இந்திய நீர்மூழ்கி தூத்துக்குடி வருகை

இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ‘சிந்துஷாஸ்ட்ரா’ தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழுக்கு பிரதமர் விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜூலை 31ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய, 100 நகரங்களை நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

‘250க்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி’

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில் சுமார் 300க்கும் அதிகமான அட்டைப்பண்ணைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் நிருபராஜ்,கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் தற்போது 250க்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவி

மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

வாய்ப்பு கேட்கத் தெரியலை… அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!” – பாடகி ஜென்ஸி

தமிழ் திரை இசையுலகில் மறக்க முடியாத பாடகி, ஜென்ஸி. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். தன் மென்மையான குரலால் நம் மனதை கொள்ளை கொண்டவர். பிரபலமாக இருந்த நேரத்தில் மியூசிக் டீச்சராக தன் வாழ்வை மாற்றிக்கொண்டவர்.”பிறந்து வளர்ந்தது, தற்போது வசிப்பது எல்லாமே கேரளாவுலதான்.

அந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்

அந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் -பெயரைச் சொன்னால் கோவித்துக்கொள்வார்.தம்பட்டம் அடிக்கவேண்டுமா என்று சினப்பார்.

கோவையில் அவர் இளைஞனாய் உலவிய காலத்தே -கட்சி கட்சி என்று செங்கொடி பிடித்து அலைவதையும் -முழு நேர ஊழியராகி, கட்சிக்கு உழைக்கப்போகிறேனென்று ஒற்றைக்காலில் தவமிருந்ததையும் கண்ணுற்ற பெற்றோர் -அவரை திசை திருப்புவதற்காக எண்ணி மாய்ந்தனர்.

ஏதாகிலும் ஒரு வருவாயீட்டும் பணியில் இணைத்துக் கொண்டு விடுவானாயின், ‘திருந்தி விடுவான்’ என்று பகீரத முயற்சிகள் செய்ய -அந்தத் தோழர் என்ன செய்தார் தெரியுமா?தன் கையை எரியும் நெருப்பில் கருக்கிக் கொண்டார்!அதிர்ந்து போன பெற்றோர் வாயடைத்து நின்றனர்.அதுபோழ்தில் – ஒருநாள் – புலர்காலையொன்றில் அவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் புதன் பேச்சு

அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளை களைவதற்காக, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமையன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் நேற்று இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப ஆட்சியும் இலங்கையும்

(என்.கே.அஷோக்பரன்)

சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்‌ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் மற்றும் முக்கிய பொருளாதாரம் சார்ந்த அமைச்சுக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்,