ஜோர்தான் தாக்குதலுக்கு ஜே.வி.பி கண்டனம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்கள் மீது, அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், முறையாக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

போலி ஆவணங்களுடன் கோப்பாய் இளைஞன் கைது

போலியாக தயாரித்த ஆவணங்களை ஒப்படைத்து, வர்த்தக கப்பலொன்றில் சேவையாற்றுபவரைப் போன்று, ஐரோப்பியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருணா செய்ததையே இன்று விக்னேஸ்வரன் செய்கிறார்

(என்.ராஜ்)

“கருணா செய்த வேலையை தான் இன்று விக்னேஸ்வரன் செய்திருக்கிறார்” என, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். யாழில், இன்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’

அரசியலில், நாம் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளோம். சர்வதேச சமூகத்தை, முற்று முழுதாக நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. கொழும்பை முற்றாகப் புறக்கணித்துக்கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு, எந்த நாடும் இன்று தயாரில்லை. அவர்களுக்கு சில எல்லைகள் உண்டு; சில சாத்தியங்களும் உண்டு. ஆகவே, இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். மக்களைப் பொய்யான வழிகளில் அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியாது. அது அவர்களுக்குச் செய்கின்ற அநீதியாகும், துரோகமாகும்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

‘ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கே எமது ஆதரவு’

(க. அகரன்)

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செங்டு துணைத்தூதரகத்தை மூடுமாறு ஐ. அமெரிக்காவுக்கு சீனா உத்தரவு

சீனாவின் செங்டு நகரத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் துணைத் தூதரகத்தை மூடுமாறு ஐக்கிய அமெரிக்காவுக்கு இன்று சீனா உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை சீனா மூடுமாறான ஐக்கிய அமெரிக்காவின் இவ்வார வலியுறுத்தலொன்றுக்கு சீனா பதிலளித்துள்ளது.

சிங்கப்பெண்ணே…

(Rathan Chandrasekar)

குடிக்கிற தண்ணிக்காக ஊரே அல்லாடிக்கிட்டிருக்கு.

ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி பழி சொல்லி காரணம் சொல்லிட்டிருக்க –

நம்ப வேலூர் பொம்பளைக மட்டும் –
15 வருசத்துக்குமுந்தி காஞ்சுபோன ஒரு ஆத்தையே தூர் வாரி சாதனை பண்ணிருக்காங்க.

உயிர்களை காக்க பிறந்தவர்க்கு இதயம் கணத்த கண்ணீர் அஞ்சலி

கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித், ஐ.டி.ஐ படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற சமயத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டார். அந்த வழியாக ரயிலும் வந்தது. உடனே, அந்த மாணவர் தனது கையில் இருந்த சிவப்பு நிற புத்தக பையை தூக்கி பிடித்தபடி

கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமது மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியதற்கு பின்னர் இன்று தான் முதன்முதலாக நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

மயிலிட்டி மீன்பிடி இறங்குதுறைக்கு எரிபொருள் வழங்க ஏற்பாடு

மீன்பிடி துறைமுகத்தைப் பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை, இன்று (20) கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால், மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்ததுக்கும் இடையிலேயே, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.