என்னை சுற்றிலும் எங்கும் என் எதிரிகள்……..!!

இந்துத்துவம் என்ற பெயரில் என்னை அழிக்க ஒருத்தன் துடித்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்து, அவனை வீழ்த்தி என் மக்கள் கூட்டத்தை எப்படி காப்பாற்றலாம் என நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே,

காங்கிரசின் ரம்யா ஹரிதாஸ்

(Rathan Chandrasekar)

கடந்த 48 ஆண்டுகளில் கேரளத்தின்
இரண்டாவது தலித் பெண் எம்.பி.

தினக் கூலித் தொழிலாளியின் மகள்.

காங்கிரஸ் கட்சி சார்பில், கேரள மாநிலம்
ஆலத்தூர் மக்களவை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள
ரம்யா ஹரிதாஸ், கடந்த48 ஆண்டுகளில் கேரளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்
2-வது தலித் பெண் எம்.பி. என்ற பெருமையைப் பெறுகிறார்.

எம் சமுகக்கனவுகள் உங்கள் நினைவுகளுடன்.

தோழர ரெட்ணம் (யுவாம் சொய்சா) 1970களின் பிற்பகுதியில் தன்னை சமுக அரசியல் வாழ்வில் ஈடுபடுத்திக்கொண்டவர்.மன்னார் வங்காலையைப் பிப்பிடமாகக் கொண்டவர்.
கால்நடை மருத்துவ உஸ்தியோகத்தரான தோழர் யுவாம் சொய்சா 1980களின் முற்பகுதியிலிருந்து மிகக்குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தகுந்த ஒரு வெகுஜன அரசியல் தளத்தை மன்னார் மாவட்டத்திலுள்ள மீனவக் கிராமங்களிலும் விவசாயப் புறத்திலும் ஏற்படுத்துவதில் உன்னதமான பங்களிப்பை நல்கியிருந்தார். மன்னார் வங்காலையில் ஒரு கல்விப்பாரம்பரியம் உண்டு.பெருமளவு இளம் அரச ஊழியர்களும் மணவர்களும் தோழர் ரெட்ணம் அவர்களால் வசிகரிக்கப்பட்டிருந்தார்கள். மன்னார் அப்போது பதட்டம் நிறைந்த பகுதியாகவும் அரசியல் வேலைகள் செய்வதில் மிகுந்த ஆபத்துக்களை எதிர் நோக்கவேண்டியுமிருந்தது. வங்காலை வண பிதா பஸ்ரியன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
மிகுந்த அபாயகரமான சுழலில் வெகுஜனங்கள் மத்தியில் சமுக பொருளாதார விடுதலைபற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் தோழர் ரெட்ணம் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதேவேளை அரசியல் இராணுவ பயிற்சிகளுக்கென தோழர்களை தயார் செய்து அனுப்புவதிலும் ஈடுபட்டிருந்தார். கால்நடை வைத்திய உத்தியோகஸ்தர் என்றபடியால் அவர் சகல இடங்களுக்கும் சென்று வரக்கூடிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தினார்.
1984ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற கட்சியின் முதலாவது காங்கிரசிலும் பங்குபற்றியிருந்தார். 1980இற்கும் அவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட 1985ஆம் ஆண்டுக்குமிடையே அவர் மன்னார் பிராந்தியத்தில் ஏற்படுத்திய தளம் பிரமாண்டமானது.அவர் தனது வேலைகளுக்கூடாக ஒரு தலைவராக உருவாகிக்கொண்டிருந்தார். தோழர்கள் தங்கிவேலைகள் செய்வதிற்கான தளம் சமுகத்தினுள்ளே உருவாக்கப்பட்டிருந்தது.1980களின் நடுப்பகுதியில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பஸ் ஒன்றின்மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவரது மைத்துணர் ஒருவர் கொல்லப்பட்டார்.
1985அல் கைதுசெய்யப்பட்ட தோழர் ரெட்ணம் கடுமையான சித்திரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது.
கென்பாம், டொலர் பாம் பகுதியில் வசித்த சிங்களவர்கள் மீது புலிகள் நடாத்திய தாக்குதலை அடுத்து வவுனியா யோசப் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தோழர் ரெட்ணம் உட்பட பல அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.இன்றும் தோழர் ரட்ணம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் பலர் அவர் மேற்கொண்டிருந்த அரசியல் பணிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.தோழர் ரெட்ணம் (யுவாம் சொய்சா) அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள்.

வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’

(கே. சஞ்சயன்)
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று.

அல்லாஹ் அக்பர்….வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 2

( யஹியா வாஸித் )

1983 க்கு முதல் எங்கள் கதையே வேற டைப், ஒரு குட்டி கட அல்லது மூன்டேக்கர் வயல்காணி,
நாலு மாடு, பத்து ஆடு,ஒரு மீன்பிடி வல, ஒரு தோணி, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு
பதினாலடி பைபர் கிளாஸ் போட்டு. கொஞ்சம் டீச்சர்ஸ். இது கிழக்கில்.

இந்தோனேசியா முதல் இலங்கை வரை: அதிமனிதர்களுக்கான ஆவல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தேர்தல்கள் எப்போதும் சுவை நிறைந்தவை. அவற்றின் முடிவுகள் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் ஆச்சரியத்தையும் விட அதைச் சுற்றி நடக்கும் விடயங்களே கவனத்தை வேண்டுவன. ஆனால் தேர்தல்கள் என்பவை வெற்றி தோல்விகளுடன் முடிந்து போகின்றன. ஆனால் அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், கதையாடல்களும் உருவாகும் உரையாடற் கோலங்களுமோ அச்சமூகங்களை ஆள்கின்றன. ஆனால் இவை கவனம் பெறுவதில்லை. மாறாக இவை அவற்றுக்கேயுரிய நுண்ணரசியலைத் திறம்படச் செய்கின்றன. சமூகத்தில் ஆழமாக ஊடுருவி அவை ஏற்படுத்தும் கருத்துருவாக்கங்கள் என்றென்றைக்குமானவை. இவை பேசப்படுவதில்லை. இவை பேசப்படாமல் போவதற்கான முக்கிய காரணம் தேர்தல்கள் என்பவை ஜனநாயகத்தின் குறிகாட்டியாக மட்டுமே நோக்கப்படுகின்றன. இதன் ஆபத்துக்களின் ஆழம் எமக்குப் புரிவதில்லை.

இந்திய தேர்தல் முடிவுகள் உணர்வலைகள்

(Rathan Chandrasekar)
இழவு வீட்டில்கூட
‘ஆழ்ந்த இரங்கலை ‘விட
ஆறுதல் வார்த்தைகளே
அவசியத்தேவை.

நல்ல வெய்யில்.
பொவொண்ட்டோ தந்த

அல்லாஹ் அக்பர் -வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 1

(யஹியா வாஸித்)
நாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் 
பட்டிருக்கின்றோம்,ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மிக  ஜாக்கிரதையாக முடமாக்கப் பட்டிருக்கின்றோம்.
ஊமையாக்கப் பட்டிருக்கின்றோம், குருடர்களாக்கப் பட்டிருக்கின்றோம், செவிடர்களாக்கப் பட்டிருக்கின்றோம். ஆம்,ஏப்ரல் 2 1 – 2 0 1 9 ஆம் திகதி முதல் நாங்கள் இந்த நாட்டுக்கு வேண்டாதவர்களாகி விட்டோம்.   
எங்களுடன் பேசுவது தீட்டு என சொல்லப்பட்டிருக்கின்றது, நெ(ந)ஞ்சான் கட்டைகளால் நாங்கள் வீழ்த்தப் பட்டிருக்கின்றோம்.

ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்!


-ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம்-

எனது வாழ்வின் கடைசிப் பத்தாம் வருடத்திலோ அல்லது கடைசிப் பத்தாம் வினாடிகளிலோ நிற்கிறேன். கடந்த பல வருடங்களாக இடையிடை மின்னிய நோய்களும் எப்போதும் எரிந்து கொண்டிருந்த மனோவியாதிகளும் இன்று வெப்பமும் பெரும் வெளிச்சமுமாய்க் கப்றுக்குத் தெளிவான வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த மாயமும் பாவமும் சூழ்ந்த உலகைவிட்டும் மறைந்து மண்ணறைக்குள் உயிர்த்தெழலென்பது சத்தியமெனினும் அங்கான நமது சொர்க்க வாழ்க்கை சாத்தியமா என்பது ஏக இறைவனுக்கு மட்டுமே தெரியும். சரி… இந்தச் சுயபச்சாதாப புலம்பல்களுக்குத் தற்காலிகத் தடைவிதித்துவிட்டு விடயத்துக்கு வருகிறேன்.

ஒரு தூரநோக்கு இல்லாத எமது நாட்டின் அரசியல் நிலைமை

இன்றைய இலங்கையைப் பொருத்தவரையில், மக்களுடைய அரசியல் அறிவு பொதுவாக மிகக் குறைந்த மட்டத்திலேயே நிலவி வருகின்றது. சாதாரண மக்கள் ஒரு புறமிருக்க, படித்த பிரிவினருக்கு மத்தியிலும் கூட இதே நிலைமையே காணப்படுகின்றது. இதன் விளைவாக முதன்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் அற்பமான பிரச்சினைகளைச் சூழ சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.