ஏமாற்றத்தை எதிர்பார்த்தல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது.

(“ஏமாற்றத்தை எதிர்பார்த்தல்” தொடர்ந்து வாசிக்க…)

மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்

85 வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார். வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார். மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் “துரோகத்தால்” சின்னாபின்னமாகியது என்று தெரிவித்திருக்கிறார்.

(“மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்” தொடர்ந்து வாசிக்க…)

வடகிழக்கு மாநிலங்கள் – அனைவருக்கும் வளமளிக்கும் திரிபுரா

(வீ.பா.கணேசன்)
இந்திய வரைபடத்தில் கிழக்கு மூலையில் ஒரு சிறிய மாநிலமான திரிபுரா இந்தியாவின் மூன்று சிறிய மாநிலங்களில் ஒன்று. இந்திய விடுதலைக்கு முன்புவரை வடகிழக்குப் பகுதியில் இருந்த இரண்டு சமஸ்தான அரசவைகளில் ஒன்றாக அது இருந்தது. மாணிக்யா என்ற அரச பரம்பரை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியை ஆட்சி செய்தது. ஒரு காலத்தில் வங்காளத்தின் சுந்தரவனக் காடுகள், இன்றைய மியான்மரின் சிட்டகாங் காட்டுப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்த இந்த நாடு காலப்போக்கில் சுருங்கிப் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கப்பம் செலுத்தும் பகுதியாக மாறியது.

(“வடகிழக்கு மாநிலங்கள் – அனைவருக்கும் வளமளிக்கும் திரிபுரா” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்றில் கரிய நாள் டிசம்பர் 13

இலங்கையின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது அந்தக் காடு. சூரிய ஒளியை கூட உள்ளே அனுமதிக்காது அடர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்ட காடு அது. காட்டுப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மட்டும் சுதந்திரமாக உலா வர அனுமதி தந்திருந்த காடு அது. அந்தக் காட்டை ஊடறுத்து பாய்கின்றது ஒரு நீண்ட நெடிய ஆறு.
இந்த ஆற்றை சுற்றி சில முகாம்கள். தொலைத் தொடர்பு நிலையம், ஆயுதக் களஞ்சியம், பயிற்சி முகாம், மருத்துவ முகாம், இவற்றின் நடுவே பிரதான முகாம். இந்த முகாம்களை சுற்றி பல பாதுகாப்பு காவல் அரண்கள் மண் மூட்டைகளால் அமைக்கப்பட்டிருந்தது. மண் மூட் டைகளின் மேல் வளர்ந்த மரங்கள் காவல் அரண்களுக்கு காவலாக நின்றது.

(“வரலாற்றில் கரிய நாள் டிசம்பர் 13” தொடர்ந்து வாசிக்க…)

வங்கியில் இருந்து எமது பணத்தை நாம் எடுப்பதற்கு காசு கொடுக்க வேண்டும்!

நாங்கள் நூறு ரூபாயை இன்னொருவருக்கு பரிவர்த்தனை செய்யும் பொழுது அதன் மதிப்பு குறையாமல் நூறு ரூபாயாகவே இருக்கும். ஆனால், “கேஷ் லெஸ் பொருளாதாரம்” எனப்படும், வங்கி அட்டைகளின் மூலம் நடக்கும் பரிவர்த்தனையில் எமக்கு சிறியளவில் பண இழப்பு ஏற்படும். பணப் பரிவர்த்தனை முழுவதும் வங்கிகள் ஊடாக நடக்குமானால் அதற்கான சேவைக் கட்டணமும் அறவிடப் படும். ஏனென்றால் வங்கி ஒரு தர்ம ஸ்தாபனம் அல்ல. பணத்தை வைத்து தொழில் நடத்தும் ஒரு வர்த்தக ஸ்தாபனம். இதனால் நாம் எல்லோரும், எமது வருமானத்தில் ஒரு குறிப்பிட்டளவு பகுதி வங்கிகளுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

(“வங்கியில் இருந்து எமது பணத்தை நாம் எடுப்பதற்கு காசு கொடுக்க வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

இந்த அழிவுகளுக்கும் முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்கும் தொடர்பிருக்கின்றது

(சிறீதரன் திருநாவுக்கரசு)

இந்த இருண்ட நாட்களில் தான் ஈபிஆர்எல்எப் பின் தோழர்கள் ஆண்களும் பெண்களுமாக கூட்டம் கூட்டமாக உடல் மீதியின்றி அழிக்கப்பட்டார்கள். பலர் வதைமுகம்களில் கொல்லப்பட்டார்கள். பேரினவாத பாசிசத்தால் அல்ல. யாழ்மையவாத தமிழ் பாசிசத்தால்.
கடந்த 30 வருடங்களில் இத்தகைய படுகொலைகளில் காணமல் போக்கடிக்கபட்டவர்கள் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் மனித உரிமை பேசும் மாய்மாலக்காரர்கள் பலர் இது பற்றி மூச்சுவிடுவதில்லை. இதனை கள்ள மௌனத்துடன் கடந்து போகிறார்கள். தமிழ் சமூகத்திற்கு மனித உரிமை ஜனநாயகம் பற்றி பேசுவதற்கான யோக்கியம் பற்றிய கேள்வி எழுகிறது.

(“இந்த அழிவுகளுக்கும் முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்கும் தொடர்பிருக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 85 )

யாழ்பாணத்தில் சைவ பரிபாலன சபையும் நாவலர் சம்பந்தமான ஒரு அமைப்பும் நாவலர் தொடர்பாக ஒரு புத்தக வெளியீடு ஒன்றை செய்யவிருந்தது.அந்த விழாவின் பிரதம விருந்தினராகவும் புத்தக வெளியீட்டாளராகவும் அரச அதிபர் பஞ்சலிங்கம் அழைக்கப்பட்டு இருந்தார்.

 

இந்த புத்தகம் சில சமூக ஆர்வலர்கள் கண்களில் சிக்கியது.அதில் சாதிகளைப் பற்றியும் பல அவதூற்ற பதிவுகள் இருந்தன.அக் காலகட்டத்தில் சகலமைப்புகளும் புலிகளால் தடை செய்யப்பட்டிருந்தனர் .இதன் காரணமாக இந்தப் புத்தகம் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் பலர் பேசப் பயந்தனர்.

பற்குணம் இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளதால் அவர்கள் பற்குணத்துடன் இது சம்பந்தமாக கலந்துரையாடினர்.பற்குணம் அந்த புத்தகம் ஒன்றைப் பெற்று படித்தார்.அவர் எதுவும் பேசவில்லை.விழா ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுவிட்டது.இறுதி நாளுக்கு முன்பாக பற்குணம் பஞ்சலிங்கத்தை சந்தித்தார்.

சேர்,நீங்கள் இந்தப் புத்தக விழாவில் பங்கேற்க இருப்பதாக அறிந்தேன்.உண்மையா என கொஞ்சம் இறுக்கமாகவே கேட்டார்.அதற்கு அவர் ஆம் என பதில் தந்தார்.இந்த வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்துகொண்டால் நாளை காலை கச்சேரி வாசலில் இப் புத்தகங்கள் யாவும் கொழுத்தப்படும் என எச்சரித்தார் .

நிலைமை விபரீதமாகப் போவதை உணர்ந்த பஞ்சலிங்கம் எனக்கு இந்த புத்தகம் பற்றிய விபரங்கள் தெரியாது.என்னையும் அழைத்தார்கள் மரியாதை கருதி நான் சம்மதித்தேன்.ஏதாவது சிக்கல் என்றால் நான் விலகிக் கொள்கிறேன் என்றார்.அதற்கு பற்குணம் விலகுவது மட்டுமல்ல இந்த புத்தகம் வெளியே வரக்கூடாது.வந்தால் அதன் விளைவு பாரதூரமாக இருக்கும் என எச்சரித்தார் .

அந்த புத்தக வெளியீடு நிறுத்தப்பட்டது.இது தொடர்பாக சிலர் புலிகளிட்ம் முறையிட்டனர்.புலிகளும் பற்குணத்தை விசாரிக்க வந்தனர்.பற்குணம் அந்தப் புத்தகத்தைப் படித்தீர்களா .படிக்காவிட்டால் படித்துவிட்டு வந்து கேள்வி கேட்குமாறு கூறினார்.வந்தவர்களில் ஒருவர் பரமு மூர்த்தி.மற்றவர் யோகி.

மூர்த்தி பற்குணம் தொடர்பாக சமூகம் என்ற ரீதியில் அக்கறை உள்ளவர்.அவருக்கு பற்குணத்தின் கேள்வியில் சந்தேகம் ஏற்பட கதையை வேறு விசயத்துக்கு திருப்பிவிட்டார்.அவர்கள் அப்படியே திரும்பிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து அந்தப் புத்தகம் புலிகளின் கவனத்துக்கும் போனது.அதில் மீனவ சமூகம் தொடர்பான தரக்குறைவான பதிவுகளும் இருந்ததால் அது தடைசெய்யப்பட்டது.

————————————————————————————
பற்குணம் யாழ்பாணத்தில் பொறுப்பேற்றபின் வாகனம் இருக்கவில்லை.எனவே தன் தேவைகளுக்காக ஒரு வெஸ்பா ஸ்கூட்டர் வாங்க தீர்மானித்தார்.அதன்படி ஒருவர் கொடுத்த தகவலின்படி ஓட்டுமடம் பகுதியில் ஒரு ஸ்கூட்டரை பார்வையிட்டார்.பிடித்துவிட்டது.விலையக் கேட்டார்.அவர் 20 ஆயிரம் ரூபா என்றார்.பற்குணம் ஒருபோதும் இந்த மாதிரியான பேர விவகாரங்களில் ஈடுபடுவதில்லை .அவரிடம் அவ்வளவு பணம் இல்லாததால் வேண்டாம் எனசொல்லி திரும்பி வந்துவிட்டார்.

இதை அந்த வீட்டின் அயலவர் வீட்டுக்கு வந்த பற்குணத்தின் கீழே வேலை செய்யும் ஊழியர் கண்டுவிட்டார்.அவர் பற்குணம் போனபின் அந்த ஸ்கூட்டர் உரிமையாளரிடம் வினாவினார்,அவரும் விசயத்தை கூற அவருக்கு பற்குணத்தின் நிலை விளங்கிவிட்டது.அவரோ அந்த ஸ்கூட்டரை வாங்கி பற்குணத்தின் பெயரில் பதிவு செய்து பற்குணத்தின் அலுவலகத்தில் கொண்டுவந்து ஒப்படைத்தார்.பற்குணம் மறுத்துவிட்டார்.வேறு சிலரும் பிடிவாதமாக வாதிடவே பற்குணம் அதைப் பெற்றுக் கொண்டார்.

மறுநாள் தன் மைத்துனரான மாணிக்கம் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபா கடனாக வாங்கி அந்த ஊழியரிடம் கொடுத்தார்.அதைக் கொடுத்துவிட்டு இனிமேல்தான் நீங்கள் என்னிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நீங்கள் பண்ணிய இந்த உதவியை காரணமாக்கி நீங்கள் தவறுவிட்டால் நான் மன்னிப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 1)

(உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ஒரு தொடர் மிக நீண்ட காலமாக தமிழ் மக்கள் மத்தியில் சமூக தொண்டாட்டி வரும் ஒருவர் தனது அனுபவங்களைத் தொடராக எழுதுகின்றார் சரியானவை நிறுவுவதற்கான ஒரு முயற்சி இது)

(அக்கினி ஞானாஸ்ஞானம் )
“எங்களுக்குத் தெரியும் சனத்துக்கு என்ன தேவையெண்டு. நீங்கள் சனத்தோட கதைக்கத்தேவையில்லை. அதுகளோட கதைச்சிட்டு, வெள்ளைக்காரனுக்கு தேவையில்லாததைச் சொல்லி எல்லாத்தையும் குழப்பிப் போடுவியள், அதாலதான் சொல்லுறம், நாங்கள் சொல்லுறதை நீங்கள் செய்யுங்கோ.”

முக்கால் மணித்தியாலமாக TRO ரவி தனக்கேயுரிய உரத்த குரலில் எங்களை நோக்கி ‘அன்புடன்’ வேண்டிக்கொண்டிருந்தார்.
அவரது உதவியாளர் ரெஜி மௌனமாக எங்களை ஒருவிதமாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.

(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 1)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 84 )

பற்குணத்தை கீழ்மட்ட இராணுவத்தினர் குறி வைத்திருப்பது தெரிந்திருந்தும் அது பற்றி கவலைப் படாதவராக இராணுவ முகாம்களூடாக தன் நிர்வாகத்திலுள்ள உணவுக் களஞ்சியங்களுக்கு போய் வந்தார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 84 )” தொடர்ந்து வாசிக்க…)

எனக்கு ஒன்று தெரிஞ்சாகணும்….?

*20 செப்டெம்பரில் சசிகலாவுக்கு அம்மாவுடன் சொத்து பங்கீடு தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு ஏதோவிதமாக அம்மா நிலத்தில் வீழ்ந்துள்ளார். எழும்ப முடியாத அம்மாவுக்கு கை கொடுக்காத சசி, அம்மாவின் நிலை கண்டு குளறிய “இளவரசி”யை திட்டி தீர்த்துள்ளார். பின்னர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் கட்டிலில் வளர்த்தப் பட்டுள்ளார்.

(“எனக்கு ஒன்று தெரிஞ்சாகணும்….?” தொடர்ந்து வாசிக்க…)