ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (13) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 74,484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 67,831 பேர் குணமடைந்துள்ளனர். அதன் பிரகாரம், 6 ,269 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 384 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை லிந்துலை நகரசபைக்குச் சொந்தமான தலவாக்கலை தெவிசிறிபுற ரத்னில்கல பிரதேசத்தில், ஒரு குழுவினர் அத்துமீறி காணியை சுவீகரித்ததால் அதனை விடுவிக்கக்கோரி, தலவாக்கலை நகர பொதுமக்கள், இன்று(11) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை: கொரோனா வைரஸ்

பிரித்தானியாவில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுகாதார வைத்திய பீடத்தின் வைத்தியர் டொக்டர் சந்திம ஜீவன்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் இந்த புதிய வீரியம் கொண்ட வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் டை அணியாததால் மாவோரி தலைவர் வெளியேற்றம்

பாராளுமன்றத்தில் டை அணிய மறுத்ததால், நியூசிலாந்து மாவோரித் தலைவரான றவிரி வைடிடி இவ்வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், மேற்கத்தேய ஆடைகளை அணியத் தன்னை வலியுறுத்துவதானது தனது உரிமைகளின் மீறலொன்று எனவும், பழங்குடியினக் கலாசாரத்தை ஒடுக்குவதற்கான முயற்சியொன்று என வைடிடி தெரிவித்துள்ளார்.

பஸ் சாரதியான பிள்ளையான் எம்.பி

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகந்தன் (பிள்ளையான்), சிறிது நேரம் பஸ் சாரதியாக இருந்த சம்பவம் தொடர்பில் மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா பெயர்கள் நீக்கம்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து காமராஜர், அண்ணா ஆகியோரின் பெயர்களை அகற்றுவது தமிழக மக்களை அவமதிக்கிற செயல் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார் .

ஆளில்லாத தீவில் தேங்காய்களுடன் 33 நாள்கள் தப்பித்த 3 கியூபர்கள்

பஹமாஸிலுள்ள ஆளில்லாத தீவொன்றில் சிக்கியிருந்ததாக நம்பப்படும் மூவர் மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க கரையோரக் காவற்படை தெரிவித்துள்ளது. அங்குலிக்கா கேயில், தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்ட கொடியொன்றை அசைத்துக் கொண்டிருந்தபோதே வழமையான கண்காணிப்பிலிருந்த வான் குழாம் இவர்களைக் கண்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலும் தேங்காய்களால் தாங்கள் உயிர் தப்பியதாக குறித்த கியூபப் பிரஜைகள் தெரிவ்வித்துள்ளனர். படகு மூழ்கியதைத் தொடர்ந்து இவர்கள் நீந்தி தீவை அடைந்துள்ளனர்

முதல் 5 உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் ஒன்றாக இடம்பிடித்த vivo

IDC இன் வருடாந்த தரவுக்கமைய, உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, 8.6 சதவீத சந்தைப் பங்கு மற்றும் 110 மில்லியனுக்கு அதிகமான சாதனங்களை ஏற்றுமதி செய்து, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை: கொரோனா தகவல்

நாட்டில் மேலும் 539 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 739ஆக அதிகரித்துள்ளது. கம்பஹா பொதுசந்தையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (10) 75ஆக அதிகரித்துள்ளது. தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.