இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 143 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

‘வவுனியா பல்கலைக்கழகம்’

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தி ஏற்பாடு

ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன் வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் துறைக்குள், சேதனப் பசளைப் பாவனையைக் கொண்டு வருவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

லண்டன் (கனடா) துயர்!

ஜூன் 6 கனடா வரலாற்றில் துயர் நிறைந்த ஒரு நாளாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அமைதியான ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் , மாலை நேர உலாவுக்காக வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் குடும்பமொன்றின் நான்கு உறுப்பினர்களை முஸ்லிம் இனத்தின் மீது வெறுப்புணர்வு மிக்க இருபது வயது இளைஞன் ஒருவன் தனது ‘பிக் அப் ட்ரக்’கால் மோதிக்கொலை செய்துள்ளான். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவன் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திடீர் திருத்தம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்படும் காலம் வரையிலும் கிருலப்பனையிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலக்கம் 145, கிருலப்பனை அவன்யூ, கொழும்பு-5 கிருலப்பனை பொலிஸ் பிரிவு ஆகிய இரு இடங்களிலேயே இவ்வாறானவர்கள் தடுத்துவைக்கப்படுவார்கள் என்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஓய்வுடன் நாமல் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசியலிலிருந்து முழுமையான ஓய்வு பெற்றதன் பின்னர், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த தகவலை, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல , இன்று (08) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் போது நிராகரித்துவிட்டார்.

கேரளாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூன் 9 ஆம் திகதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் இல்லை என்பதால் ஜூன் 16 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதாக நேற்று முதலமைச்சர் பினராயிவிஜயன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் குறையும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது.இதேவேளை, சென்னையில் 24 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 75,365 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 21,410 பேருக்கு கொரோனா உறுதியானதெனக் கூறப்பட்டு உள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் மேலும் 814 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையிட்டுள்ளது. அந்தவகையில், இன்று 3,094 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை 202,357ஆக அதிகரித்துள்ளது.