சாப்பாடு, தேநீர் விலைகள் அதிகரிப்பு

உணவு பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை நாளை (23) முதல் அதிகரிக்கப்படும் என  உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவாலும், பிளேன் டீ ஒன்றின் விலையை 05 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் ஓடுபாதை பெற்றுத்தர மேயர் உறுதி

மட்டக்களப்பு நகரில் பாடசாலை நாட்களில் பயணம் செய்ய சைக்கிள்  ஓடுபாதை அமைத்துத் தரும் படி மாணவர்கள் விடுத்த கோரி தொடர்பில், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி  ஏற்பாடுகளை முன்னெடுத்துத்  தருவதாக மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன், மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இன்றும் அதிகரித்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 538 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557,164 ஆக அதிகரித்துள்ளது.

‘கொள்கையில் மாற்றமில்லை’ ஜனாதிபதி கோட்டா

சேதன விவசாயத்துக்கு மாத்திரமே நிவாரணம்…

குறைபாடுகளைக் கண்டறிந்துகொண்டு அடுத்த போகத்துக்குத் தயாராகுங்கள்…

விவசாயிகளுக்கு போதிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டில்லை…

சரியானதைச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

ஜனவரியில் பிறக்கிறது ’தமிழ் காமன்வெல்த்’

அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கும் தமிழ் கலாசார மாநாட்டில், ‘தமிழ் காமன்வெல்த்’ என்ற அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை இந்தியா புறக்கணித்தது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் வருடாந்த உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகைதரவுள்ளார்.

ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா அலை

மீண்டும் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் அலையால், ஐரோப்பா போராடி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. மேலும் ஐரோப்பின் தற்போதைய நிலைமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளதோடு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த வருடம் மார்ச்  மாதத்துக்குள் ஐந்து இலட்சம் பேர் உயிரிழப்பார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள்,மரக்கறி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக  இன்று  (21) காலை நுவரெலியா நகரின் மத்தியில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

’தேச வழமை சட்டத்தில் உள்ள நல்லதையும் பெற்றே ஒரு சட்டத்தை உருவாக்குவோம்’

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும்  அதேபோன்று கண்டியச் சட்டம், முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று, சிறந்ததொரு சட்டத்தை ஏற்படுத்துவோமென, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

மீண்டும் அதிகரித்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 697 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 556,626 ஆக அதிகரித்துள்ளது.