முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு நீக்கம்

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (27) முதல் மீள அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தவிர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டணத்தை குறைக்க திட்டம்

மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் திட்டத்தில் பகுப்பாய்வு ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பகுப்பாய்வின் அறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பலியானவர்களுக்கு 62 மில்லியன் ரூபாய் நட்டஈடு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 246 மில்லியன் ரூபாய் நட்டஈடு பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 62 மில்லியன் ரூபாய்   உயிரிழந்தவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் 11 திட்டங்கள் விரைவாக ஆரம்பிக்கப்படும்

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் 11 திட்டங்கள் விரைவாக ஆரம்பிக்கப்படும். ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு  ஜப்பான் முழு ஆதரவு அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

ஆண்டுக்கான வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு நபரும் அந்த மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரிகளையும் 30 செப்டம்பர் 2024 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு வருவாய் திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன  தெரிவித்தார்.

சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை”  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) பார்வையிட்டார். 

பழைய முறைப்படி விசா பெறலாம்

பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும் விசா பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஹசன் நஸ்ரல்லா மரணம்? உறுதிப்படுத்தாத ஹிஸ்புல்லா

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

தெற்காசிய முன்னணி விமான சேவை ’ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’

தெற்காசிய சுற்றுலா சேவை விருது விழாவின் போது , தெற்காசியாவின் முன்னணி விமான சேவையாக “ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ”, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.