பாகிஸ்தானுக்குப் படையெடுக்கும் ஆப்கன் மக்கள்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தானுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் ஸ்பின் போல்டக் / சமான் எல்லைப் பகுதி வழியாக ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் நுழைந்து வருகின்றனர். ஆப்கான் குடிமக்களுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் பாகிஸ்தானில் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றனர்”

அஷ்ரப் கானியை கைது செய்யுமாறு கோரிக்கை

தலிபான்களுக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பிச்சென்ற ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானியை கைது செய்யுமாறு இண்டர்போலுக்கு தஜிகிஸ்தானிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உச்சம் தொட்டன கொரோனா மரணங்கள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 171 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 102 ஆண்களும் 69 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 35 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குக் கீழ் 2 பேர் மரணித்துள்ளார்.

ஐ. அமெரிக்க வெளியேற்றம்: நியாயப்படுத்தும் பைடன்

ஆப்கானிஸ்தானிலிருந்து ஐக்கிய அமெரிக்கா வெளியேறுவதற்கு பின்னாலுள்ளதாக ஐ. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை அதிவிரைவாக தலிபான் கைப்பற்றியமை தொடர்பாக விமர்சனத்தை ஜனாதிபதி பைடன் எதிர்கொள்கின்ற நிலையிலேயே குறித்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தலிபான்களின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியிருந்த நிலையில், தங்களது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுமென பயந்த அரச ஊழியர்கள் அலுவலகங்களை விட்டுவிட்டு வீடுகளுக்கு சென்றிருந்தனர். 

பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு தலிபான்கள் வலியுறுத்து

தமது வெற்றி மகத்தானது என்று கூறும் தலிபான் தலைவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள், நாடு தமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென்று உறுதியளித்துள்ளனர்.

பிணவறைகள் நிரம்பின: டயர்களை போட்டு எரிக்க முடிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அப்புறுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பிணவறைகள் நிரம்பிவழிகின்றன. “ஆகையால், சலங்களை ஓரிடத்தில் வைத்து டயர்களைப் போட்டு எரியூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணத்திலக்க தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 2,428  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 368,011 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,188 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 316,528 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 44,720 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, மேலும் 171 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  6,434 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாணத்தில் 45,000 கொரோனா தொற்றாளர்கள்

மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இதுவரை 45,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.