தமிழில் தேசிய கீதம் பண்டிகை இனிப்பாக இருக்க கூடாது, மனோ கணேசன்!

தமிழில் தேசிய கீதம் என்பது தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பண்டிகைக்கால இனிப்பாக இருந்து கூடாது என்றும், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மெய்சிலிர்த்து, கண்கலங்கி, அகம் மகிழ்ந்து விடவில்லை எனவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் தொழில் புரிந்து வாழும் இலங்கை பணியார்களுக்காக விசேடமாக நடத்தப்பட்ட நேரடி தொலைகாட்சி ஒளிபரப்பில், கலந்துகொண்டு சிங்கள மொழியில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

(“தமிழில் தேசிய கீதம் பண்டிகை இனிப்பாக இருக்க கூடாது, மனோ கணேசன்!” தொடர்ந்து வாசிக்க…)

மின்சார நாற்காலிக்கு சென்றவர்களை எமது அரசாங்கம் காப்பாற்றியுள்ளது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயருடன் செய்து கொள்ளப்பட்ட மேல் நாட்டு உடன்படிக்கை பற்றி தெரிந்தா பேசுகிறார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வந்த யோசனைக்கு இலங்கை ஆதரவு வழங்கியமையானது 1815 ஆம் ஆண்டு மேல் நாட்டு உடன்படிக்கைக்கு இணையானது என மகிந்த ராஜபக்ச அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல போகின்றனர் என்று கதறியவர்களை எமது அரசாங்கமே காப்பாற்றியது எனக் கூறியுள்ளார்.

காட்டுப்பகுதியில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை, மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகள், நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை மீட்டுள்ளனர். மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் மது வரி நிலைய சாஜன் வி.திருச்செல்வம், மது வரி நிலைய காவலாளி எஸ்.விதுசன், மது வரி திணைக்களத்தின் சாரதி ஏ.ஜே.பீரிஸ் மற்றும் சிலாபத்துறை கடற்படையினர் ஆகியோர் இணைந்து குறித்த கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.

(“காட்டுப்பகுதியில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு” தொடர்ந்து வாசிக்க…)

இனவாதத்திற்கு எதிரான போராட்டம்.

 

இனவாத “சிங்கள இரத்தம்” என்னும் அமைப்புக்கு எதிராக தெற்கில் “நாம் இலங்கையர்” மற்றும் “அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்” இணைந்து இனவாதத்திற்கு எதிரான போராட்டம். துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டி மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்திற்கு எதிரான பாரிய பிரச்சாரம்

நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி!

விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ் செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களை முந்தி செல்ல முயற்சி எடுக்கும் நடத்துநர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்படுவார்கள் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

(“நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி!” தொடர்ந்து வாசிக்க…)

ஜே.வி.பி யின் யாழ். பிரதான அலுவலகம் திறப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட பிரதான அலுவலகம், கண்டி வீதியில் நாளை சனிக்கிழமை (13) திறந்து வைக்கப்படவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைப்பார்.

நல்லிணக்க பொறிமுறைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(12) வெள்ளிக்கிழமை இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை வெளிவிகார அமைச்சின் எற்பாட்டில் இது நடைபெற்றது. வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹொட்டியாரட்சி ஆகியோர் தலைமையில் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

(“நல்லிணக்க பொறிமுறைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!” தொடர்ந்து வாசிக்க…)

வீதி ஒழுங்கை மீறிய வடக்கு முதல்வர்!

யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் சிலநாட்களின் முன் தெரிவித்துள்ள அதே வேளை, முதலமைச்சர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து சென்ற சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றது.

(“வீதி ஒழுங்கை மீறிய வடக்கு முதல்வர்!” தொடர்ந்து வாசிக்க…)

கருணா அணிக்கு அஞ்சியே மாறி மாறிச் சாட்சியமளித்தேன்

கருணா அணியின் அழுத்தம் காரணமாகவே, பொலிஸாரிடம் தான், மாற்றி மாற்றி வாக்குமூலம் கொடுத்ததாக, யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியான டப்ளியு.எம்.எம்.சஞ்சய பிரித் விராஜ் தெரிவித்தார். இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயின் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

(“கருணா அணிக்கு அஞ்சியே மாறி மாறிச் சாட்சியமளித்தேன்” தொடர்ந்து வாசிக்க…)

பொதுபலசேனா ஞானசார தேரருக்கு தொடரும் மறியல்?

ஊடகவியலாளர் பிரகீத் என்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரை எதிர்வரும் 16ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க, நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். எக்னெலிகொட காணாமல்போன வழக்கில், சந்தியா என்னெலிகொட சாட்சியாளர் ஆவார். குற்றவியல் ஏற்பாடுகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று, பாதிக்கப்பட்ட (சந்தியா எக்னெலிகொட) தரப்பின் சட்டத்தரணி கூறினார்.

(“பொதுபலசேனா ஞானசார தேரருக்கு தொடரும் மறியல்?” தொடர்ந்து வாசிக்க…)