மஹிந்தவை சந்தித்த முன்னாள் தமிழ் முதலமைச்சர்

வடக்கு கிழக்கு இணைந்த மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாளிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளுராட்சி சபை பிரதிநிதிகள் பலரும் பிரசன்னாகியிருந்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குவதாக இதன்போது வரதராஜா பெருமாள், மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.

விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்

(ஈழப் போராட்டம் என்பது விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரனுடன் தொடங்கி முடிவது அல்ல. இதோ ஒரு இடதுசாரி ஆயுதப் போராளியின் வரலாறு. யார் அவரைக் கொன்றார்கள்? இந்தக் கேள்விக்கான விடையை உங்களால் ஊகிக்க முடியும்தான்.அவருடனான எனது இரண்டு நாள் நினைவுகள் இங்கே.)

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைப் பேச்சு: கைதாகிறாரா சீமான்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர்க் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

அபிஜித் பானர்ஜி: பொருளாதார நோபல் இந்தியர்

சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் யோசனைகளுக்கும் அதன் போக்கைக் கணிப்பதற்கான புதிய உத்திகளுக்கும் கடந்த சில ஆண்டுகளாக முக்கியத்துவம் அளித்துவந்த நோபல் பரிசுக் குழு, இந்த ஆண்டு வளர்ச்சிப் பொருளாதாரத்தின் பக்கமும் வறுமை ஒழிப்பின் பக்கமும் கவனம்காட்டியிருக்கிறது.

காங்கிரஸும் பவாரும் வளர்ந்து தேய்ந்த கதை

பம்பாய் எப்போதுமே காங்கிரஸின் கோட்டையாகத்தான் இருந்திருக்கிறது. 1960-ல் மாநில எல்லை மறுவரையறைக் குழுவால் அது மகாராஷ்டிரமாகவும் குஜராத்தாகவும் பிரிக்கப்பட்டதற்கு வரலாற்றில் காங்கிரஸ் எதிர்ப்பாக இருந்துவந்திருந்தாலும், இப்பிரிவினை தேர்தல் முடிவுகளில் புதிய மாநிலங்களில் பெரிய தாக்கம் எதையும் உடனடியாக உண்டாக்கிவிடவில்லை. குறிப்பாக, மகாராஷ்டிரத்தில்!

மக்களோடு மக்களாய்

ஈச்சலம்பற்று முட்டிசேனை மாவடிச்சேனை கங்குவெளி போன்ற கிராமத்தில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர்வரதராஜபெருமாள் மக்கள் பிரச்சனையை கேட்டுக்கொ‌ண்டு‌ள்ள வேளை

புத்தளம் -மன்னார் பழைய வீதிக்கு பூட்டு

புத்தளம் -மன்னார் பழைய வீதி, மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த வீதியானது இன்று(14) முதல் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

நடுக்கடலில் மரணித்த மீனவருக்கு சபையில் அனுதாபம்

நடுக்கடலில் மரணித்த காரைதீவு மீனவர் சிறிகிருஸ்ணனுக்கு, காரைதீவு பிரதேச சபையில் அனுதாபம் நிறைவேற்றப்பட்டதுடன், அவரது மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவருக்கு தற்காலிக சிற்றூழியர் தொழிலொன்றை வழங்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் 20ஆவது மாதாந்த அமர்வு, சபை மேயர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், சபாமண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெண்உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி, “மரணித்த மீனவரின் குடும்பத்துக்கு உண்மையில் உதவ வேண்டுமானால் மீண்டும் நிதி வழங்குவதை விடுத்து, பிள்ளைகளில் ஒருவருக்கு ஒரு சிறுதொழிலையாவது வழங்குங்கள். அது அக்குடும்பத்துக்கு பேருதவியாகவிருக்கும்” என்ற விசேட பிரேரணையை முன்வைத்தார்.

இப்பிரேரணையை, தவிசாளர் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் மனிதாபிமானத்தோடு கையை உயர்த்தி ஆதரித்தனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்கான விமான சேவைகள் முதலில் இடம்பெறவுள்ளன.

‘விஸ்வரூபம் காட்டப்படுவதன்று; காணப்படுவது’ என்று புதுமையான வியாக்கியானம் அளித்தவர் ஜே.கே.

கல்லூரி மேடையொன்றில் “மாணவர்களே…
நீங்கள் எல்லோரும் மாடு மேய்க்கப் போகலாம்!” என்று கூறிவிட்டு,
சில நொடிகளுக்குப் பிறகு
“மாடு மேய்த்தவன்தான் கீதை சொன்னான்”
என்று சொல்லி கலக்கியவர்.