’அருளர்’ நினைவேந்தல் நிகழ்வு

ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவராகவும், தமிழர் அரசியல் சார்பான ஆய்வு நூல்கள் பலவற்றின் ஆசிரியராகவும் விளங்கி அண்மையில் காலமான ‘அருளர்’ எனப் பரவலாக அறியப்படும் அருட்பிரகாசத்தின் நினைவேந்தல் நிகழ்வு, யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், நல்லூரிலுள்ள யூரோவில் மண்டபத்தில், நேற்று (21) நடைபெற்றது.

இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது? எதிர்ப்பு ஏன்? – முழுமையான அலசல்

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-ம் முறையாகப் பதவியேற்ற பிறகு தற்போது, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அகதிகளாக எத்தனை வருடம்தான் வாழ்வது? எங்கள் குழந்தைகள் அகதிகளாக வாழக் கூடாது: இலங்கைத் தமிழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை

அகதிகளாக நாங்கள் எத்தனை வருடம் வாழ்வது… அகதி என்ற வேதனையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் குழந்தைகள் நிச்சயம் அகதிகளாக வாழக் கூடாது. இதிலிருந்து நிச்சயம் எங்களுக்கு இந்திய அரசு விடுதலை தரும் என்று நம்புகிறோம்

சகோதர மொழி அறிவின்மை வெட்கத்துகுரியது

நாட்டிலுள்ள சகோதர மொழிகளை அறியாதிருப்பது வெட்கப்பட வேண்டிய காரணம் எனத் தெரிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, கல்வித்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

“நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை வெட்டுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக உள்ளது” – “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்”

அமைச்சர் டக்ளஸ் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை பதவி விலக வேண்டும் என தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சும(த)ந்திரன் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சா இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என கூறிவிட்டாராம்.

மணல் கொள்ளையர்களுக்கு உதவ மறுத்த ஒப்பந்தக்காரர்களுக்கு அச்சுறுத்தல்

தமக்கு உதவி செய்ய மறுத்த பாலம் புனரமைக்கும் ஒப்பந்தக்காரர்களின் களஞ்சிய அறைகள், மணல் கொள்ளையர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவமொன்று, முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பிரதான வீதியில், நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.

அஸ்ஸாமில் தீவிரமடைந்துள்ள போராட்டம்

இணைய சேவை துண்டிப்பு

விமான சேவைகள் இரத்து

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

தூக்குத் தண்டனை!

12 வருடங்களுக்குப் பின்னர் நீதித்துறை அளித்த தீர்ப்பு!

தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 75 வயதான பர்வேஸ் முஷர்ரப் பாகிஸ்தானில் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை அந்நாட்டு ஜனாதிபதி பதவியில் இருந்தார்.