அமெரிக்காவின் பிரகடனப்படுத்தாத ஆக்கிரமிப்பு

உலகத்துக்கே மருத்துவம் வழங்கிய
கியூபாவின் மக்கள்
‘மருந்து ஏற்றும் சிரிஞ்சுகளைக்’கூட
பெறமுடியாத போதாமையால் விசும்புகிறார்கள்.
அதை விழுங்கத் துடிக்கும்
அமெரிக்க முதலையோ
‘உலகத்தில் ஜனநாயகம்’ என்று பேசுகிறது.
அதைக் கண்டித்து –
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் ISCUF
தமிழகமெங்கும்
கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது.
இஸ்கப் பொதுச்செயலாளர்
வழக்கறிஞர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில்
கோயம்புத்தூரில் நடந்த கியூப ஆதரவு
ஆர்ப்பாட்டப் படத்தை இங்கே பார்க்கிறீர்கள்.
சென்னையில் கலெக்டர் ஆபிஸ் முன்பு
நாளை நடத்துகிறார்கள்.
சென்னை நண்பர்கள் பங்கேற்கலாம்.
இயலாதவர் –
இங்கே ஒற்றை வரிக் கமெண்டில்
ஆதரவைச் சொல்லலாம்.