பேருந்து கட்டணம் குறைகின்றது

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. 

பாடசாலை மாணவர்கள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 4 ஐச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று(28) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிவப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

ஹிருணிக்காவுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. டிஃபென்டர் மூலம் இளைஞரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமை ’ஆபத்தாக மாறலாம்’

தேர்தலை ஒத்தி வைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு

இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். இந்தாண்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

வெப்ப அலைக்கு ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் பலி

மக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் ஹஜ் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் ஹஜ் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.

அனுபவம் புதிது: வவுனியா மக்கள்

வவுனியா மற்றும் மதவாச்சியின் பல கிராமங்களில் 2.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிச்சரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அனுராதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்டது. லேசான நில அதிர்வு காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை

“கடற்தொழில் அமைச்சரே கண்ணை திறந்துபார்”

இலங்கை கடற்பரப்பிற்கள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  மீனவர்கள் போராட்டமொன்றை, செவ்வாய்க்கிழமை (19)  முன்னெடுத்திருந்தனர்.

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் சம்பவம் ; மூவர் கைது

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியை சேர்ந்த  ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை (13) அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.