கனடாவின் கருத்துக்கு இலங்கை ஆட்சேபனை

தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் சில விடயங்களை வெளிநாட்டு அமைச்சு திருத்தி வெளியிட்டுள்ளது.

’மைத்திரியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் அதிரடி பதில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்க் கட்சிகள் சில இணைந்து, கடிதமொன்றை தயாரித்தது. அந்தக் கடிதம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் நேற்று (18) கையளிக்கப்பட்டது.

500 மில். டொலர் கடன் வழங்கியது இந்தியா

பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

பிரித்தானியாவின் பிரதமர் பதவியை இழக்கும் போரிஸ்?

விருந்தொன்றில்  கலந்து கொண்ட காரணத்திற்காக பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson ) தனது  பிரதமர் பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் முழுவதும் சீன எதிர்ப்புப் போராட்டம்

நேபாள மக்களை சீனா தொடர்ந்து ஒடுக்கி வருவதாலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார இருப்பை அதிகரித்து வருதாலும் நேபாளம் முழுவதும் சீனாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ’சதி என்பது தெளிவாகத் தெரிகிறது’

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு சதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்,  ஜனாதிபதித் தேர்தலை மனதில் கொண்டு இது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆர்வமுள்ள சில நபர்கள் இந்திய உளவுப் பிரிவு வழங்கிய தகவல்களை புறக்கணித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.

அங்கொட லொக்காவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளரான  சபேசன் உள்ளிட்ட சிலருக்கும்,  இலங்கை நிழல  உலகதாதா  அங்கொட லொக்காவுக்கும் இடையே  தொடர்பு இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

’நம்பகமான பங்காளியாக எப்போதும் இருப்போம்’ – இந்தியா

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இன்று பிற்பகல் விரிவான மெய்நிகர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.