சீனாவில் மீண்டும் பரவுகிறது கொரோனா… பல இடங்கள் மூடப்பட்டன

பாடசாலைகள், சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐந்தாவது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொற்று பரவலை தடுக்க 40 .லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலாத் தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.