மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு த.தே.கூ எதிர்ப்பு

அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “நடுநிலை”வகிப்பதென்பது, அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் எனவும், த.தே.கூ தெரிவித்துள்ளது.

(“மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு த.தே.கூ எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தெளிவாகத் தெரியும் வடக்கு கிழக்கின் தலைமைத்துவ வெற்றிடம்

(கருணாகரன்)
தமிழர்களுடைய ஒட்டுமொத்தக் கவனமும் இன்று கொழும்பு அரசியலிலேயே குவிந்திருக்கிறது. இதுவரையிலும் படுதீவிரமாக இருந்த வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணம், தமிழீழம், சமஸ்டி, சுயாட்சி போன்றவற்றைப் பற்றிய கதையாடல்களையே காணவில்லை. விக்கினேஸ்வரன், அனந்தி, இவர்கள் பரபரப்பாக ஆரம்பித்த புதிய கட்சிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, சுரேஸ் பிரேமச்சந்திரனின் நிலைப்பாடுகள் பற்றியெல்லாம் கதைப்பாரே இல்லை. இந்தத் தரப்புகளின் அரசியல் பற்றிய பேச்சுகளும் ஒடுங்கி விட்டன.

(“தெளிவாகத் தெரியும் வடக்கு கிழக்கின் தலைமைத்துவ வெற்றிடம்” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடு

இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடு படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன. (“இரணைமடு” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)

அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் விரும்பியவாறு சில வேளைகளில் ஜனாதிபதி அதிகாரங்களைக் கூட உபயோகப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு நான் அதிகாரத்தைக் கொடுத்திருந்தேன். இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? கடந்த மூன்று வருட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாக மிக மோசமான அவல நிலையே ஏற்பட்டிருக்கின்றது. எனது உரை இன்னும் நீடிக்கும் என்பதால் காலத்தை நான் வீண்விரயம் செய்ய விரும்பவில்லை. ஆயினும் எதிர்வரும் காலங்களில் அவ்வப்போது அந்த விடயங்களைப்பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் என நான் எண்ணியிருக்கின்றேன். இந்த சம்பவங்களின் பின்னணியில் இரண்டு நாட்களுக்கு முன் நான் எடுத்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்குமான முடிவை நான் எடுப்பதற்கு மிக முக்கியமான காரணத்தை மிகுந்த மதிப்புடன் நான் உங்களுக்கு விளக்கிக் கூற விரும்புகின்றேன்.

(“நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 1)

என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது மாத்திரமே ஆகும். இந்த புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மதிப்பிற்குரிய 225 அங்கத்தவர்களுக்கும் வெளிப்படையாக நான் அழைப்பு விடுக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

(“நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 1)” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு?

ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.   “அவர் இப்படி ஏமாற்றுவார் என்று, நாங்கள் நினைக்கவில்லை. கழுத்தறுத்து விட்டுப் போய்விட்டார்” என்று புலம்புகின்ற நிலை, அரசியல் கட்சிகளிடத்தில் மாத்திரமன்றி, அவருக்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலானோருக்கும் இருக்கிறது.

(“இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலை ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம், பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அரசியல் குழப்ப நிலை அல்லது அரசியல் நெருக்கடி இருப்பதை அநேகர் உணர்ந்தாலும் ஏற்றுக் கொண்டாலும், அதைத் தாண்டிய பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும், பலரிடத்தில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே, இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக, கடந்த சில நாள்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக, இப்பகுதி ஆராய்கிறது.

(“அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 14)

(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தின் வடபுறத்தே தென்னவன்மரபுஅடி ஊர் உள்ளது. திருக்கோணமலை மாவட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்து வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்கின்ற ஊர் தென்னவன்மரபுஅடி ஆகும். 1824 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் கணக்கெடுப்பில் தமிழ் ஊர் எனப் பதியப்பட்ட ஊராகும்.முழுமையாக தமிழ் மக்கள் வசித்த ஊர்.
1984 ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் அதிகாலை வேளையில் நாய்கள் குரைக்கும் சத்தம் ஊரைச்சுற்றிவரக் கேட்டுக்கொண்டிருந்தது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் இரவு புல்மோட்டை நகரத்தில் இருக்கின்ற கடைகள் சிலவற்றில் நுகர்ச்சிப்பொருட்களை விடுதலைப்புலிகள் கொள்வனவு செய்து சென்றிருந்தார்கள். இக்கொள்வனவிற்கு தென்னவன் மரபுஅடியில் வசித்த சில தமிழ் இளைஞர்களும் புல்மோட்டையில் வசித்த சில முஸ்லிம் இளைஞர்களும் உதவினார்கள். பலத்த அச்சம் நிலவிய நாள் அது.
1984 டிசம்பர் ஓராம் நாள் கொக்கிளாய் ஊர் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டு 11 சிங்கள ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.(அதில் சில பொது மக்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது)
1984 நம்பர் 11 ஆம் நாள் டொலர்பாம் என்ற சிங்களக் குடியேற்ற ஊரிலிருந்து 33 சிங்களப் பொதுமக்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 14)” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமரை பதவி விலக்க முடியுமா?

சட்ட ஆய்வாளரான சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை அந்த பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தெளிவாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று பதவி விலகுவதன் மூலம் , அல்லது எழுத்து மூலம் அறிவித்தல் இல்லையென்றால் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைவதன் மூலம் அவரை பதவியிலிருந்து நீக்கலாம். ஆனபோதும் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுவராக இருந்தால் அவரை அந்த பதவியிலிருந்து எப்படி நீக்குவது என அரசியலமைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

(“பிரதமரை பதவி விலக்க முடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)