மனிதம் மரணித்த சிரிய யுத்தம்

(சாகரன்)
 
இடதுசாரி அரசை நிறுவிய ஆப்கானிஸ்தானை இல்லாமல் செய்தல்… மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஈரான் நாட்டில் ஆட்சியை அகற்றல்…. வாழ்கைத் தரதில் உயர்ந்து நின்ற ஈராக் லிபியா இன் இருப்பை கேள்விக் குறியாக்கல்…. இவற்றிற்கும் மேலாக மத்தியதரை கடற்பகுதியில் இருக்கும் (எண்ணை)வழங்களை சுரண்டுதல் இவற்றிற்காக தமக்கு சாதகமான பொம்மை அரசுகளை அங்கு உருவாக்குதல் என்பதற்கு மேற்குலகம் கையாண்ட வழி முறை இஸ்லாமிய மதத்தை முன்னிறுத்தி செயற்படும் தீவிரிவாத்தை உருவாக்குதல் என்பது முகைதீன் என்று ஆரம்பி ஐஎஸ் வரை உருவாக்கட்ட அமைப்புவரை நீண்டு இன்று சிரியாவில் உச்சமாக மையம் கொண்டு யுத்தத்தின் விளைவுகளை நாம் இன்று காண்கின்றோம்.

ஈரானின் இருப்பை கேள்விக் குறியாக்குதல் இதனுடன் இணைந்து இஸ்ரேலின் இருப்பை உறுதிப்படுத்தல் சோவியத்தை உடைத்து ரஷ்யாவாக குறுக்கி ஏகபோகமாக செயற்பட்டுக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் எழுச்சி இடைஞ்சலாக இருக்க அதனையும் வெட்டித்தறிக்க முதலில் ஈரான் போன்ற நாடுகளை இல்லாமல் செய்தல் என்பது தேவையாக இருந்தது. வெளியில் இருந்து தரை வழியே சென்று தாக்குதல் என்பதில் சோமாலியா ஆப்கானிஸ்தானில் நேட்டோ நாடுகளுக்கும் அதன் தலமை நாடு அமெரிக்காவறி;கும் கிடைத்த கசப்பான அனுபவங்கள் தாம் நேரடியாக தரையில் இறங்காமல் இஸ்லாத்திற்குள் இருக்கும் சுனி ஷியா குர்தீஸ் பிரிவுகளுக்கிடையே அவர்கள் நம்பும் ‘மார்க்கம்’ இற்கு அப்பால் பிளவுகளை ஊக்குவித்து குண்டுகளை வெடிக்க வைக்கும் அளவிற்கு யுத்தத்தை உருவாக்கிய பெருமை இந்த மேற்குலகத்திற்கே சாரும்.

 
மனிதாபாபிமானம் என்பது அகதிகளை ஏற்றல் என்பதற்கு அப்பால் இந்த அகதிகளுக்கு காரணமான யுத்தத்தை நிறுத்தல் என்பதை ‘வசதியாக’ மறந்துவிட்டு கனடா போன்ற நாடுகளின் ‘மௌனம்’ உம் ஐ.நா சபையின் அ.நா சபை போன்ற செயற்பாடுகளும் ஏனைய பலவீனமான நிலையில் இருக்கும் மூன்றாம் உலக நாடுகள் தமக்கு கிடைக்க வேண்டிய ‘பிச்சை’ களுக்காக மனச்சாட்சியை விற்று சார்பு நிலை எடுத்து மனித உரிமை சபைகளில் கை உயர்த்தல்களும் இந்த யுத்தங்களை நிறுத்த உதவப் போவது இல்லை.
 
கூடவே தமது வியாபாரத்திற்கான தளமாக அது யுத்தம் நடைபெறும் போது ஆயுத விற்பனை என்றும் யுத்தம் முடிந்த பின்பு புனர் நிர்மாணம் என்றவகையில் பணம் ஈட்டும் செயற்பாடுகளின் அடிப்படையில் நடைபெறும் முதலாளித்து சிந்தனையில் யுத்தங்கள் நிறுத்த முடியாதவை ஆகவே நீண்டு செல்லும். இது ட்றம் இல்லாமல் ஒபமா இருந்திருந்தாலும் இதுவே தொடர்ந்திருக்கும்.
 
இரு வருடங்களுக்குள் ஒதுங்கி நின்ற ரஷ்யா ‘விஸ்வரூபம’ எடுத்து சிரியாவில் ஓங்கி நின்ற அமெரிக்க சார்பு குழுக்களையும் ஐ.எஸ் யும் துவசம் செய்து சோவியத் யூனியனின் வீழ்சிக்கு பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவை தவிர்த்து முத்தரப்பு பேச்சுவார்தையை சிரியாவில் நடாத்திய போது விழித்துக்கொண்ட அமெரிக்காவின் ருத்திரடாண்டவத்தின் வெளிப்பாடே தற்போதும் எரிந்து கொண்டிருக்கும் யுத்தம். மேற்குல ஊடகங்களின் முள்ளிவாய்காலை மறைத்து இன்று சிரியாவின் யுத்தத்தை மட்டும் காட்டி சவூதியின் கெட்ட ஆட்டத்தில் யேமனில் நடைபெறும் தினசரி அழிவுகளை மறைக்கும் செயற்பாடுகள் ஆகும்.
எனவே புகைப்பட எடுப்பவரின் கமராவை கண்டு கை உயர்த்தும் குழந்தையும் சிறு குழந்தையை நோக்கிய பல் குழல் துப்பாக்கிகளும் உயர்ந்து கொண்டுதான் இனிமேலும் இருக்கப் போகின்றது.
 
இடிபாடுகளுக்குள் அகப்பட்டு புகைப்படக் கருவிகளுக்குள் அகப்படாத நசுங்கல்கள் எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைப்பதை தவிர வேறு என்ற செய்ய முடியும். மனிதம் செத்துதான் விட்டது இந்த யுத்தம் செய்யும் உலகில். மனிதம் உயிர்த்தால் நான் மீண்டும் எழுந்து வருவேன் என்று கோஷம் போட முடியவில்லை ஏன் எனில் அந்த யுத்தம் என்னையும் ஏன் உங்களையும் அன்று கொன்று போட்டிருக்கும்.
(A Picture Of A 4-Year-Old Syrian Boy “Surrendering” To A Photojournalist Has Gone Viral – BuzzFeed News)