நான் பொறுப்பேற்கிறேன்: நீதி அமைச்சர் ஹர்ஷன

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் சம்பவம் தொடர்பில் தான் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சராக, இந்தச் சம்பவத்திற்குத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா செல்வோரின் கவனத்துக்கு

கொழும்பில் இயங்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியில் இயங்கும் இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் , யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கான விசா, ஓ.சி.ஐ (OCI), கடவுச்சீட்டு (Passport) மற்றும் சான்றிதழ் உறுதிப்படுத்தல் (Attestation) சேவைகளை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ ‘வெளிக்கள சேவை வழங்குநராக’ (Outsourcing Service Provider – OSP) ‘அல்ஹிந்த் குளோபல் சேவைகள்’ (Alhind Global Services) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைக்கு எதிராக புதிய சட்டத்தைக் கோரி போராட்டம்

பிரான்சில் 11 வயது சிறுமி லியானா  பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான “விரிவான சட்டக் கட்டமைப்பை” உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டம் தடுப்பு நடவடிக்கைகள், நீதித்துறை விசாரணை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

பொருளாதார மீட்சி பெறுகிறது: மத்திய வங்கி ஆளுநர் கருத்து

இலங்கை தற்போது ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதற்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டதே முக்கிய காரணம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாலியல் சுரண்டல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் அண்மையில் வெடித்துள்ள பாலியல் சுரண்டல் விவகாரம், ஈழத் தமிழ்ச் சமூகத்தின் கல்விப்புலத்திலும் பொது வெளியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச செயலகங்களில் வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவு வசதி

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் வங்கி அட்டைகள் மூலம் பொதுமக்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புவாழ் மக்களுக்கு விசேட அறிவித்தல்

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள் உட்பட மேலும் பல பகுதிகளுக்கு நாளை (4) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான நதுன் சிந்தக விக்ரமரத்ன (ஹரக் கட்டா) என்பவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, 50 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கோரி, அதனை 20 கோடியாகக் குறைத்து, இறுதியில் 12 கோடி ரூபாவை அவரது மனைவியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.