சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ஆரம்பமாகியுள்ளது. உலகில், ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் இந்த மாதத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன.
200 மில்லியன் டொலர்கள் வழங்க WB அனுமதி
பாலஸ்தீன யுத்தம் ; மட்டக்களப்பில் அமைதிப் பேரணி
காத்தான்குடி மாணவி கொழும்பு வரை துவிச்சக்கர வண்டி பயணம்
6 கட்சிகள் போட்டியிட முடியாது
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்னவின் நியமனம் தொடர்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
உயர் அரசியல்வாதிக்கு சொந்தமான ஜீப் கண்டுபிடிப்பு
பதுளை – லுனுகல பிரதேசத்தில் உயர் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சொகுசு ஜீப் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் குறித்த ஜீப் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடு போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்ட சிறிய காரொன்றின் இலக்கத் தகடுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.