இந்நாள் மேயரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் முன்னாள் மேயர்

அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்று குற்றச்சாட்டுகளை, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் சாட்டுகிறாரென, முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு இணங்கியதன்

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 254 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299ஆக அதிகரித்துள்ளது.

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 15 பெண்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், 15 தற்கொலை குண்டுதாரிகiளை பயிற்றுவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அலஸ்தோட்டம் பாலர் பாடசாலை

அலஸ்தோட்டம் மாயனவீதியில் அமைந்துள்ள பாலர்பாடசாலையின் முன்பாக அமைந்திருந்த மதிலும் வடிகானும் கடந்த மாரிகாலத்தின் போது இடிந்து வீழ்ந்து காணப்பட்டது. இதனை பெற்றோரும், ஆசிரியரும் எமது கவனத்திற் கொண்டுவந்ததையடுத்து சென்று பார்வையிட்டு தலைவர் அவர்களிடம் தெரியப்படுத்தியிருந்தோம். அதனை தலைவரும் வந்து பார்வையிட்டு பாலர் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி உடனடியாக தற்காலிக வடிகான் வேலையை ஆரம்பித்துவைத்தார். விரைவில் மதில் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கௌரவ உறுப்பினர்களான பஹார்தீன், பாபுகாந், பாலகனேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விடுமுறைதினத்திலும் மக்களுக்காக பணி செய்யும் JCB இயக்குனர், சாரதிகள், தொழிலாளர்கள், மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.

இந்திய ரெயில் நிலையங்களில் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

தகர்க்கப்பட்ட ட்ரம்ப் பிளாஸா ஹொட்டல்

ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் அத்லாண்டிக் நகரத்திலுள்ள ட்ரம்ப் பிளாஸா ஹொட்டல், கசினோ ஆகியன நேற்று தகர்க்கப்பட்டன. இதன் உரிமையை கடந்த 2009ஆம் ஆண்டு ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ரூபாய்; நேற்று நடந்தது என்ன?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்குவதற்காக இறுதி முடிவு எடுக்க நேற்று (19) தொழில் அமைச்சில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை நகர மீன் சந்தை

(Saththiyan Trinco)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் திருகோணமலை நகர மக்கள் அனைவருக்கும் நகர சபை உறுப்பினர் ஆகிய நான் பொருப்பு கூறும் கடைப்பாடு உள்ள படியால் நகர மக்களின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய வகையில் இருக்கும். வரிப்பணம் மொத்த மீன் சந்தையில் இருந்து கிடைக்காததால் நகர மக்களுக்கு தெரியபடுத்துவதற்க்கும். வரிப்பணத்தை எப்படியும் பெற்று கொள்ளும் வகையில் 29/2/2021 அன்று நகரசபையின் முன்னாள் உண்ணாவிரதம் இருந்தேன். மொத்த மீன் சந்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் எனது கோரிக்கையை எழுத்து மூலம் கொடுத்திருந்தேன்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொவிட் 19 தொற்றிலிருந்து இன்று(18) மேலும் 647 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 71,823 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 5,661 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

எபோலா பரவலை பிரகடனப்படுத்திய கினி

புதியதொரு எபோலா பரவலை கினி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகடனப்படுத்தியுள்ளது. ஏழு தொற்றல்களை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே இவ்வாறு கினி பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நிலையில், எபோலா நோயாளர்களுடன் தொடர்பிலிருந்திக்கக்கூடியவர்களை கினி தொடர்வதுடன், தடுப்புமருந்துகளைப் பெற்றவுடன் விநியோகிக்கும் என அந்நாட்டின் சுகாதாரமைச்சர் றெமி லமஹ் நேற்று தெரிவித்துள்ளார். புதிய எபோலா பரவலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்த நிலையிலேயே லமஹ்ஹின் குறித்த கருத்து வெளியாகியுள்ளது.