இது US Hotal, Jaffna இன் பதிவு

உணவிற்காக தவிக்கும் கஷ்டப்பட்ட மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சமைத்த உணவை (மதிய உணவு மாத்திரம் )வழங்க நாம் தயாராக உள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு மனிதாபிமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்

தமிழகம், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் கரோனா நிலவரத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழு: உள்துறை அமைச்சகம் அனுப்பியது


தமிழகம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறித்தும், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய 4 மத்தியக் குழுக்களை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

இலங்கையில் தொற்றாளர்கள் 368

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியவர்களெனவும், 29 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டல் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 368ஆக அதிகரித்துள்ளது.

அரிசிக்கு நிறமூட்டம்; ஒருவருக்கு அபராதம்

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்தவேளை கைதுசெய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றால் நேற்று (22) இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

’விவசாயத்தின் மூலம் தன்னிறைவு அடைவோம்’

“எமது விவசாயத்தின் மூலம் தன்னிறைவு அடைவது மற்றுமன்றி நமது உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நமக்கு சிறந்த சந்தர்ப்பத்தை உருவாக்குவதே எனது நோக்கம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கிம் கடும் நோய்வாய்ப்பட்டுள்ளமை: சந்தேகிக்கின்றன தென்கொரியா, சீனா

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் இருதய சத்திரசிகிச்சையொன்றுக்கு உள்ளானதுடன், கடுமையான ஆபத்திலிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து தலைவர் கிம் நோய்வாய்ப்பட்டுள்ள அறிக்கைகளில் தென்கொரிய சீன அதிகாரிகள் இன்று சந்தேகித்துள்ளனர்.

ஜூன் 20இல் பொதுத் தேர்தல்: வர்த்தமானி வௌியீடு

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் முதல் ஊரடங்கு தளர்த்தல் பற்றிய அறிவித்தல்

ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ,கண்டி, கோகலை, புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில்  இவ்வாறு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தோழர் பத்மா (அதிபர் அமலநாதன் மடு வலயம்) அடம்பன்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) இன் வன்னி மாவட்டத்தின் ஆரம்பகால அரசியல் செயற்பாட்டாளரான தோழர் பத்மா (அதிபர் அமலநாதன் மடு வலயம்) அடம்பன்-கன்னாட்டி கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். அவர் புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற துயரச்செய்தியை தோழர்கள் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

ஊடகங்கள் எழுப்பி இருக்க வேண்டிய கேள்விகள்

ஏன் மருத்துவ சேவை பலவீனமாக இருந்தது? அவ்வாறு பலவீனமாக இருந்தது தான் கூடுதல் மரணங்கள் சம்பவிக்கக் காரணமா?
சீனாவில் வூஹான் மாநிலம் ஜனவரி 23இல் முற்றாக மூடப்பட்டது. ஜனவரி 31இல் உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கையை அறிவித்தும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை?
உலனின் செல்வத்தின் 50 வீதத்தை தன்னாட்டில் வைத்துள்ள அமெரிக்காவில் ஏன் இவ்வளவு தொகையான அழிவு அதுவும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது?