”விவசாயிகளால் நாட்டுக்கு பெரும் இலாபம்”

அதிகரித்துள்ள டொலர் வீதத்தின் பெறுமதியை குறைப்பதற்கு விவசாயிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தோழர் ரமணி (சிவசுந்தரம் செல்வகுமார்)யின் 60வது பிறந்தநாள் நினைவுகள்!

(Nagalingam Srisabesan )

தோழர் ரமணி (சிவசுந்தரம் செல்வகுமார்)யின் 60வது பிறந்தநாள் நினைவுகள்!ரமணி என்று அரசியற் தோழர்களாலும் செல்வியென்று உறவினர்களாலும் அழைக்கப்பட்ட தோழர் சிவசுந்தரம் செல்வகுமாரின் 60வது பிறந்தநாள் இன்றாகும். வடமராட்சியிலுள்ள பொலிகண்டியில் 29 பெப்ரவரி 1964 லீப் நாளில் பிறந்தார்.

காத்தான்குடியில் பரபரப்பு; நீதவான் அதிரடி உத்தரவு

காத்தான்குடியில்  சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

ஹரிணியை நிறுத்தவும் – ஹிருணிகா

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினரான  கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான  திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர கோரியுள்ளார்.

சாதனை படைத்த சிறுவனுக்கு செந்தில் வாழ்த்து

பாக்குநீரினையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உணவுப்பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினாலும், தேநீர் 5 ரூபாவினாலும், பால் தேநீர் 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கங்கையில் யாரும் குளிக்க வேண்டாம்

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பல மாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது. கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

பலஸ்தீன பிரதமர் இராஜினாமா

பலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், பலஸ்தீனத்தில் திடீர் திருப்பமாக அந்நாட்டு பிரதமர், பதவியை இராஜினாமா செய்வதாக முகமது ஷ்டய்யே அறிவித்ள்ளார்.

முதல் பெண் முதலமைச்சர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்

பஷில் நாடு திரும்பியதும் புதிய அரசியல் கூட்டணி?

பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அரசியல் கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.