அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

’யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர்’

இலங்கை சிரமான சூழ்நிலையை கடந்துகொண்டு இருக்கிறது எனவும் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற ரீதியிலும் இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிவருகிறது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தூசி தட்டப்படும் புலிப் பூச்சாண்டியும்

இறுதிக் கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம், மே12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட மே18 ஆம் திகதியன்றே நினைவேந்தல் வாரம் நிறைவடையும்.

அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் கிடையாது

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்களை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில்  தெரிவித்துள்ளார்.

’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’

பாராளுமன்ற கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென கூறும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சுப் பதவிகளுக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போடும் விளையாட்டுக்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 5)

களைகளைப் பார்த்து பயந்தால் நெல்லை அறுவடை செய்ய முடியாது

இதன் பின்னனியில் வெளிசக்திகளின் கரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் கூற முடியாது.

ஏனெனில் இத்தகைய பாரிய நெருக்கடிகள் நாடுகளில் ஏற்படும் போது வல்லரசுகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பது நூற்றாண்டு அனுபவங்கள் ஆகும்

சபைக்கு வந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ

கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்‌ஷ, பாராளுமன்றத்துக்கு இன்று (18) வருகைதந்தார். அவருக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

கோடாகோகமவைக் கண்டு அஞ்சுவோர் யார்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலிமுகத்திடலில் போராட்டங்கள் தொடங்கி ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் அதன்மீது வன்முறை ஏவப்பட்டது. அதை மக்கள் எதிர்த்து வெற்றிகண்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டி ஏரியூட்டப்பட்டு சிதைக்கப்பட்ட கோடாகோகமவை மீள உருவாக்கி வலுபடுத்தியிருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீதான அரச வன்முறையைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் விரிவானதும் ஆழமானதுமான பார்வையை வேண்டுவன.

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 4)

அரசியல் அமைப்பு மாற்றம் மக்களுக்கான அரசியல் அமைப்பிற்கான ஆட்சி முறமையை மாற்றும் போராட்டமாக கொண்டு செல்வதற்கான பொறுப்பு எம் யாவருக்கும் உண்டு இதில்தான் நாம் வரலாற்று அனுபவங்களை நாம் பாடமாக கொள்ள வேண்டும்