ஹட்டனில் எதிர்ப்பு போராட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று,  ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக  இளைஞர், யுவதிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிரடி முடிவை எடுத்த இலங்கை ​தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை ​தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அதிரடியான தீர்மானமொன்றை எடுத்துள்ளார். நீண்டநேர கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு கூட்டுத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

‘அரசாங்கம் பதவி விலக ஒரு வாரம் அவகாசம்’

தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இல்லாவிட்டால் அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இடைக்கால அரசாங்கத்துக்கு தயார்: ​ஜனாதிபதி

இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு இணக்கம் என்றும், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பேன். அத்துடன் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ​மஹாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளார். மேற்குறித்த விவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என அஸ்கிரிய மாநாயக்க தேரரின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

ஆதரவு கரம் நீட்டினார் – JVP அனுர

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ​தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்தியா – இலங்கை கடல்வழி மின்பாதை திட்டத்தை கைவிடுக

இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக் கூடாது, எனவே கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை – மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “நானே பிரதமர்“ என மீண்டும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். “தான் பிரதமர் இல்லாத, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்கவும் முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசாங்கத்துடன் பேசவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

துயிலும் இல்லம் முன்பாக இருந்து ராஜபக்‌ஷர்களுக்கு எதிர்ப்பு வெடித்தது

ராஜபக்‌ஷர்களை எதிர்த்து வடக்கிலும் இன்று (23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான கண்டன பேரணிக்கு முச்சக்கரவண்களின் சாரதிகளும் முச்சக்கரவண்டிகளுடன் தங்களுடைய ஆதரவை நல்கினர்.

குறைந்த விலையில் உணவகங்கள்: புதிய திட்டம்

நாடளாவிய ரீதியில் குறைந்த கட்டணங்களைக் கொண்ட உணவகங்களை திறப்பதற்கான யோசனை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.