விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீடிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு முன்வைத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் இந்த நிராகரிப்பு தீர்ப்பு வழங்கப்பட்டமையின் மூலம், அந்த அமைப்பின் மீதான தடை நீடிக்கப்படுவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் செயற்பட்ட அமைப்பு எனவும், புலிகள் அமைப்பின் சட்டதரணி விக்டர் கோபேயினால் வெளியிடப்பட்ட கருத்தை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. லக்சம்பர்க் நகரத்தில் ஐரோப்பிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினால் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. புலிகள் அமைப்பு தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என புலிகள் அமைப்பின் சட்டதரணி நீதிமன்றத்தின் முன் கருத்து வெளியிட்டிருந்தார் என திவயின தகவல் வெளியிட்டுள்ளது.

தீபாவை எதிர்த்து மாதவன் திடீரென களமிறங்க காரணம் பல்லாயிரம் கோடி ரூபாய் பேரம்…. பரபரப்புத் தகவல்கள்

தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் நடுவே ஏற்பட்ட பிளவுக்கு, பணப் பிரச்சினைதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ரத்த வாரிசு என்பது தீபக் மற்றும் தீபா ஆகிய அவரின் அண்ணன் பிள்ளைகள்தான். இதில் தீபக் ஆரம்பம் முதலே சசிகலாவுடன் இருந்தார். அவரை தனது தாய் போன்றவர் என புகழுரைத்து வந்தார். ஜெயலலிதாவின் சொத்துக்களை பகிர்வதில் தீபக் திருப்தியடைந்திருந்ததே இந்த நெருக்கத்திற்கு காரணம் என கூறப்பட்டது.

(“தீபாவை எதிர்த்து மாதவன் திடீரென களமிறங்க காரணம் பல்லாயிரம் கோடி ரூபாய் பேரம்…. பரபரப்புத் தகவல்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 116 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட  தமிழ்நாட்டின் 2017-2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கத்தால்  சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு- செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

முன்னை நாள் பெண் போராளிகளால் வெற்றிகரமாக கிளிநொச்சியில் நடத்தப்படும் உற்பத்தி நிறுவனம்:

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்று அமைந்திருந்த மாடிக் கட்டடம் ஒன்றில் முழுக்க முழுக்க தமிழ்ப் பெண்களால் நிறுவப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்படும் உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய சந்ததிக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பொசிபிள் கிறீன் (Possible Green Ltd) என்ற அந்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் இன்று இலங்கை முழுவதும் மட்டுமன்றி உலகம் முழுவதும் தனது உற்பத்திகளை விற்பனை செய்கின்றது. ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் மட்டுமன்றி சில ஆபிரிக்க நாடுகளிலும் தனது விற்பனையை ஆரம்பித்துள்ள இந்த நிறுவனத்தின் இயக்குனர், முன்னை நாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளியான திருமதி.கோகிலவாணி. 20 இற்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இயக்குனராக சுரபி என்ற முன்னை நாள் போராளியும், உற்பத்தி முகாமையளராக கிருசாந்தி என்ற இளம் பெண்ணும் பணியாற்றுகின்றனர்.

(“முன்னை நாள் பெண் போராளிகளால் வெற்றிகரமாக கிளிநொச்சியில் நடத்தப்படும் உற்பத்தி நிறுவனம்:” தொடர்ந்து வாசிக்க…)

நெத‌ர்லாந்து தேர்த‌ல்

இட‌துசாரி ப‌சுமைக் க‌ட்சி மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள‌து. த‌லைந‌க‌ர் ஆம்ஸ்ட‌ர்டாமில் அதுவே பெரிய‌ க‌ட்சி. அதே நேர‌ம், வ‌ல‌துசாரி அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ போலி இட‌துசாரி தொழிற்க‌ட்சி (PvdA) ப‌டுதோல்வி அடைந்துள்ள‌து. இவ்வ‌ள‌வு கால‌மும் பெரிய‌ ஆளும் க‌ட்சிக‌ளில் ஒன்றாக‌ இருந்த‌து. வெறும் 9 ஆச‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் எடுத்துள்ள‌து. இது ஒரு வ‌ர‌லாற்றுத் தோல்வி ஆகும். புதிய‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Groen Links (ப‌சுமை இட‌து), க‌ட‌ந்த‌ தேர்தலை விட‌ 10 ஆச‌ன‌ங்க‌ள் அதிக‌மாக‌ப் பெற்றுள்ள‌து. அது1992 ம் ஆண்டு உருவான‌ ந‌வீன‌ இட‌துசாரிக் க‌ட்சி ஆகும். ப‌ழைய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி (CPN), ம‌ற்றும் இர‌ண்டு முற்போக்கு க‌ட்சிக‌ள் சேர்ந்து உருவாக்கின‌.

போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – சம உரிமை இயக்கம் யாழில் பத்திரிகையாளர் கூட்டம்

சம உரிமை இயக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நீதி மற்றும் நேர்மையுடன் தீர்த்து வைக்க கோரி போராட முடிவு எடுத்துள்ளது. சமவுரிமை இயக்கம் தனது போராட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் நோக்கத்தில் இன்று (13-03-2017) யாழில் ஊடகவியலாளர் கூட்டத்தை கூட்டியிருந்தது. சமவுரிமை இயக்கத்தின் சார்பில் கபிலன் சந்திரகுமார் ஊடகவியலாளர் கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தார்.

(“போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – சம உரிமை இயக்கம் யாழில் பத்திரிகையாளர் கூட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்

வவுனியாவில் கடந்த 19 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று (14) தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பன ஆதரவு வழங்கின. வவுனியா கலாச்சார மண்டபத்திலிருந்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு பேரணியாக சென்று தமது ஆதரவினை இவர்கள் வழங்கியுள்ளனர். கடந்த 19 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச் சட்டத்தினை உடனே இரத்துச் செய்து காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் கூறவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் தமது நியாயமான போராட்டத்திற்கு நேரில் வந்து வாக்குறுதி அளிக்கும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

கேப்பாபுலவு அ​டையாளம் தெரியவில்லை

 

படையினர் வசமுள்ள கேப்பாப்புலவு கிராமத்தில், பொதுமக்களின் வீடுகள் பல அழிக்கப்பட்டுள்ள நிலையில், ​மக்களின் பூர்வீகக் காணிகளையும் அடையாளம் காண முடியாதவாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிரதேசமானது, பொதுமக்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளையும் பாடசாலை, கோயில், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உள்ளடங்கலாக, நான்கு கிராமங்களையும் உள்ளடக்கியிருந்தது.

(“கேப்பாபுலவு அ​டையாளம் தெரியவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு; மீண்டும் கவனயீர்ப்பு

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி, பிரதேச மக்கள், சனிக்கிழமை (11) முதல் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன், இந்தப் போராட்டம் கவனயீர்ப்பு போராட்டமாக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (11) முதல், உணவுத் தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடைந்தது. கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பேரணிப் பிரச்சினை மோசமடைகிறது துருக்கி அமைச்சர்களை தடுத்தது நெதர்லாந்து

துருக்கியின் குடிபெயர்ந்தோர் மத்தியில் துருக்கி மேற்கொண்டுவரும் அரசியல் பிரசாரம் தொடர்பான பிரச்சினையொன்றில், றொட்டர்டாமில் துருக்கி அமைச்சர்கள் நேற்று முன்தினம் (11) பேசுவதை, நெதர்லாந்து தடுத்துள்ளது. இதனையடுத்து, எஞ்சியிருக்கும் நாஸி என நெதர்லாந்தை, துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோவான் விளித்துள்ளார். றொட்டர்டாமிலுள்ள துருக்கித் துணைத் தூதரகத்துக்குள் நுழைய, துருக்கியின் குடும்ப அமைச்சர் பாத்மா பெதுல் சயான் காயா, பொலிஸாரினால் தடைசெய்யப்பட்டமையைத் தொடர்ந்தே, ஏற்கெனவெ இருந்த பிரச்சினை, பாரிய இராஜதந்திர சம்பவமாக மாறியிருந்தது.

(“பேரணிப் பிரச்சினை மோசமடைகிறது துருக்கி அமைச்சர்களை தடுத்தது நெதர்லாந்து” தொடர்ந்து வாசிக்க…)