“புதுன் அப்பாச்சி போங்க இப்போதைக்கு போதும்”

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அநுராதபுரத்தில் உள்ள விஹாரைகள் பலவற்றுக்கு நேற்று (08) சென்றிருந்தார். அங்கெல்லாம், பிரதமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வழிபட சென்ற பிரதமருக்கு கடும் எதிர்ப்பு : ஹூ கோஷம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார். திங்கட்கிழமை (9) முக்கிய அறிவிப்பொன்றை விடுவார் உள்ளிட்ட செய்திகள் கடந்த சில நாட்களாக பரவின.

கோட்டா இங்குதான் பிழை விட்டார்: நாமல்

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  பி.பி.சியிக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  போதிய வருமானமின்றி வரிச்சலுகை வழங்கும் அரசின் முடிவு சரியல்ல என்றும் அவர் கூறினார்.

நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாட்டின் தற்போதைய நெருக்கடி மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நாளை (09) அவசரக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை (09) காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பி​ரேரணை உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்படும் என அறியமுடிகின்றது.

இந்தியா முற்றாக மறுத்தது

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடனுதவி திட்டங்களின்கீழ் இலங்கை அரசாங்கத்தால் நீர்த்தாரை வாகனம்   ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பாக நாம் அறிந்துள்ளோம். இவ்வாறான செய்தி அறிக்கைகளில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லையென இலங்கையிலுள்ள இந்திய இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜினாமா கடிதத்தில் மஹிந்த கையொப்பம்

இராஜினாமா கடிதத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பம் இட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  அது தொடர்பில் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை அடுத்தே இராஜினாமா செய்யும் தீர்மானத்தை பிரதம‌ர்  எடுத்துள்ளதாக  அறிய முடிகிறது.

பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு

கடுவெல நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

’ஆட்சி மாற்ற சதி’: ஜோ பைடனுக்கு இம்ரான் சவால்

முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவருமான இம்ரான் கான், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் அசாங்கத்துக்கு சவால் விடுத்தார்.  

கொரோனா மரணங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்டது? 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழப்பு என WHO அறிக்கை

இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்ற அதிர்ச்சிகர தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

ரஷ்யாவின் அறிவிப்பால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் முரண்பாடு

ரஷ்யாவின் எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதியை முடிவுக்கு கொண்டுவருவதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்படவில்லை என ஜேர்மனி தெரிவித்துள்ளது.