தாமதமான தியாகிகள் தினம்

இம்முறை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் 30வது தியாகிகள் தினம் 19/06/2020 கொரோனா தொற்று காரணாமாக 03 மாதங்கள் பிற்போடப்பட்டு இன்று 19/09/2020 நடைபெற்றது.வருடா வருடம் நடைபெறுவது போல் இம்முறையும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு திருகோணமலை கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் 300ற்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்தனர்.

மாகாண சபை முறைமை ஒழிப்பு;இறுதி தீர்மானம் இல்லை

மாகாண சபை முறைமையை ஒழிப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்ச​ர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபைச் செயலாளர்கள், ஆணையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்படி விடயங்களை தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

‘ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்’ என, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.

20ஆவது திருத்தம்; ‘பேசி தீர்மானிக்கலாம்’

20 ஆவது அரசியல் யாப்பு திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வருவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கிளிநொச்சியிலும் தடை

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடதென, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கிடையே மோதல்

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று (12) நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது, மாணவக் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20க்கும் மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

நரேந்திர மோதியை விமர்சிக்கும் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மயில்களுக்கு உணவளி க்கும் காணொளியைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் நரேந்திர மோதி சென்ற மாதம் பகிர்ந்திருந்தார்.

அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் நிகழ்வு

இலங்கையின் முதல் தமிழ் எதிர்க்கட்சித்தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில், இன்று நடைபெற்றது. இதன்போது, அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பொன்.சிவகுமரனின் ஜனன தினம்

ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70ஆவது பிறந்த தினம், இன்று நினைவுகூரப்பட்டது. சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில், இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. ஏற்பாட்டு குழுவில் உறுப்பினர் செந்தூரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் போராட்டம்

இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தால் கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.