விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்ல?


வடக்கு மாகாண சபையை ஊடாக எதையும் செய்யாது கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்லர் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.
யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வேண்டாம் சாதி மத இன பேதங்கள்

காதலுக்காக திருகோணமலையில் ஒரு கொலை.இவை நமது சமூகத்தில் புதியவை அல்ல.சில வருடங்கள் முன்பாக காதல் விவகாரத்தால் கனடாவிலும் ஒரு இளைஞன் கொல்லப்பட்டான்.

பாரிஸ் Notre Dame எரிகிற செய்தி கேள்விப்பட்டபோது நினைவுக்கு வந்தது


வந்தது 2010ல் வெளிவந்த #சிவத்தம்பியும் #நாற்பது #கோமாளிகளும் படத்தில் வந்த பின்வரும் காட்சிதான். George குருச்சேவ் ஆங்கிலத்தில் எழுதிய Nutty Professor and Forty Evil Clowns என்ற புத்தகத்தின் தழுவல்.

நீர்வேலி வாழை

(வேதநாயகம் தபேந்திரன்)

நீர்வேலி என்றவுடன் கண்ணுக்கு முன்னால் வருவது வாழை. வாழைச் செய்கைக்கு மிகவும் பிரபலமான கிராமம். வேறு பல விவசாயக் கிராமங்களிலும் வாழைச் செய்கை உள்ளது. அதிலும் மண் விழும் நிலை வந்து விட்டது. மரபணு மாற்றப்பட்ட ஹவந்தீஸ் எனும் இன வாழை விவசாயிகளுக்கு தற்போது இலவசமாக வழங்கப்படுகின்றது.

பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில் சாதிவெறி வ‌ன்முறை. த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் க‌ள்ள‌ மௌன‌ம்.

(Kalai Marx)
ஒரு கால‌த்தில் ந‌க்ச‌லைட்டுகளுட‌ன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் த‌னித் த‌மிழ் நாடு காண்ப‌த‌ற்காக‌ ஆயுத‌ப்போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ பொன் ப‌ர‌ப்பி கிராம‌த்தில், இந்த‌ சாதிவெறிக் கல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்துள்ள‌மை குறிப்பிட‌த் த‌க்க‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌மான‌து, ஆளும் வ‌ர்க்க‌ம் ம‌க்க‌ளை பிரிப்ப‌த‌ற்கு, ஓட்ட‌ர‌சிய‌ல் எந்த‌ள‌வு ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கிற‌து என்ப‌தை எடுத்துக் காட்டியுள்ள‌து.

லிபியாவின் கடாபி

(Rathan Chandrasekar)

பல்லாண்டுகள் முன்….
லிபியாவின் கடாபி வீட்டின்மீது
அமெரிக்கா குண்டுபோட்டது.

இறந்துபோனவர்களுள் கடாபியின்
ஒன்றரை வயதுக்குழந்தையும் ஒன்று.

வரலாற்றுச் சூழல் அழைக்கிறது மாற்று அரசியல் தலைமைக்காக ஒருங்கிணைவோம்

நேர்காணல்

– முருகேசு சந்திரகுமார்
நேர் கண்டவர் – வாசுகி சிவகுமார்
தமிழரின் அரசியல் நகரமுடியாத நிலையில் மாற்றுத்தலைமையையும், மாற்று அரசியலையும் எதிர்பார்த்து நிற்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதைக்குறித்துப் பேசுகிறார் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமார்.
தமிழ் மிதவாத அரசியல் சக்திகளிடத்திலே இருக்கின்ற எதிர்மறையான அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல், ஊடகங்களும் மக்களும் பொது நிறுவனங்களைச் சேர்ந்தோரும் இனவாத அரசியலின் பின்னே கண்ணை மூடிச்செல்லும் அபாயத்தை இந்த நேர்காணலில் அவர் விளக்குகிறார்.
ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்ட அரசியல் உரையும் வாழ்க்கை மேம்பாடும் சமூக சமத்துவமுமே தமிழ் மக்களுடைய அரசியல் தேவையாகும். இதையே தாம் முன்னெடுப்பதாக வலியுறுத்தும் முருகேசு சந்திரகுமார், மாற்று அணிக்கான கருக்கட்டலை இங்கே கோடி காட்ட முற்படுகிறார்.

வன்னியின் ஆறுகள்.

(Karunakaran Sivarasa)
வன்னியின் வளம் குளமென்றால், குளங்களுக்கு ஆதாரம் ஆறுகள். வன்னியில் ஏறக்குறைய இருபது ஆறுகளுக்கு மேலுண்டு. கனகராயன் ஆறு, குடமுருட்டி ஆறு, மண்டக்கண்ணாறு, கலவரப்பாறு, நாயாறு, பேராறு, அருவியாறு, பறங்கியாறு, பாலியாறு, நெத்தலியாறு, பிரமந்தனாறு, மூங்கிலாறு, என சிறிதும் பெரிதுமாக ஓடுகின்றன.

மட்டக்களப்பு மரணங்கள் மற்றவர்களுக்கானது அல்ல…..! அது எமக்கானதும்தான்….!!

(சாகரன்)

மரணம் வலியானது அதுவும் எதிர்பாராத மரணங்கள் ரணமானது. சுற்றுலா பயணத்தின் நடுவில் உறவுகளுடன் குலாவி மகிழ்ந்திருக்கையில் அது நடைபெற்றால் யாருக்குதான் அதிர்சியை ஏற்படுத்தாது. வாகன விபத்து மரணங்கள் தவிர்க்கப்படக் கூடியவை. வீதிகள் கொள்ளக் கூடியளவு வாகனங்களை விட அதிகமான வாகனப் புழக்கங்கள்… தாங்க முடியாத வேகங்களை அனுமதித்த வீதி வேக அனுமதிப்பு…. போக்குவரத்து விதிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காத அரச நிர்வாகம்… விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் காசு கொடுத்து சமாளிக்கலாம் என்ற மனநிலையில் உள்ள வாகனச் சாரதிகள்… இதனை தமக்கு சாதகமாக்கி கையூடுவாங்கும் காவல்துறை என்று போக்குவரத்தில் பாதுகாப்பை காற்றில் பறக்கவிட்ட நிலமை போதியளவு ஓய்வு தூக்கம் கால அவகாசம் இல்லாத வாகனம் செலுத்தும் சூழல் இப்படி பலவும் எம்மை என் உறவுகளிடம் இருந்து எப்போதும் பிரித்தெடுக்கலாம் என்ற சூழல் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வீதியில் பயணிக்கும் போது நமக்கு ஏற்படும்.