தோழர் நாபாவின் மெருகூட்டப்பட்ட சிலை திறப்பு விழா

திருகோணமலை 19/11/2018 அன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி நடத்திய தோழமை தினத்தில் கடல்முக வீதி மாவட்ட காரியாலயத்தில் தோழர் பத்மநாபா அவர்களின் உருவச்சிலை திறக்கப்பட்டு மாலை அணிவித்ததுடன் குளக்கோட்டன் மண்டபத்தில் தோழமை தின நிகழ்வு நடத்தப்பட்டு மக்களுக்கு கண் பரிசோதனை செய்து இலவச மூக்குக்கணடியும் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மைத்திரி-ரணில் முதன்முறையாக உரையாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்றுக்காலை முக்கிய உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் தொலைபேசியில், சில நிமிடங்கள் உரையாடியுள்ளனர் என, இருதரப்பு வட்டாரத் தகவல்களும் தெரிவித்தன. ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர் இருவரும் முதல்தடவையாக நேற்று (18) பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமராக ஒக்டோபர் 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, இலங்கை அரசியலில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு அவசியம்’

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தான் தீர்மானிக்க வேண்டுமெனில் குறித்த வாக்கெடுப்பானது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ​பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையிலோ முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

(“‘இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு அவசியம்’” தொடர்ந்து வாசிக்க…)

புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

(“புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’

மக்களாலேயே தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே தான் இன்று பிரதிஅமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாகவும் கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து, இன்று (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த இரா.சம்பந்தன், மேலும் கூறுகையில்,

(“விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்” தொடர்ந்து வாசிக்க…)

சபாநாயகர் ஆசனம் சுற்றிவளைப்பு; சபையில் பெரும் குழப்பம்

சபாநாயகர் ஆசனத்தை ஆளுங்கட்சியினர் சுற்றி வளைத்ததால் சபையில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. பிரதமர் மஹிந்த அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிராக வாக்கெடுப்பை நடத்துமாறு, லக்ஸ்மன் கிரியெல்ல கோரியதையடுத்து, ச​பையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஆசனத்துக்கு அருகில் சென்றதும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக சபாநாயகரை சுற்றி வளைத்தனர்.

மஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

(“நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் – ரணில்” தொடர்ந்து வாசிக்க…)