ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு

‘யாழில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனி அதிகரிக்கப்படும்’

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதாக, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார். அதன் ஓர் அங்கமாக, தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை, இனிவரும் நாள்களில் அதிகரிக்கப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (“‘யாழில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனி அதிகரிக்கப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ்க் கட்சிகளை இணைக்க முயற்சிப்பேன்’

தென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படுவதற்கு முன்னர், சகல தமிழ்க் கட்சிகளையும் ஓரணியின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். “தெற்கு அரசாங்கம் இந்நாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளல், அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளல் எவ்வாறு என்பது தொடர்பிலான சிந்தனையிலேயே இருக்கின்றன. அது ஒக்டோபர் 26ஆம் திகதி முதல், இதுவரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை வைத்து பார்க்கும் போது, தெட்டத்தெளிவாகின்றது” என்றார். (“‘தமிழ்க் கட்சிகளை இணைக்க முயற்சிப்பேன்’” தொடர்ந்து வாசிக்க…)

‘ பொதுத் தேர்தலை எவராலும் தடுக்க முடியாது’

விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி பொதுத்தேர்தல் நடைபெறும். இதனை எவராலும் தடுக்க முடியாது. தேர்தல் என்பது மக்களுக்குள்ள உரிமையாகும். இதனை நீதிமன்றத்தால் கூட சவாலுக்குட்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்லத் தாம் எடுத்திருந்த தீர்மானம் குறித்து விரைவில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்து விளக்கமளிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

(“‘ பொதுத் தேர்தலை எவராலும் தடுக்க முடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்களுக்கு என்ன அதிகாரங்களை கொடுப்பீர்கள்? வாய்திறந்த ரணில்!

(அதிரன்)

வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர பிற கட்சிகள் எதுவுமே அந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு அவர் வழங்கிய பதில்களையும் இங்கு இணைக்கிறோம்.

(“தமிழர்களுக்கு என்ன அதிகாரங்களை கொடுப்பீர்கள்? வாய்திறந்த ரணில்!” தொடர்ந்து வாசிக்க…)

கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம். ஜனவரி 5இல் பொதுத் தேர்தல்?

நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாகவும், அரச அச்சுத் திணைக்களத்துக்கு வர்த்தமானி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நிலையில், எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதியன்று, பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

‘ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உரிய பதிலில்லை’

தற்போது சிக்கலாகியுள்ள பிரதமர் பதவி குறித்து ரணில் விக்கிரமசிங்க உயர்நீதிமன்றத்துக்கு செல்லாதது ஏன் என்பது தொடர்பில் இதுவரை ​ஐக்கிய தேசியக் கட்சியினர் எவ்வித பதிலையும் வழங்கவில்லையென்று ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டி.யு. குணசேகர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு, பிரதமராக ரணிலை சட்டவிரோதமாக நியமித்ததைப் போன்றே, இம்முறையும் பிரதமர் ஒருவரை சட்டவிரோதமாக நியமித்துள்ளாரென, ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டி.யு. குணசேகர தெரிவித்துள்ளார். அன்று விவசாயியின் மகனான ஜயரத்னவை பிரதமர் சட்டவிரோதமாக பதவி விலக்கும் போது, அமைதியாக இருந்தவர்கள் இன்று அதேப்போன்று ரணிலை பதவி நீக்கவும் பாரிய எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

‘நான் விலகுகின்றேன்’ மாவைக்கு சி.வி கடிதம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து தான் விலகுவதாக, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். தாம் விலகுவதாக விக்கினேஸ்வரன் கட்சிக்கு அறிவித்துள்ள நிலையிலும் புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாலும் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாகவே கருதப்படுவார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

(“‘நான் விலகுகின்றேன்’ மாவைக்கு சி.வி கடிதம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியின் அழைப்பை: தமிழ் முற்போக்குக் கூட்டணி நிராகரித்து

புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, அரசமைப்புக்கு விரோதமான செயற்பாட்டுக்குத் தம்மால் ஆதரவளிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில், கொழும்பு-07லுள்ள, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதியை நேற்று (07) சந்தித்தது.

(“ஜனாதிபதியின் அழைப்பை: தமிழ் முற்போக்குக் கூட்டணி நிராகரித்து” தொடர்ந்து வாசிக்க…)

‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் நேற்று(05) நடத்தப்பட்ட “ஜன மஹிமய” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டினால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

(“‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’” தொடர்ந்து வாசிக்க…)