எமது தேசிய கீதத்தை இயற்றிய அமரர்.ஆனந்த சமரக்கோன்


பின்பு 1948.1951.தேசியகீதம் அற்ற காலம். 1952.1961.நமோ நமோமாதா!…
1961.ஸ்ரீ லங்கா மாதா!..
இன்று வரை ஸ்ரீ லங்கா மாதா என்றுதான் பாடப்பட்டு வருகிறது.
பிறப்பால் கிறிஸ்தவரான வில்பிரட் அல்விஸ் சமரக்கோன்.
பள்ளிப்படிப்பை
முடித்தபின். 1931.இல் இலங்கை தொழில் நுட்பக்கல்லூரியில் சேர்ந்து
பயிற்சி பெற்றார்.
1934.ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த ரவீந்திரநாத் தாகூர். அவர்களின் பல கலை நிகழ்ச்சிகளை பார்த்தும் கேட்டும்
தாகூரின் படைப்பாற்றல் மீது மோகம் கொண்டார்.
மற்றும் இசை ஓவியம். ஆகிய துறைகளில் உயர்கல்வியை மேற் கொள்வதற்காக இந்தியாவின் சாந்தி இல்லத்திற்கு சென்று அங்கே
ரவீந்திரநாத் தாகூர். நந்தலால்போஸ்.
ஆகியோரிடம் இசை மற்றும் ஓவியம்
ஆகியவற்றை பயின்றார்.
நாடு திரும்பியபின் 1937.இல் தனது முன்னோரின் மதமான பௌத்தத்திற்கு மாறினார்.
பெயரையும் ஆனந்த சமரக்கோன் என்று மாற்றிக்கொண்டார்.
தேசிய கீதம்பற்றி அரசாங்கம் முன்மொழியும்படி அறிவிக்கப்பட்டபோது இவர் தான் எழுதி வெளியிட்ட குமுதினி எனும் பாடல் இசை தொகுப்பில் உள்ள நமோ நமோ மாதா!… பாடலை போட்டிக்காக அவரது மனைவி கரோலின் சமரக்கோன் அனுப்பி வைத்தார்.
அதுவே இறுதியில் தெரிவு செய்யப்பட்டது.
அவர் எழுதிய தேசிய கீதம் அமங்கலமான “ந” எனும் எழுத்தில் தொடங்குவது அபசகுணமானது நாட்டுக்குத் துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்றும் ஒரு பிரவினர் வாதிட்டத்தில்
ஸ்ரீ லங்கா மாதா!.. என்னும் வரி முதல் வரியாக 01.02.1961.இல் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இதை ஆனந்த சமரக்கோன் வன்மையாக எதிர்த்ததுடன் மன உளைச்சலுக்கு ஆளானார்.
அந்த கீதத்தை வெளியிட்ட
அச்சகத்திற்கு பணம் கட்ட வழியில்லாத நிலையில் அதன் பதிப்புரிமையை அந்த அச்சகத்திற்கே
வழங்கியிருந்தார் .
ஆகவே தேசிய கீதத்தின் பதிப்புரிமை இவரிடம் இருக்கவில்லை அச்சகத்திடம் இருந்து .
அரசாங்கம் 2500 ரூபாவுக்கு வாங்கியிருந்தது.
எனவே அவரால் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இது குறித்து பலவிமர்சனங்களையும் எழுதியிருந்தார்.
இலங்கையின் இசை துறைக்கு பெரும் சேவை செய்த இவர்
தனது ஒரே மகனி்ன் அகால மரணத்தை தொடர்ந்து சில காலம் இந்தியாவில் வாழ்ந்து வந்தார்.
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் “ரைம்ஸ் ஓப் சிலோன்” பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
எனது கீதத்திற்கு தலையை வெட்டிவிட்டனர். அது அந்த பாடலை மட்டும் அழிக்கவில்லை அதை எழுதியவரின் வாழ்க்கையையும் அழித்து விட்டது.
எனது இதயம் நொறுங்கிவிட்டது.
ஒரு அப்பாவி கவிஞனுக்கு இப்படி எல்லாம் செய்யக்கூடிய நாட்டில் வாழ்வது துரதிஷ்டமே சாவதே நல்லது.
என்று எழுதியவர் தனது 51.ஆவது வயதில் 05.04.1962.ஆம் ஆண்டு அகால மரணமானார்.
ஒரு உயரிய நம்நாட்டு கலைஞரை அவரது ஜனனதினத்தின்
நாமும் நினைவு கொள்வமாக…
அருண் மீனாட்சிசுந்தரம் அவர்களின் பதிவு