கல்வியை விட ஹிஜாப் முக்கியம்..: மகளை பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தை!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு திங்கட்கிழமையன்று பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று ஏராளமான மாணவிகள் பள்ளிகளையும், தேர்வுகளையும் புறக்கணித்து வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி ஐந்து முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை மாணவர்கள் எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்ல அனுமதியில்லை என்று உத்தரவிட்டது.

போர் மூளும் அபாயம்- உக்ரைனில் இருந்து ரஷ்யர்கள் வெளியேற்றம்

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்ற கிரெம்லின் வட்டாரம் திட்டமிட்டுள்ளது.

தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 

அமெரிக்க துணைத் தூதரை நீக்கியது ரஷ்யா

மாஸ்கோவில் இருந்து அமெரிக்க துணை தூதர் பார்ட்லே கோர்மனை ரஷ்யா வெளியேற்றியதை ரஷ்யாவின் வெளியுறவுத்துறை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. கோர்மன், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதருக்குப் பிறகு இரண்டாவது மிக மூத்த தலைமையில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் முடிவு

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.

இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள். நாட்டில் நேற்றைய தினம் 23 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் இது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,949 ஆக அதிகரித்துள்ளது.

“சீனாவினால் முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது”

நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மீண்டும் தலைதூக்கும் தீவிரவாதம்

கடந்த இரண்டு வாரங்களாக, குறிப்பாக பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம் மூன்று வெவ்வேறு பாரிய பயங்கரவாத தாக்குதல்களில் பல வீரர்களை இழந்தது.

கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடு கோரிப் போராடவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (கஜன்கள் அணி) செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம், கடந்த வாரம் சர்ச்சையானது.

யாழ்.பல்கலையில் பதற்றம்: வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் என எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுகின்றன.  அதனை அங்கீகரிக்குமாறு கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.