சிறுமியை ரிஷாட்டுக்கு தெரியாதா? – நேர்காணல்

(பா. நிரோஸ்)

டயகம சிறுமியின் மர்ம மரணம்:

பொன்னையாவுக்கும் நாகையாவுக்கும் என்ன தொடர்பு?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியாதென ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய தெரிவிக்கிறார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 937 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன்படி 267,602 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,194 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார். 

கறுப்பு ஜூலையும் இன்றைய நிலைமையும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து, ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அனைத்துப்பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் இணைந்து, கடந்த எட்டாம் திகதி பாராளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. 

கறுப்பு ஜூலை நாளன்று தோண்டப்பட்ட ‘தமிழ்க்கண்’

தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பச்சை அராஜங்கள் அரங்கேற்றப்பட்டு நேற்று (ஜூலை 23) ஆம் திகதியுடன்  38 வருடங்கள் கடந்துவிட்டன. அவ்வாறான நாளொன்றிலேயே மற்றுமொரு ‘தமிழ்க்கண்’ பிடுக்கப்பட்டுள்ளது.

மலையகச் சிறுமிக்காக யாழில் திரண்ட மக்கள்

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. யாழில் உள்ள மகளிர் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ். நகர மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குழந்தைகள், கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் இருந்து இதுவரை பதிவாகியுள்ளனர் என்று அந்த வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

வேலைக்குச் செல்லும் சிறுவர்கள்; அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வீட்டு வேலைக்குச் செல்லும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 02

(கருணாகரன்)

(இனவன் முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்)

இணையத்தைக் கலக்கும் திருவள்ளுவர் ஓவியம்

தமிழக முதலமைச்சராகவுள்ள மு.க.ஸ்டாலின் ‘திருக்குறளைத் தேசிய நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ‘என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடியிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கணேஷ் என்ற ஓவியர், தமிழ் பிராமி, வட்டெழுத்துகள், தற்போதைய நவீனப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் என 741 எழுத்துக்களைப் பயன்படுத்தி வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் அப்பதிவில் மு.க.ஸ்டாலினையும் டக் (Tag) செய்துள்ளார்.

இந்நிலையில் அவ் ஓவியத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் ”அன்பின் வழியது உயிர்நிலை” என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால், தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஓவியமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.