வட மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் காலம் நீடிப்பு

வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைக்காலம், 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணசபையின் அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.

(“வட மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் காலம் நீடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

‘இயக்கங்கள் துப்பாக்கித் தூக்க முன்னரே இராணுவம் துன்புறுத்தியது’

இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கி தூக்க முன்னர் இருந்தே, அரச படைகளும் குண்டர்களும், அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்துள்ளன. இரக்கமின்றிச் சுட்டுக்கொன்று வந்துள்ளனர். குத்திக் கொன்றுள்ளனர். அதனால்தான், எமது வடமாகாண சபை இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இயற்ற வேண்டி வந்தது’ என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

(“‘இயக்கங்கள் துப்பாக்கித் தூக்க முன்னரே இராணுவம் துன்புறுத்தியது’” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்து என்ன? எங்களை முகாம்களில் அடைப்பார்களா? – முஸ்லிம் அமெரிக்க குடிமகன் கேள்வி

அமெரிக்க அதிபரின் உலகை உலுக்கிய குடிபெயர்வு, அகதிகள் மீதான புதிய நடவடிக்கை உலகம் முழுதும் எதிர்ப்புகளுடன் குழப்பங்களை அதிகரித்துள்ளது. ஆனால் ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும், இந்த புதிய உத்தரவு, ‘அருமையாக வேலை செய்கிறது’ என்று புளகாங்கிதம் அடைந்துள்ளனர். விமான நிலையங்களில் தேங்கியுள்ள முஸ்லிம் மற்றும் பிற பயணிகளின் வழக்கறிஞர்கள் கூறும்போது, “குழப்பம் மேலும் நீடிக்கும் என்றே தெரிகிறது. இது ஒரு தொடக்கம் போல்தான் தெரிகிறது” என்று பயமுறுத்தியுள்ளார்.

(“அடுத்து என்ன? எங்களை முகாம்களில் அடைப்பார்களா? – முஸ்லிம் அமெரிக்க குடிமகன் கேள்வி” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு: 10,000 அகதிகளை பணியமர்த்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் முடிவு

அமெரிக்காவின் புகழ்பெற்ற காப்பி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 அகதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹவர்ட் ஸ்குல்ட்ஸ் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் குடியுரிமை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒதுங்கியும், மவுனமாகவும் இருக்க முடியாது என்றும் ஹாவர்ட் ஸ்குல்ட்ஸ் கூறியிருக்கிறார்.

(“ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு: 10,000 அகதிகளை பணியமர்த்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் முடிவு” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் கியூபெக் நகரில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

கனடாவில் கியூபெக் நகரில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். எம். உவைஸ் காஜியார் வன்மையாக கண்டித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான மக்கள் தொழுகைக்காக திரண்டு காணப்பட்டபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 06 பேர் கொல்லப்பட்டு 08 பேர் காயப்பட்டு உள்ளனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று பொலிஸார் நம்புகின்றனர். அத்துடன் இருவரை கைது செய்து உள்ளார்கள். இந்நிலையில் முஸ்லிம்களின் வணக்க தலமாகவும், புகலிடமாகவும் உள்ள கியூபெக் இஸ்லாமிய கலாசார நிலையம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் அதிர்ச்சியையும், கவலையையும் ஒரே நேரத்தில் தந்து உள்ளது என்று உவைஸ் காஜியார் தெரிவித்து உள்ளார். இது காட்டுமிராண்டிகளின் கோழைத்தனம் என்று கூறி உள்ள இவர் இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

‘வட-கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த ​​வேண்டும்’

“வட-கிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த குரல் எழுப்பும் தரப்பினர், முதலில் முஸ்லிம் மக்களுக்கு ஏன் அது முக்கியமானதென்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என காத்தான்குடி முஸ்லிம் போரம் தெரிவித்துள்ளது. வடக்குக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்த காத்தான்குடி முஸ்லிம் போரத்தின் பிரதிநிதிகள், யாழ். ஊடக அமையத்தில் வடக்கு ஊடகவியலாளர்களை சந்தித்து, நேற்று கலந்துரையாடினார்.

(“‘வட-கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த ​​வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைக்கு எதிராக விரல் நீட்டிய அமெரிக்க அதிகாரிகள் நீக்கம்

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(“இலங்கைக்கு எதிராக விரல் நீட்டிய அமெரிக்க அதிகாரிகள் நீக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதம்

காணாமல் போனோரின் உறவினர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்று வரும் இப்போராட்டம், வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளுடன் நேற்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. காணாமல் போனோரின் உறவினர்கள், கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டதன் பின்னர், ஊர்வலமாக வவுனியா பிரதான தபாலகத்துக்கு முன்பாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

வடக்கு மக்களுக்கு நீர்

யாழ்ப்பாணத்தின் எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்கள், உவர்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் கீழ் நீரைப் பெற்றுக்கொள்ளளுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் திட்டத்தை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐயகுணரத்ன, இன்று ஆரம்பித்து வைத்தார். எழுவைத் தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில், கடற்படையினர் பணியாற்றிய போது கிடைத்த சம்பளத்திலேயே, இந்த நன்னீராக்கும் திட்டம், எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு நன்னீராக்கும் திட்டங்களும், 7.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகத்தமிழர் அமைப்பின் மீதான தடை

சத்தஞ் சந்தடியில்லாமல் கனடிய அரசு செய்த காரியம் – உலகத்தமிழர் அமைப்பின் மீதான தடை காலவரையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு சட்டவிரோதமாகப் பணச்சேர்ப்பில் ஈடுபட்ட காரணத்திற்கான தடைசெய்யப்பட்ட கனடாவில் இயங்கும் உலகத்தமிழர் அமைப்பானது, 2009ம் ஆண்டில் ஈழப் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்வதோடல்லாமல், கண்சவேட்டிவ் கட்சி தோற்றபிறகு பதவியேற்ற ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான அரசும் அத்தகைய பாணியையே கடைப்பிடித்து வருகின்றது.

(“உலகத்தமிழர் அமைப்பின் மீதான தடை” தொடர்ந்து வாசிக்க…)