பிரபாகரனின் ஜீப் மஹரகமவில் ஓடுகிறது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.

வடக்கின் மீதான சீனாவின் ‘புதிய காதல்’

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர், கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என இலங்கையின் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் அடையாள விஜயமாக, நல்லூர்க் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது அமைந்துவிடுகின்றது. அதேபோல், சீனநாட்டின் தூதுவரும் மேலாடை களைந்து வேட்டி கட்டி,  கந்தன் தரிசனம் பெற்று, கோவில் வாசலில் எடுத்த புகைப்படங்கள் வௌியாகியிருந்தன.

உயிருக்கு உத்தரவாதமில்லாத வட்டக்கொடை ரயில்வே கடவை

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கொடை மேற்பிவு ரயில்வே கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் அதனை உடன் சீரமைத்து தருமாறு, வட்டக்கொடை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கல்வி அமைச்சரின் அறிவிப்பு

தரம் ஒன்றுக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கமைய 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

குறிஞ்சாக்கேணி – கிண்ணியா பஸ் சேவை ஆரம்பம்

குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவுக்கு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான இலவச பஸ் சேவை, இன்று (20) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறிஞ்சாக்கேணி பால புனரமைப்பு வேலைகள் நிறைவடையும்வரை இந்த பஸ் சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கவுள்ளது.

சீன தூதுவரின் கருத்தில் கரிசனை கொண்டுள்ளோம்

சீன தூதுவர் வடக்கில் தெரிவித்த கருத்தில் கரிசனை கொண்டுள்ளோம் என, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர்  சீன தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பாக  ஊடகவியலாளரினால் கேள்வி கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 417 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 580,102 ஆக அதிகரித்துள்ளது.

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி (இறுதி) 23))

(அ.வரதராஜா பெருமாள்)

இலங்கையின் அரசமைப்புக்கும் பொருளாதார கட்டமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் இடையே உள்ள உறவானது ஒரு முறைப்படுத்தப்பட்ட ஒழுங்குக்குள் உள்ளதல்ல. மாறாக இங்கு அரசானது பொருளாதார கட்டமைப்புகளின் அலகுகளுடன் மிகவும் உதிரித்தனமான – கட்டமைப்பற்ற வகையிலான தொடர்புகளையே –உறவுகளையே கொண்டுள்ளது.  

பாலின சமத்துவத்தைப் பேசுகிறதா கேரள மாணவர்களின் சீருடை திட்டம்?- கல்வியாளர்கள் சொல்வது என்ன?

மாணவ, மாணவியரிடம் பாலியல் சமத்துவத்தை உணர்த்தும் வகையில் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரே மாதிரியான பேண்ட், சர்ட் சீருடை அணியும் திட்டத்தைக் கேரள அரசு கொண்டுவந்துள்ளது.