உலகின் நீண்ட பொதுமுடக்கம் இரத்து

அவுஸ்திரேலியாவின் 2ஆவது பெரிய நகரமான மெல்போர்ன் நகரில் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கத்தை 262 நாட்களுக்கு பின்னர்,  இரத்து செய்வதாக அந்நாட்டு அரசாங்கம், நேற்று இரவு அறிவித்தது. 

சேதனப் பசளையிட்டு செய்கை வெற்றி

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைய நச்சுத்தன்மை அற்ற உணவு உற்பத்தியை அதிகரிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சேதனப் பசளை முறை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பாசிப்பயறு அறுவடை ஒலுவில் பிரதேசத்தில் இன்று (24)  இடம்பெற்றது.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு பதில் தலைவர் நியமனம்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்கவை நியமிக்க இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ராஜா கொலுரேயை தவிசாளர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், உப தலைவர் வீரசுமன வீரசிங்க பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் தவிசாளர் பதவியிலிருந்து ராஜா கொலுரேவை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் தோற்கும்’- ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு

விமர்சனங்களுக்கு உள்ளாகுவது ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு சாதாரணமாகிவிட்டது என தெரிவித்த விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ  , விமர்சனங்களுக்கு மத்தியில் எமது கிராமங்களுக்கு நிச்சயம் நாம் செல்வோம் என்றார்.

8 தமிழ் கைதிகளுக்கு சிறை மாற்றம்

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வருகைதந்த போது அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ்மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் நேற்று (21) கட்டளையிட்டது.

விரைவில் முடிவு கட்டப்படும்

கூட்டு ஒப்பந்தம் இன்மையாலேயே சில பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன. இப்பிரச்சினைக்கும் விரைவில் முடிவு கட்டப்படும் என தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரின்,. அதற்கான பேச்சுவார்த்தை
இடம்பெறுகிறது என்றார்.

568 பாடசாலைகள் திறந்தன

கொரோனா நீண்ட விடுமுறையின் பின்பு கிழக்கு மாகாணத்தில், 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப வகுப்புக்களைக் கொண்ட 568 பாடசாலைகள் இன்று (21) மீளத் திறக்கப்பட்டன. மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்தோடு வருகைதந்திருந்தனர்.

சீனாவில் மீண்டும் பரவுகிறது கொரோனா… பல இடங்கள் மூடப்பட்டன

சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

’யாழ். வைத்தியசாலையில் நினைவுத்தூபி அமைக்கப்படும்’

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக, விரைவில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படும் என, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள், இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.