பணமதிப்பு நீக்கம் துரிதப்படுத்துகிறது: தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க டாலர் மேலாதிக்கத்திற்கான முடிவின் ஆரம்பம்?

உலக சமூகம் தங்கள் பொருளாதாரங்களை மதிப்பிழக்கச் செய்யும் முக்கிய நகர்வுகளை அமெரிக்கா எதிர்கொள்கிறது. அமெரிக்க டாலரின் ஒரு வேளை விரைவில் இல்லை என்றாலும் இருப்பு நிலை இறுதியில் முடிவுக்கு வரும்,

ரெஜினோல்ட் குரே காலமானார்

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

யாழில் மீனவர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீளல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளனர். குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது தொடர்ந்து பேரணியாக  சென்று யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திலும், அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களை கையெழுத்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி

இலங்கை இராணுவத்தில் உள்ள 200,783 வீரர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு இதை தெரிவித்துள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இராணுவ பலம் 100,000 ஆக இருக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மலையக தியாகிகள் நினைவுகூரல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், மலையக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (12) மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில்   நடைபெற்றது.

ஐந்து கட்சிகளின் புதிய கூட்டணி

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை  அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(13)  இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது

உள்ளூர் அதிகார சபைக்கான வாக்காளர்களின் மேன்மையான கவனத்திற்கு!

பிரதேச சபை அல்லது நகர சபை அல்லது மாநகர சபை இவை மூன்றும் இந்த ஒற்றையாட்சி அரசியலமைக்குள் சுதந்திரமான இயங்குநிலையைக் கொண்டிருப்பவையாகும்.

காசியில் ‘புனித’ கங்கை!

  • ஒரு அனுபவப் பதிவு
    நம்மில் பலருக்கு இந்தியாவின் கங்கை நதி என்றால் புனித நதி என்ற நினைப்பும், அதன் காரணமாக அது ஒரு வணக்கத்துக்குரிய நதி என்ற எண்ணமும் எழும். ஆம், உண்மையில் கங்கை, அவள் ஊற்றெடுக்கும் போது புனிதமாகத்தான் தனது பயணத்தை ஆரம்பிக்கிறாள். ஆனால், பின்னர் அவள் சுமார் 3,200 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் போது எப்படித் தன்னை வணங்கும் மனிதர்களால் மாசுபடுத்தப்படுகிறாள் என்பதை தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் இந்த அனுபவப்பதிவு எடுத்துக் காட்டுகிறது.
  • 2014 கிறிஸ்து பிறப்பையொட்டி நான்கு நாட்கள் காசியில் இருந்தேன். காலையும் மாலையும் கங்கைக் கரைக்குச் சென்றேன்.
    எட்டு டிகிரி குளிரிலும் ஒருவித பரவசத்தில் இருந்தபோது, அண்ணா சௌந்தர் வல்லத்தரசு அவர்களுடன் பேசினேன்.
    ‘ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ‘அரிச்சந்திரா காட்’க்குப் போயி கங்கையைப் பார்த்துக்கிட்டு கொஞ்ச நேரம் சும்மா உட்காருங்க!’ என்றார். இரவு பதினொரு மணிக்கு மேல் மிதி ரிக்ஸா கிடைத்தது. மேட்டில் இறங்கி நடந்து கங்கைக்கரை அடைந்தோம்.
    எட்டு, பத்துப் பேர் எரிந்து கொண்டிருந்தனர். சற்று உயரமாக இருந்த மேடையில் நாலைந்து பேர் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தனர். கஞ்சா புகையாக இருக்கலாம். எரியும் சடலங்களின் சிதையைச் சீர்பார்த்துக் கொண்டிருந்தனர் ஓரிருவர். ஒரு சிதையின் இரு கால்களும் எரி நெருப்புக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. பின்னர் கங்கையின் மச்சங்களுக்கு விருந்தாகும் போலும்.
    ஊரில் சுடுகாட்டில் பிணமொன்று எரிந்தால் சுற்று வட்டாரம் நாற்றம் உணரும். எட்டு, பத்து பிணம் எரிந்தால் எவ்வளவு நாற்றம் வரவேண்டும்? நாற்றத்தை நாசி அறியவில்லை. காசி பற்றிய நம்பிக்கைகளில் ஒன்று அது. நம்மூர் பரோட்டாக்கடை அடுப்புத் தீ போல, எந்நேரமும் பத்துப் பன்னிரண்டு எரியும் போலும்! அடுத்தடுத்த நாட்களில் வாடகைக் கார்களின் டாப்பில், வண்ண ஜிகினாத் துணிகளில் பொதியப்பட்ட பிணங்கள் கட்டப்பட்டு, அரிச்சந்திரா காட்டுக்கு விரைவதைக் கண்ணுற்றேன்.
    மிக அசுத்தமாகக் கிடந்தது கங்கை அந்தக் கட்டத்தில். அந்தக் கட்டத்தில் பாரிக்கர் சொன்னார், ‘கியா ஜிந்தகி ஹை சாப்!’ என்று. எனக்குள்ளும் பற்றிப் படர்ந்தது அந்த விரக்தி. மனித வாழ்க்கை என்பது இவ்வளவுதானா இறுதியில்? எதற்கு வாரிக் கோரிக் குவிக்கிறார்கள் ஆயிரமாயிரம் கோடிகள்? ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!’ என்றார் பட்டினத்துப் பிள்ளை.
    எத்தனையோ இழவுகளுக்குப் போயிருக்கிறேன். பல ஊர் சுடுகாடுகளைப் பார்த்திருக்கிறேன். சுடுகாட்டு வழியில் இரவென்றும் பகலென்றும் பாராமல் அலைந்திருக்கிறேன். ஆனால் நள்ளிரவில், கடுங்குளிரில் கங்கையின் சாந்நித்தியத்தில், எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை, வந்துகொண்டிருக்கும் பிணங்களை, கங்கைக்குள் சென்றுகொண்டிருக்கும் எச்சங்களைக் கண்டுகொண்டிருந்தபோது மனதில் அச்சமோ, பீதியோ இல்லை. என்றாலும் வெறுமை வந்து என்னைக் கௌவிக்கொண்டது.

எமது தேசிய கீதத்தை இயற்றிய அமரர்.ஆனந்த சமரக்கோன்

எமது தேசிய கீதத்தை இயற்றிய
அமரர்.ஆனந்த சமரக்கோன் அவர்களின் ஜனனதினம் இன்று.
(13.01.1911)


எமது தேசிய கீதத்தின் வரலாற்று
காலப்பகுதியை இப்படி வகுக்கலாம்.
1948.ஆம். நமது நாடு சுதந்திர அடையும்
வரை இலங்கையின் தேசிய கீதமாக
God save that queen….. என்று தொடங்கும் பிரித்தானிய தேசிய கீதமே
நமது நாட்டின் தேசியகீதமாக இருந்தது.

மக்கத்துச் சால்வை Slm Hanifa பச்சோந்தியான கதை – 5

வடக்குகிழக்கு மாகாண சபையில் ஓர் உறுப்பினராகச் செயற்பட்டு வந்தேன். அந்தச் சபையில் எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைத்தது போல எனக்கும் ஒரு பஜிரோ ஜீப் கிடைத்தது. அதை நான் குறுகிய காலத்துக்குள் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதை விற்று விட்டேன். அது இலங்கையில் ஒன்றும் புதினமான விஷயமோ பாரியதொரு குற்றமோ அல்ல. அப்படித் தங்களுக்குக் கிடைக்கும் வாகனங்களை விற்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளில் நானும் ஒருவன், அவ்வளவுதான்.