பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் வைத்தியசாலையில் அனுமதி

தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவராக  வலம் வருபவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரை அதிகமாகக் காணலாம். இந்நிலையில், நேற்றுக் காலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் சென்னையிலுள்ள  தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“மனிதனை வாழவிட்டு நீங்களும் வாழுங்கள்” என்று சொன்ன மகத்தான ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்!

(Karthikeyan Chinnappa)

ரஷிய தலைநகரான மாஸ்கோவிலிருந்து 225கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது “யாஸ்னயா பாலியானா” கிராமம் அங்கே தான் 400,ஹெக்டேர் பரப்பளவில் பர்ச் மரங்களால் சூழப்பட்ட ரஷியாவின் மிகபிரபலமான எழுத்தாளராக விளங்கிய #லியோடால்ஸ்டாய் அவர்களின் பண்ணை அமைந்துள்ளது.

செல்வச்சந்நிதி அசாதாரணமான கோயில்

(பேராசிரியர் கா. சிவத்தம்பி)


தொண்டைமானாற்றிலுள்ள ‘செல்வச்சந்நிதி’ எனும் தலம் அதற்குரிய பக்திக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது அதிகம் ஆராயப்படாத ஒரு தலமாகவேயுள்ளது. இலங்கையின் சைவக்கோயில்கள் பற்றிய முக்கிய ஆராய்ச்சிகள் சமூக அதிகாரமுடை யோரின் கோயில்களையே பெரிதும் சுற்றி நின்றுள்ளன. இது மனித இயல்பின் பால்பட்டதே.

மனித உடம்பின் 99 இரகசியங்கள்

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…

அமெரிக்காவின் பிரகடனப்படுத்தாத ஆக்கிரமிப்பு

(Rathan Chandrasekar)

அய்யோ,
இந்தக் கியூபாவை
அமெரிக்கா படுத்துகிற பாடு இருக்கிறதே!
மிகக் கொடுமை!
கொரோனாக் காலத்தில் உலகின் பல நாடுகளுக்கும்
தன் மருத்துவர்களை அனுப்பி – உயிர் காத்த
இந்த சின்னஞ்சிறிய நாடு – அமெரிக்காவின் பொருளாதார முற்றுகையால் பேரவதிப்படுகிறது.

ரிஷாட்டின் பாராளுமன்ற உரை: தொனித்த இரு விடயங்கள்

(மொஹமட் பாதுஷா)

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆவார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமைப்படுத்துவது தொடர்பிலான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

விடை கொடுக்க மனமின்றி விடை கொடுக்கின்றோம்…..!

(தோழர் ஜேம்ஸ்)

‘தோழர் சென்னை வருகின்றேன் அடுத்த மாதம் கிராமங்களை நோக்கி பயணித்து அந்த மக்களுடன் பழக வேண்டும்….” என்றேன். இது இரு வருடங்களுக்கு முன்பு…

நாற்பது வருட கால தோழமை கலந்த நட்பு ‘வாருங்கள் தோழரே போவோம் கிராமங்களை சுற்றிப்பார்போம் நண்பர்கள் குழாமாக…”

’டெல்டா குண்டு’ வெடித்துச் சிதறலாம்

நாட்டின் முன்னால் வெடிப்பதற்கு தயாராக “டெல்டா குண்டு” உள்ளது என்றும் மக்கள் கவனமாக இல்லாவிட்டால் அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும்  ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.

தீர்த்தமாடியோரை தேடும்பணி தீவிரம்

மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி, தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்ட அடியார்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்காக, சுகாதார தரப்பினர் பொலிஸாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.