்தில் கரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவிலேயே முதலில் கரோனா தொற்று தொடங்கிய இடமும் கேரளம்தான்.

என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு

அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின்; உலகப் போர்களுக்கு முன், பின்; சோவியத் ஒன்றியத்துக்கு முன், பின் என்றெல்லாம் வரலாற்றை நாம் பிரித்துப் பார்ப்பதுபோல, கரோனாவுக்கு முன், பின் என்றும் பார்க்கும் சூழல் உருவாகும் என்று வரலாற்றறிஞர்கள் பேசுகிறார்கள். நெடிய காலப்போக்கில் உலக வரைபடத்திலேயேகூட பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வித்தாக கரோனா காலகட்டம் அமையலாம் என்றும்கூட சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

கொவிட்-19இன் தற்போதைய கட்டம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ’மரணஓலம்’

(எம். காசிநாதன்)

இந்தியாவில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 90 ஆயிரத்தைக் கடந்து, இன்னும் சில தினங்களில் ஒரு இலட்சத்தைத் தொட்டுவிடும் நிலை காணப்படுகின்றது. இந்த, நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை, இதுவரை 2,876 பேர்தான் என்பது, முன்கூட்டியே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும், மாநில அரசுகளின் பல்வேறான தீவிர முயற்சிகளின் பலன் என்பது ஒருபுறத்தில் இருந்தாலும், ‘கொரோனா வைரஸுடன் வாழப் பழகுவோம்’ என்பது, நடைமுறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது.

வேதவல்லி கந்தையாயும் அவர் மகள் சுகுணாவும்

இன்று காலை ஏனோ 1963 1964 பேராதனைப் பல்கலைக்க்ழகக் காலம் ஞாபகம் வந்தது.
அப்[போது நான் பேராதனைபல்கலைக் க்ழகத்தில் இறுதி வருட மாணவன், எனக்கு அப்போது 21 வயதிருக்கும்

எங்களுக்கு இல்லை முடக்கம்

(மகேஸ்வரி விஜயனந்தன்)

பெண் என்பவள் சாதாரணமானவள், இரக்கக்குணம் கொண்டவள், அன்புக்குப் பத்திரமானவள், எளிதில் வசியப்படுபவள், இலகுவில் ஏமாறுபவள் என்பதற்கும் அப்பால் முழு தேசத்தையும் கட்டியமைக்கும் வல்லமை பெண்ணுக்கு உள்ளதென்பது முற்காலம் தொடக்கம் இக்காலம் வரை நிரூபணமாகியுள்ளது.

குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள்

(ப.பிறின்சியா டிக்சி)

பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன.

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: உலகமயமாக்கலின் எதிர்காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

“வழமைக்குத் திரும்புதல்” என்ற சொற்றொடர், இன்று பொருளற்றது. இனி, புதிய சொற்களை நாம், தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு, இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு, இதைப் பயன்படுத்தவியலாது. வழமை என்பது, இனிப் புதிதாக வரையறுக்கப்படும். அந்த வழமை, நாம் விரும்பியதாக இராது, நாம் எதிர்பார்த்ததாக இராது. ஆனால், உலகம் புதிய நடைமுறைகளுடன் இயங்கத் தொடங்கும். அது தவிர்க்கவியலாதது.

எங்க அப்பன் எங்க?.

எரித்துக் கொல்லப் பட்ட ஏழைச்சாதிச் சிறுமி ஜெயஸ்ரீ, நினைவிழக்கும் முன் கூறிய இறுதி வார்த்தைகள் என் அப்பன் எங்கே என்ற வார்த்தைகள்.

அம்மாக்கள் தினம்……!

(சாகரன்)
நுகர்வோரை மையப்படுத்தி புதிய உலக ஒழுங்கு முறைக்குள் இன்று விசேட தினங்களும், கொண்டாட்டங்களும் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளைகளில் அவற்றில் எனக்கு அதிகம் நாட்டம், உடன்பாடு இல்லாவிட்டாலும் இந்த தினங்களை சார்ந்த உறவுகள், பாசங்கள், சந்திப்புக்கள், சந்தோஷங்களில் எனக்கு நிறையவே ஈடுபாடு உண்டு.