சூளைமேட்டு வழக்கு காணொளியூடாக சாட்சியமளிக்கிறார் டக்ளஸ்?

சூளைமேட்டு வழக்கு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் செல்லும் டக்ளஸ் தேவானந்தா காணொளியூடாக சென்னை செசன் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளார். தனது இந்திய சட்டத்தரணிகள் ஊடாக டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்று விடுத்த கோரிக்கைக்கு அமைவாக காணொளியூடாக நீதிமன்றுக்கு சமுகமளிப்பதற்கும் சாட்சியமளிப்பதற்கும் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் 05-03-2016 சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சமூகமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் கலாச்சார ஆடைக் கட்டுப்பாடு?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான ஆடை ஒழுங்கு விதிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் சேலை அணிய வேண்டும் எனவும் ஆண் மாணவர்கள் டெனிம் மற்றும் ரீ-சேர்ட் அணியக்கூடாது, சேர்ட் அணிந்துதான் அதுவும் ‘இன்’ பண்ணிதான் அணிய வேண்டும், சப்பாத்தை தினமும் அணிய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம் மாணவிகள் அவர்களின் கலாசார உடைகளுக்கு ஏற்றவகையில் ஆடைகளை அணிந்து, விரிவுரைகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

(“யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் கலாச்சார ஆடைக் கட்டுப்பாடு?” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த பதுக்கிய பணத்தைக் கண்டறிய அமெரிக்க உதவி!?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான பணம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் உதவியை அரசு நாடியுள்ளது. வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடைய விவரங்களை இலங்கையிடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச வர்த்தகத்துறை இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இராஜாங்க அமைச்சர் சுஜீவ இந்தத் தகவலை வெளியிட்டார்.

(“மஹிந்த பதுக்கிய பணத்தைக் கண்டறிய அமெரிக்க உதவி!?” தொடர்ந்து வாசிக்க…)

உம்மன்சாண்டி… பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

விழா ஒன்றில் பங்கேற்க வந்த கேரள முதல்வரை, ‘உம்மன்சாண்டி…’ என்று பெயர் சொல்லி அழைத்து, இரண்டாம் வகுப்பு மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த மாணவியை நோக்கி, உம்மன்சாண்டி சிரித்த படியே நடந்து சென்று, அவரது கோரிக்கையை கேட்டு நிறைவேற்றினார் தன்னை பெயர் சொல்லி அழைத்ததற்காக பாராட்டினார்.

(“உம்மன்சாண்டி… பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி” தொடர்ந்து வாசிக்க…)

புங்குடுதீவு மாணவி கொலை: ஒருதலைக் காதலே காரணம்; ஐவர் வன்புணர்வு செய்தனர்

புங்குடுதீவு மாணவியின் கொலையானது ஒருதலைக் காதல் காரணமாக இடம்பெற்றது எனவும் அம்மாணவியை ஐந்து பேர் இணைந்தே கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளர் என்றும் அதற்கு, சுவிஸ் குமார் என்பவர் திட்டம்தீட்டிக் கொடுத்தார் எனவும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

(“புங்குடுதீவு மாணவி கொலை: ஒருதலைக் காதலே காரணம்; ஐவர் வன்புணர்வு செய்தனர்” தொடர்ந்து வாசிக்க…)

ராஜிவ் கொலையாளிகள் விடுதலை லோக்சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, பார்லி.,யில், காங்கிரஸ் கட்சியினர், நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விஷயத்தில், காங்., – அ.தி.மு.க., – எம்.பி.,க்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் கருத்தை கேட்டு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நேற்று காலையில், மூத்த காங்., எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.

(“ராஜிவ் கொலையாளிகள் விடுதலை லோக்சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வீரவன்சவின் போராட்டமே மகிந்தவின் சரிவின் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு எதிரில் விமல் வீரவன்ச நடத்திய உண்ணவிரதப் போராட்டமே மிகவும் பலமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் சரிவின் ஆரம்பமாக அமைந்தது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பை விமல் வீரவன்ச, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளாக எண்ணினார்.

(“வீரவன்சவின் போராட்டமே மகிந்தவின் சரிவின் ஆரம்பம்!” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கொலை முயற்சி! எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாணை!

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினராக கருதப்படும் அன்டனி எமில்காந்தனை கைதுசெய்யும் வகையில் கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. 1998 களுத்துறை பகுதியில் வைத்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கூரிய ஆயுததால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலே அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி எமில்காந்தன் நீதிமன்றத்தில் சரண் அடையத் தயாராக உள்ளதாக எமில்காந்தன் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர். எனவே எமில்காந்தனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும் என அவரின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றிருந்தது.

(“டக்ளஸ் கொலை முயற்சி! எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாணை!” தொடர்ந்து வாசிக்க…)

ராஜீவ் கொலை: 7 பேரின் விடுதலை விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்குத் தீர்மானித்துள்ள தமிழக அரசாங்கம், இது தொடர்பில் மத்திய அரசாங்கத்துக் கடிதமொன்றை எழுதியுள்ளது. தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், 2ஆம் திகதி புதன்கிழமை எழுதிய கடிதத்தையடுத்து, இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது.

(“ராஜீவ் கொலை: 7 பேரின் விடுதலை விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது” தொடர்ந்து வாசிக்க…)

யுத்த பாதிப்புக்குள்ளானவர் தேவைகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்!

யுத்தத்தின் பாதிப்புகளை வடக்கில் அதிகம் எதிர்கொண்டவர்கள் என்ற அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தேவைகள் முதன்மைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 24 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு உடையார்கட்டு தமிழ் கலவன் பாடசாலையை நேற்று (புதன்கிழமை) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

(“யுத்த பாதிப்புக்குள்ளானவர் தேவைகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)