ரஷ்யாவில் புரட்சி

ரஷ்யாவில் புரட்சி பாதுகாக்கப்பட்டவுடன்,
ஆரம்ப கொள்கைத் தவறுகளுக்குப் பின்னர்,
புதிய பொருளாதாரக் கொள்கையால் வழிநடத்தப்பட்ட
கலப்புப் பொருளாதாரத்தை நிர்மாணிக்கும் பணியில்
சோவியத் யூனியன் முனைந்தது. 
குறிப்பாகச் சிறு நிலவுடைமை மற்றும் அந்நிய முதலீடு ஆகிய தனிச்சொத்து உள்ளிட்ட பலதரப்பட்ட சொத்துடைமை வடிவங்களை அது சட்டபூர்வமாக்கியது.சோஷலிசக் கட்டுமானம் என்பது நீண்ட நெடிய பணி.  சோஷலிஸ்ட் புரட்சிக்குப் பின்னரும்கூட

எல்லாவிதமான தடைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட வர்க்க சமுதாயம், வரக்கூடிய பல்லாண்டுகளுக்கு
சோஷலிச நிர்மாணத்தின் ஓர் அம்சமாக இருந்துவரும்
என்பதை அந்தக் கொள்கை அங்கீகரித்தது.

லெனின் வாழ்ந்திருந்தால்,
வரலாறு ஒருவேளை வேறுமாதிரியாக
அமைந்திருக்கக்கூடும். ஆனால்,
அவர் 1924-ல் அகால மரணம் அடைந்தார்…

ஸ்டாலின் தலைமைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்ப்பந்தப்படுத்தி விளைநிலங்களின்மீதான
உரிமை பறிக்கப்படுதல், கூட்டுப்பண்ணை முறையைத் திணித்தல், மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுதல், தொழில்கள்
கிட்டத்தட்ட முழுவதுமாக அரசுமயமாக்கப்படுதல்
ஆகியவற்றுக்குச் சாதகமாக புதிய பொருளாதாரக் கொள்கை
ரத்து செய்யப்பட்டது.

ஜெர்மனியில் பாசிச அபாயம்
தலைதூக்கிக் கொண்டிருந்த நிலையில்,
உலகின் முதல் சோஷலிஸ்ட்பாணி குடியரசை
நிர்மூலமாக்குவதை அதன் ராணுவ எந்திரம்
முழுமுதல் நோக்கமாகக் கொண்டிருந்த நிலையில், முடுக்கிவிடப்பட்ட வளர்ச்சியில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டது.

இந்த நிர்ப்பந்திக்கப்பட்ட பயணம்,
ஸ்டாலினது தலைமையின்கீழ்,
சிலவேளை மெய்யான,
பல சமயங்களில் கற்பனை செய்துகொள்ளப்பட்ட
அந்நிய மற்றும் உள்நாட்டு எதிரிகளைப்பற்றிய
அச்சத்துடன் பிணைக்கப்பட்டது.

அரசியல் கருத்துவேறுபாடுகள்,
அரசியல் அச்சுறுத்தல்களாகக் கருதப்பட்டன…

‘ஒரேமாதிரியாக இருத்தல்’ எனும் கலாசாரம் மேலோங்கி நின்றது.

கம்யூனிஸ்ட் கட்சிதான்
ஆட்சி நிர்வாகம் செய்கிற ஒரே அமைப்பு
என்பதை அரசியல் சாசனத்தில் பொறிக்கச்செய்கிற நிலைக்கும், ஸ்டாலினைச்சுற்றி
தனிநபர் வழிபாடு உருவாவதற்கும்
எதேச்சாதிகாரம் இட்டுச் சென்றது.

ஜான் பாக்டெல் ( John Bachtell )
தேசியத் தலைவர்
அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி

PEOPLE’S WORLD
( ORGAN OF COMMUNIST PARTY OF USA )
NOVEMBER 8 / 2017

தமிழில் / எஸ்.துரைராஜ்
‘சஞ்சிகை’