எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 4)

இஸ்ரேல் மக்களை மதத்தின் அடிப்படையிலும்

அமெரிகர்களை பொருளாதார இராணுவ வல்லரசு என்றும்
மத நல்லிணக்கத்தில் நாம் இந்தியர் என்று இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலும்

மாவோ ஜப்பான ஏதேச்சேகாரத்திற்கு எதிராக தேசிய முதலாளிகளையும் உழைக்கும் வர்க்கத்தையும் ஓரணியில் திரட்டி இன்று வரை சீனர்கள் என்றாக முன்கொண்டு செல்வதைப் போல

நாம் இலங்கையைர் என்று பயணிக்க முடியாத வகையில் பேரினவாதமும் குறும் தேசிய இனவாதமும் இவ்வளவு காலமும் செயற்பட்டதில் இருந்து சற்று மாறுபட்டு இணைந்த கரங்களாக இனவாதத்தை பின்தள்ளி செயற்படும் ஒரு ஆரம்ப புள்ளியாக சில நம்பிக்கைகளை தற்போது ஏற்பட்டிருந்தாலும் நாம் பயணிக்க வேண்டி தூரம் இன்னும் அதிகம்
தற்போது நிலமையில் இருந்து எவ்வாறு இலங்கையை மீட்கலாம்.

பல நாடுகள் மீண்டு வந்திருக்கின்றன.

அதற்கு அண்மைய உதாரணமாக சிலி நாட்டில் சால்வடார் அலெண்டே (Salvador Allende)(1973) ஐ கொலை செய்து உருவாக்கப்பட்ட மேற்குல பொம்மை ஆட்சியை தகர்த்து எறிய பல்கலைக் கழக மாணவன் இளம் அரசியல் தலைவர் கேப்ரியல் போரிக்(Gabriel Boric)தலமையில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களும் அதனைத் தொடர்ந்த தேர்தல் வெற்றியைக் கூறமுடியும்

பொலிவியாவில் ஈவோ மொறாலஸ் (Evo Morales) வின் அரசியல் செயற்பாட்டு வெற்றியை தற்காலிகமாக தோற்கடித்திருந்தாலும் குறுகிய காலத்தில் அவர்கள் மீண்டு எழுந்ததை நாம் நம்பிக்கைகளாக கொள்ளலாம்
தற்போதைய போராட்டம் பற்றி

முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரான்சு புரட்சிக்கு ஒப்பிட்டுள்ளார்

“இப்போராட்டம் ஆட்சி மாற்றத்துக்கான போராட்டமே தவிர சமூக அமைப்பை மாற்றுவதற்கான போராட்டமல்ல, இதனால் ஆளும் வர்க்கத்திற்கு ஆபத்து கிடையாது. எனவே ஆளும் வர்க்கமும் இதனைக் கொண்டாடுகிறது.” என மறுக்கும் வர்க்க சிந்தனையாளர்.

இன்னும் ஒரு சாரார், “இதன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்? இதற்கான நிதியும் ஆலோசனையும் சர்வதேச ஆதரவும் எங்கிருந்து வருகிறது?” என வினா எழுப்புகிறார்கள். இதனையும் கடந்து போக முடியவில்லை.
“எந்த தலைமையும் இல்லாமல் நடைபெறும் இப்போராட்டம் எந்த திசையில் பயணிக்கும் எங்கு போய் முடியும் எனக் கூறமுடியாது, எனவே எச்சரிகையுடன் ஆதரிக்கவேண்டும்” என இன்னொரு பகுதியினர் கருத்துரைகின்றனர்

“விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் தெருவில் இறங்கி போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்கள் நடத்தும் போராட்டத்தை ஒரு களியாட்டமாக காலி முகத்திடலில் அமைந்த ‘கோத்தா வெளியேறு கிராமம்’ மாற்றி அதன் வீரியத்தை குறைத்து ஆட்சியாளர்களை காப்பாற்றிவருகிறது” என்ற விமர்சனமும் ஒலிக்கிறதும்.

இன்னொரு புறத்தில் ஒரு சில பேரினவாத பௌத்த பிக்குகள்” உண்மையான சிங்கள பௌத்த அரசு இது, இதனை காப்பாற்றுவது எமது கடமை’ என கூக்குரல் இடும்போது

மறுபுறத்தில் ஒரு சில குறுகிய தமிழ் தேசியவாதிகள் “எம்மை அழிக்கும்போது நீங்கள் எல்லோரும் எங்கே போயிருந்தீர்கள்” என கேள்வி எழுப்புகிறார்கள்.

யாராவது நினைத்திருப்பார்களா ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அவருக்கு வாக்களித்த சிங்கள மக்களே இவ்வளவு சீக்கிரம் கிளர்ந்தெழுந்து “ஆட்சியைவிட்டு வெளியேறு” எனத் தெருவில் இறங்கி போராடுவார்கள் என்று?

சிங்கள இனவாதத்துக்கு எதிராக சிங்கள மக்களே குரல் கொடுப்பார்கள் என்று?

சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் மொழி கடந்து மதம் கடந்து ஓரணியில் நின்று போராடுவார்கள் என்று?

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இந்த அதிசயம் நடைபெறுகிறது. இந்த அதிசயம் எப்படி நடைபெற்றது?

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இது புரியும் இது சாத்தியம் என்பதை…

ரஷ்ய புரட்சி… சீனப் புரட்சி… வியட்நாம் புரட்சி

கியுப புரட்சி நிகரகுவா புரட்சி பொலிவியாவின் ஆட்சி
1950 களின் நடுப்பகுதியில் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் சம உரிமையை வேண்டிய மாட்டின் லூதர் கிங்கின் போராட்டம் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தாவிட்டாலும் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது உண்மைதானே

துனிசியாவில் நடை பாதை வியாபாரியில் ஆரம்பித்த அரபு வசந்தம்

மியான்மாரின் சில ஆண்டுகளுக்கு முன் இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் இது இன்று திரும்பவும் குழப்பகரமான நிலமையை அடைந்து போராட்ட அனுவங்கள்

தமிழ் நாட்டு ஜல்லிக் கட்டுப் போராட்டம்
தற்போதைய சிலியில் எற்பட்ட ஆட்சி மாற்றம்
அது போல் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற
வோல் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (Occupy Wall Street ) என்ற சுலோகத்தின் கீழ் வங்கிகளுக்கும் கார்போரேட்களுக்கும் எதிராக 17 செப்டம்பர் 2011 அமெரிக்காவிலும் இதற்கு ஆதரவாக கனடாவிலும் நடத்தப்பட்ட பாரிய போராட்டம் இறுதியில் பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்தாது முடித்து வைக்கப்பட்டது

ஜார்ஜ் பிலோயிட் (Geoge Floyde) என்ற கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறவெறி பொலிஸ்காரன் முழங்காலினால் நசித்து கொன்ற கோரச் சம்பவத்தை அடுத்து உலகளாவிய ரீதியில் வெடித்த நிறவாதத்திற்கெதிரான இயக்கம்

இவை சமூக மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தை வகித்தன.
எவ்வாறு இலங்கையில் போராட்டம் வெடித்தது
விளை பயிருக்கு பசளை இல்லை.
கடற் தொழிலுக்கு டீசல் இல்லை.
போக்குவரத்திற்கு வாகனங்கள் ஓடவில்லை.
குழந்தைகளுக்கு பால்மா இல்லை.
மக்களுக்கு அரிசி பருப்பு இல்லை.
இவற்றை வாங்க மக்களிடம் பணம் இல்லை
பணம் இருந்தால் கடையில் பொருட்கள் இல்லை.
படிப்பதற்கு வீட்டில் வெளிச்சமில்லை.
சமையல் கட்டில் சமைப்பதற்கு எரிவாயு இல்லை.
மின்வெட்டால் தொழில்கள் செயற்படவில்லை
நாட்டின் முழு பொருளாதாரமே ஸ்தம்பித்து போனது.

நாடே ஸ்தம்பித்தது
மருந்துகளை இறக்குமதி செய்ய அந்நிய செலவாணி இல்லை
அரசிடம்

வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட கஜானாவில் காசு இல்லை
இவ்வளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியில் ஊழலும் ஆடம்பர வாழ்வும் ஆணவ மனோபாவமும் மக்களின் ஆத்திரத்திற்கு மேலும் தூபமிட்டுள்ளது.

இதனைச் சரி செய்வதற்கான எதிர்கட்சி அரசியல் தலமைகள் கண்ணைக்கட்டி காட்டில் விட்டவர்கள் போல் தடுமாறி நின்றனர்
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் தன் எழுச்சியாக குழுக்களாக தனிநபர்களாக ஆரம்பித்து இன்றுள்ள நிலமையை அடைந்துள்ளது

(தொடரும்….)