பாரிஸ் Notre Dame எரிகிற செய்தி கேள்விப்பட்டபோது நினைவுக்கு வந்தது

ஷோபாசக்தி எஸ். #பொன்னுத்துரையையும் கி.பி #அரவிந்தனையும் வசந்த காலத்தில் பாரிஸ் மாநகரில் லாசீன் ஆற்றங்கரையிலுள்ள சிறிய கபே ஒன்றினுள் பின்னணியில் Notre Dame தேவாலயம் தெரிய பேட்டி காண்கிறார். மூவரும் பியர் சாப்பிடுகிறார்கள். பின்வருமாறு சில பகுதிகள் வருகின்றன.

……………..
(மூவருக்கும் கீறல். கீறல் குறைவான ஷோபாசக்தி ஆற்றில் பாய்ந்து எஸ்கேப்.)

அப்படத்தின் #முழுவிமர்சனம்

படம் ஆரம்பமாகிய ஓரிரு நிமிடங்களிலேயே பெருந்தமிழ் வரலாற்று நாயகனான “முள்ளி வாய்க்காலில் வெள்ளிபார்த்த வெங்காயத் தலையனின்” கதையே இது என்பது யாவருக்கும் புரிந்துவிடும். பாட்டுடைத்தலைவனான மகா பிரபாகரன் என்கிற பாதி வரலாற்று நாயகனும் மீதி கடவுளுமானவனின் கொடுங்கோல் பாசிஸ ஆட்சிக்கு ஒத்தூதி தங்கள் சொத்துக்களையும் பத்துக்களையும் செல்வாக்கையும் பாதுகாத்துச் சேகரித்துக்கொண்ட பச்சோந்திகளான நாற்பது தமிழ் கவிஞர்கள் கலைஞர்கள் மாக்சிஸ்டுகள் பேராசிரியர்கள் போலிப்பேராசிரியர்கள் ஊடகவியலாளர்கள் ஊடக ரவுடிகள் ஆகியோரின் பரிஹாசத்திற்கும் பரிதாபத்திற்குமுரிய வாழ்க்கையாக இத்திரைப்படம் விரிகிறது.

எழுத்தோட்டம் போகின்றபோது பிரித்தானியாவிலுள்ள பிரசித்தமான இங்கிலிஷ் லேக் டிஸ்றிக்கில் “அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது” என்கிற பாடலுக்கு தாரகி சிவராமும் ஆனந்தியும் காதலர்களாக ஆடுவது கமராவில் அற்புதமான மாயமந்திரமாக வந்திருக்கிறது.

ஒரு காட்சியில் Indophobia என்ற கடுமையான நோயால் தன் வாழ்நாள் பூராகவும் வருந்திவாழும் பேராசிரியர் சிவசேகரம் குறித்த நோய்க்கு சிகிச்சையாக ஒரு சீனத்தேவதையிடம் (சீன டைகர் பாம் பூசப்பட) மசாஜ் எடுத்துவிட்டு வந்து ஒரு அரசியல் கூட்டத்தில் அமெரிக்க உளவு நிறுவனத்தின் சதியாலேயே கேணல் கருணா விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்தார் என்று பிரசங்கம்செய்கிறபோது அதே கூட்டத்தில் மாறு வேடத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் கருணா தன் மாறுவேடத்தைக் கலைத்துவிட்டு “மங்கம்மாவின் புண்டைக்குள் இருக்கிறதும் உன்ரை மண்டைக்குள்ள இல்லை” என்ற தமிழ் பாலியல் நாட்டார் கதை நாயகனான எம்டனின் கதைவசனத்தை உபயோகித்து சிவசேகரத்தை தூசணத்தால் திட்டிவிட்டு வெளியேறுகிறபோது கருணாவைத்துரத்திச் சென்று நையப்புடைக்கிறார்கள் தேசிய கலை இலக்கியப்பேரவையின் இளைஞர் அணித்தொண்டர்கள்.

ஒரு பிளாஷ் பாக் காட்சியில் சேரனும் ஜெயபாலனும் தங்களது குருநாதராகிய பேராசிரியர் கைலாசபதி தன்னுடைய ஒரு மாணவியை யாழ் பல்கலைக்கழகத்தில் இணக்கி செக்ஸ் செய்கிறபோது ஒழித்திருந்து பார்ப்பதான காட்சி வருகிறது.அழியாத கோலங்கள் திரைப்படத்தில் வரும் காட்சியான மூன்று சிறுவர்களும் தங்கள் ஊரின் போஸ்ட் மாஸ்டர் ஒரு பெண்ணோடு திருட்டுப் புணர்ச்சியில் ஈடுபடுகிறதை ஒழித்திருந்து பார்ப்பதின் அப்பட்டமான காப்பியாவே மேற்கூறிய சேரன் ஜெயபாலன் சம்பந்தப்பட்ட காட்சி இருக்கிறது.

இலங்கைத்தமிழர்களின் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி சரியான நிலைப்பாடு எடுக்கவில்லை என்ற சிவத்தம்பியின் குரல் அசரீரியாகப்போனபின்னர் கருணாநிதி சிவத்தம்பியின் காதைத்திருகுகிற காட்சி வருகிறது. சிவத்தம்பியின் காதைத்திருகிக்கொண்டே கருணாநிதி கேட்கிறார்.

கருணாநிதி: “எதடா சரியான நிலைப்பாடு? நீயே சொல்லு. உன்ரை மனுசியின்ரை வல்வைக் குலத்தை மட்டும் காப்பாற்ற ஒட்டு மொத்தமான முழுத்தமிழ்நாடு ஈழத்தமிழ் ஈழத்து இந்திய வம்சாவழித்தமிழ் இப்படியான மொத்த தமிழ் மக்களின் நலன்களையும் அடகுவைக்கச் சொல்லுகிறாயோடா? உன்னைப்பொறுத்தவரையில் கடைசி நாட்களிலை முள்ளிவாய்க்காலில் முடங்கிப்பதுங்கிக்கிடந்த பிரபாகரனை நான் தலையிலை நிண்டெண்டாலும் காப்பாற்றியிருக்க வேணும். ஏங்கட திமுக கட்சி மத்தியிலை காங்கிரசுக்குக்குடுத்த ஆதரவை நிறுத்தி ஆட்சியைக்கவிட்டிருக்க வேணும். என்ன ஆரியக்கூத்தாடியெண்டாலும் உன்குலத்தான் பிரபாகரனுக்கு உயிர்ப்பிச்சை குடுத்திருக்கவேணும். இதுதான் உன்னைப்பொறுத்தவரையில் சரியான நிலைப்பாடு. சரி நான் எப்படியோ பிரபாகரனை காப்பாற்றிப்போட்டன் எண்டு வச்சுக்கொள்ளடா. பிறகு தமிழ்நாடும் பிரபாகரன்ரை பாசிஸ குத்தகைக்குப்போயிருக்கும். உங்கட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமில்லை என்ர திமுக அம்மாவின்ரை அதிமுக விஜயகாந்தின்ர தேமுதிக மிச்சமிருக்கிற சாதிக்கட்சியள் கம்மூனிசக் கட்சியள் எல்லாம் வன்னிக்குக் காவடி எடுத்துப்போட்டு வந்துதான் வன்னியில பிரபாகரன் சொன்னபடிதான் அரசியல் செய்யலாம். உனக்குத் தெரியும்தானேடா ஒரு காலத்தில பாலும் தேனும் வழிந்தோடின ஆபிக்க கண்டத்தை இண்டைக்கு பிரபாகரன் மாதிரியான ஒரு அம்பது விறைச்ச மண்டைக்காப்புலியள் மனுச ரத்தம் வழிஞ்சோட காட்டாட்சி செய்து என்ன மாதிரி பாழ்படுத்தி வச்சிருக்குதுகள்? இப்படியான ஆபிரிக்கா மாதிரித்தான் சில கொடுங்கோல் சிற்றரசரின் பூமியாகத்தான் முழு இந்தியாவையும் மாத்தியெடுத்திருப்பான் பிரபாகரன் இந்தமுறை மட்டும் அவனுக்கு உயிர்ப்பிச்சை குடுத்துக் காப்பாற்றியிருந்தால்.”

சிவத்தம்பி: “சேர் காது வலிக்குதுசேர். விடுங்கோ சேர்” (கருணாநிதி அந்தக்காதைவிட்டு மற்றக் காதை பிடித்துத்திருகிக்கொண்டே)

கருணாநிதி: “ யாழ்ப்பாணத்தில எந்த ரியூட்டரியிலையெடா நீ மார்க்ஸிசம் படிச்சநீ”

சிவத்தம்பி: “ Jaffna Campus இலை தான் சேர்”

கருணாநிதி: “ கிழிஞ்சுது போ. நீ உண்மையில ஒரு மார்க்ஸிஸ்டோ அல்லது ஒரு ரூபாவதியிஸ்டோ?”

சிவத்தம்பி: “ சேர் நான் உண்மையில ஒரு ரூபாவதியிஸ்ட் சேர். இதை வெளியிலை சொல்லிப்போடாதேங்கோ சேர்.”

சிவத்தம்பியை மேற்கு ஜேர்மன் விவரணப்படப்பிடிப்பாளர் ஒருவர் பேட்டி காண்பதும் மிகநன்றாக வந்திருக்கிறது. பின்வருமாறு உரையாடல் செல்கிறது.

மேற்கு ஜெர்மானியன்: பேராசிரியரே என்ன காரணத்துக்காக அறுபதுகளில் ஒப்பீட்டு அடிப்படையில் சீனக்கம்யூனிசம் சிறப்பானதாக இருந்தபோதிலும் நீங்கள் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் ஆகினீர்கள்.

சிவத்தம்பி : (வீடியோவை நிறுத்துமாறு சைகை செய்கிறார். அது ஆனதும்) எடேயப்பா அப்ப எங்களுக்கெல்லாம் கம்யூனிசக் குரு பொன் கந்தையாதான். பொன் கந்தையா உயிரோடை இருந்த கடைசி நாட்களிலேயே சீன சார்பு மார்க்சிஸ்ட் உவன் சண்முகதாசனுக்கு கந்தையாவின்ரை மனுசியோட தொடுப்பு வந்திட்டுது. கந்தையா செத்த கையோடயே நாங்கள் எல்லாம் அக்கா எண்டு ஆசை அருமையாக் கூப்பிட்ட கந்தையாவின்ரை மனுசியோட சண்ணன் ஓப்பிணாய் குடும்பம் நடத்தத்தொடங்கீட்டான். கந்தையாவின்ர மனுசியா மட்டுமே நாங்கள் அறிந்தஅக்காவை இன்னொருத்தன்ர மனுசியா என்னால ஏற்றுக்கொள்ள முடியேல்ல. சீன சார்பாய் நான் தொடர்ந்தும் இருந்தால் உந்தக் கேவலத்தை எப்பவும் பார்க்கவேண்டி வந்திருக்கும். உந்தத் துன்பத்தைத் தவிர்க்கிறதுக்குத்தான் நான் மாஸ்கோ சார்பு கொம்யூனிஸ்ட் ஆனனான்.

NLFT இயக்கத்திலிருந்த ஒரே குற்றத்திற்காக புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்த தமிழ் வாத்தியார்அருணாச்சலம் இரவியை கொல்வதற்காகத் துரத்தியபோது இரவி கொழும்புக்குத்தப்பிவந்து பிறகுதிரவியந்தேட ஜெர்மானிக்கு வந்து பிறகு லண்டன் வருகிறார். இலண்டனில் திரவியத்தோடு மினுக்கமான சீவியத்தையும் தேடவேண்டுமென்றால் தன்னைக்கொல்ல ஆடர் குடுத்த அதே பிரபாகரனுக்கு சூத்து கழுவினாலே அது சாத்தியமாகும் என்பதைக்கண்டடைந்த அருணாச்சலம் ஐபீசி ஈழமுரசு என்கிற புலிகளின் நீலப்படக் கொம்பனிகளில் தும்படிக்கிறார். இந்த அனுபவங்களைக்கொண்டு தானே பிறகு ஒரு பேப்பர் என்ற தென்னாசிய நீலப்படக் கொம்பனி ஒன்றை நிறுவுகிறார். “திறந்துபிடி பறந்துவாறன”, “கதவில்லாத கக்கூசு” போன்ற வெற்றிகரமான தமிழ் நீலப்படங்களை நெறியாள்கை செய்கிறார். தமிழீழத்தின் முதலாவது Porn Classic ஐ தானே தயாரித்து இயக்கவேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்ட இரவி 2009 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சிறீலங்கா படைகளால் முற்றுகையிடப்பட்ட முள்ளிவாய்க்காலுக்குள் தன் உயிரைக்கூட துச்சமாக மதித்து தலைசிறந்த ஐரோப்பிய ஆங்கிலேய நீலப்பட விற்பன்னர் குழுவைக்கொண்டு விரைகிறார். மாபாதகன் பிரபாகரனால் பணயக் கைதிகளாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த எளிய சனங்கள் யாராவது அப்போது நீலப்படத்தில் நடிக்கும் மனோநிலையோடு இருந்திருப்பார்களா என்ன? இரவி தானே நீலப்படக் கதாநாயகனாக நடிக்க (வல்லவனுக்குப் பூலும் ஆயுதம்) இரவியின் அந்தரங்கச் செயலர் மாஸ்கோ நகரவாசியான ரூஷ்யாக்காரி கதாநாயகியாக நடிக்க (மசிர விட்டான் சிங்கன்) இரவியே இயக்கிய நீலத்திரைக்காவியம்தான் “முள்ளிவாய்க்காலில் கள்ளிப்பால் “. இது ஒரு அற்புதமான Asian Porn Classic என்று பரிந்துரை செய்து எழுதியிருக்கிறது Playboy Magazine. ஆமோதிக்கிறது சனல் போ(ர்)

விடுதலைப்புலிகளின் Sado Masochist/Fetishist Hard Core Porn Artist ஊத்தை சேதுவை (துன்னாலை நடராசா சேதுரூபன்) அல் ஜசீரா நிருபர் பேட்டி காண்கிறார். அதன் பகுதிகள் வருமாறு

அல் ஜசீரா: பதின்ம வயதில் இலங்கையிலிருந்து லண்டனுக்கு அகதியாக வந்து வேலைக்குப்போகாது கள்ள மட்டை, களவு, Gang கலாச்சாரம், தினக் குடி, போதைவஸ்து பாவனை வேசையாட்டம், புலிகளுக்கு ரவுடி முகவர் வேலை, ஊடக ரவுடித்தனம் என்பனவற்றில் ஈடுபட்டு தங்களது இருபதுகளின் இறுதியில் கொழும்புக்கு டிப்போட் செய்யப்படும் தமிழ் இளைஞர்களுக்கு உங்கள் தீர்வு என்ன?

ஊத்தை சேது : இந்த இளைஞர்கள் தங்களது துரதிஸ்டமான நிலமையை அதிஸ்டமான நிலமையாக மாற்றவேண்டும். கொழும்புக்கு டிப்போட் செய்யப்படும் இளைஞர்கள் உடனடியாகவே கொழும்பில் காரியத்தில் இறங்கவேண்டும். நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஐரோப்பியக் குடியுரிமைபெற்ற ஏராளமான தமிழ் பேரிளம் பெண்கள் இலங்கைக்கு ஒவ்வொரு மாதமும் விடுமுறைக்காக வருகிறார்கள். இப்பெண்களில் பலர் தாம்பத்திய வாழ்வில் திருப்தி இல்லாமல் இருக்கிறார்கள் அல்லது விவாகரத்துச் செய்திருக்கிறார்கள். கொழும்பின் லாட்ஜ்களிலும் ஹொட்டல்களிலும் வந்து தங்கியிருக்கும் இப்பெண்களை டிப்போட் செய்யப்படும் இளைஞர்கள் உடனடியாகவே இலக்கு வைக்கவேண்டும். மூன்று நேரக்குடியும் ஒரு நேரச்சாப்பாடுமாக வாழ்ந்து டிப்போட் பண்ணப்படும்போதே சலரோகம் சர்க்கரை வியாதியோடு கொழும்புக்குவரும் இளைஞர்களுக்கும் தங்களின் தாம்பத்திய பலத்தைக்காட்ட உதவி தேவை. எம்.ஜி.ஆரின் தங்க பஸ்மம் சிட்டுக்குருவி லேகியம் எல்லாம் பொய்வேலை. கொழும்பில் கிடைக்கும் வயக்கரா எல்லாம் போலி என்பதால் இலண்டனிலிருந்து டிப்போட் பண்ணப்படும்போதே ஒறிஜினலான வயக்கரா இவ்விளைஞர்களின் கைவசமிருப்பது அவசியம். வயக்கராவின் உதவியோடு இப்பெண்ணொருவருக்கு தங்களுடைய தாம்பத்திய பலத்தைக்காட்டி அவளின் ஆசியோடு நோர்வேக்குப்போய் செட்டில் ஆவதுதான் எனது தீர்வு.

அல் ஜசீரா: 2009 மே 18 வரை புலிகளின் ஏகபோக ஊடக ரவுடியாக இருந்து புலிக்குச் சேவகம் செய்து அதிகாரம் கோலோச்சியவர் நீங்கள். இப்போது “பின் புலிக்காலத்தில்” வாழ்வை எவ்விதம் எதிர்கொள்கிறீர்கள்?

ஊத்தை சேது : “ Arse lickers don’t change: Only arses change ” என்கிற முதுமொழிக்கமையவே என்னுடைய வாழ்வை எப்போதும் “பின்புலிக்காலத்திலும்” வடிவமைத்துள்ளேன். புலி சேடமிழுத்துக்கொண்டிருந்த கடைசிக்காலத்திலேயே நான் மகிந்த மாத்தையாவோடு ஒரு டீல் போட முயன்றேன். இன்னமும் சரி வரவில்லை என்றாலும் சரி வந்தமாதிரித்தான். என்னுடைய அப்பன் நடராசா துன்னாலையில ஒரு பேர் பெற்ற சாத்திரி. சாத்திரம் என்ர ரத்தத்திலும் ஊறினது. கெட்டசாமான் பிரபாகரன் நாறப்போறான் எண்டதை 2009 சனவரியில கிளிநச்சிபோன கையோட என்ர சாத்திர அறிவு தெளிவாச்சொன்னது. நடக்கவிருப்பதை புனைந்து சொல்வது என்ர அப்பன்ர சாத்திரம். நடந்ததை புனைந்து சொல்வது என்னுடைய நிதர்சனம் டொட் கொம் சாத்திரம். எப்போதும் போலவே இப்போதும் என்னுடைய வீர சாகசங்களை இணையத்திலேயே நடாத்திவருகிறேன். பாட்டும் நானே பரதமும் நானே என்ற தத்துவத்திற்கமைய நடந்துவரும் Wikipedia இணையதளம் உங்களுக்குத்தெரிந்திருக்கும். இவ்விணையத்தளமே இப்போது என் தஞ்சம். இதில் நானே என்னைப்பற்றி வெற்றிகரமாக புனைந்து எழுதுவதே என்னுடைய சாகசம். புலி மடிஞ்ச கையோடேயே நான் என்னை ஒரு புலியை எதிர்த்துப்போராடிய மாற்றுக்கருத்தாளனாக Wikipedia வில் எழுதிப்புனைந்தேன். என்னுடைய வேறு தொடர்புகளை வைத்து defence.lk மற்றும் army.lk என்பனவற்றில் எனக்கு இப்போது புலிகளால் ஆபத்து என்று அவர்களை நம்பவைத்தேன். இவ்விரு இணையங்களிலும் நீங்கள் வடிவாக ஆராச்சி செய்துபார்த்தால் தெரியும். ஊத்தை சேதுவாகிய என்னை புலிகளின் ரவுடி ஏஜண்ட் என்ற கட்டுரை இருக்கிற இவ் இணையங் களிலேயே புலிகளால் எனக்கு ஆபத்து என்கிற கட்டுரைகளும் வந்துள்ளளன. சிங்களவனுக்கு மேல் வீடு இல்லை என்கிற பாலா அண்ணையின்ர தியறிக்கு இவற்றைவிட வேற என்ன ஆதாரம் தேவை? wikipedia வில் ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதி தங்களின் PhD வண்டவாளங்களை அம்பலப்படுத்தும் பல ஐரோப்பிய அமெரிக்க ஆஸ்திரேலிய சிங்கள அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளில் ஊத்தை சேது நடராசா சேதுரூபனாகிய அடியேன் இப்போது புலியை எதிர்த்துப்போராடிய மாற்றுக்கருத்தாளனாக உலாவருவதைக்காணலாம். நான் நீரில்லாமலே நீச்சலடிக்கும் வித்தை கற்ற மந்திரக்காரன். நான் ஒரு பத்திரிகையாளன் என்று சொல்வதற்கு ஆதாரமாக காட்டுவதற்கு எந்த செய்திக்கட்டுரையோ விமர்சனக்கட்டுரையோ எழுதியதுமில்லை. எழுதக்கூடிய வல்லமையும் எனக்கில்லை. ஆனாலும் நான் ஒரு புலியை எதிர்த்துப்போராடிய மாற்றுக்கருத்துப்பத்திரிகையாளன் என்ற புனைவை பலர் நம்பச்செய்யும் வித்தை கற்றவன்.

“அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம கனவு தமிழீழக் கனவு இப்ப ரொம்பச் சுட்டுப் போச்சுண்ணே. அதைச் சொன்னால் மானக்கேடு சொல்லாட்டி வெட்கக்கேடு”
என்ற பாடலை பத்மனாப ஐயரும் யேசுராசாவும் பண்ணைப்பாலத்தில் பாடி ஆடுகிறார்கள்.

ஷோபாசக்தி எஸ். பொன்னுத்துரையையும் கி.பி அரவிந்தனையும் வசந்த காலத்தில் பாரிஸ் மாநகரில் லாசீன் ஆற்றங்கரையிலுள்ள சிறிய கபே ஒன்றினுள் பின்னணியில் Notre Dame தேவாலயம் தெரிய பேட்டி காண்கிறார். மூவரும் பியர் சாப்பிடுகிறார்கள். பின்வருமாறு சில பகுதிகள் வருகின்றன.

ஷோபா: பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் அவமான முறையில் தோற்கடிக்கப்பட்டமைக்கு காரணம் என்னங்கோ?

எஸ்.பொ: என்னுடைய ஸ்கிறிப்டை பிரபாகரன் பின்பற்றாததனாலேயே அவர் தோல்வியைத்தழுவினார். நான் எத்தனை பேருக்கு ஸ்கிறிப்ட் மற்றும் கதை எழுதிக்கொடுத்து அவங்களை எழுத்தாளராக்கியிருக்கிறன். டொமினிக் ஜீவாக்கும் டானியலுக்கும் கதை எழுதிக்கொடுத்து எழுத்தாளராக்கினன். இப்ப கடைசியா இரண்டாயிரமாம் ஆண்டுகளிலேயும் ஆஸ்திரேலியாவில இருக்கிற ஆ.சி.கந்தராசாவுக்கும் கதை எழுதிக்கொடுத்து அவனை இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு எடுக்க வச்சன். முந்தி டொமினிக் ஜீவாவும் நான் எழுதிக்கொடுத்த கதைகளாலதான் சாகித்திய மண்டலப்பரிசு பெற்றான். நான் எழுதிக்கொடுத்த கதைகளைக்கொண்டு எல்லாரும் சாகித்தியப்பரிசை அடிச்சுக்கொண்டு போட்டாங்கள். எனக்கு மட்டும் இன்னும் சாகித்திய மண்டலப்பரிசு இல்ல. அப்பேற்பட்ட திறமான என்னுடைய ஸ்கிறிப்டை பிரபாகரன் பின்பற்றியிருந்தால் இண்டைக்கும் அவன் ஆட்சியில இருந்திருப்பான்.

ஷோபா: உங்கட ஸ்கிறிப்ட் எம்படி இருந்திருக்குமுங்கோ?

எஸ்.பொ: என்னுடைய ஸ்கிறிப்டின் படி பிரபாகரன் முள்ளிவாய்க்காலிலை இருந்து கடலுக்குள்ளால ஒரு சுரங்கம் கிண்டி அதுக்குள்ளால தப்பி சுரங்கம் போய் முடிகிற கொங்கு நாட்டில மண்ணைப்பிரிச்சுக்கொண்டுபோய் லாண்ட் பண்ணுகிறார். கொங்கு நாட்டில் தனது படைகளைக்கொண்டு கொங்கு நாட்டைப்படையெடுத்து அங்கு தனது இரண்டாவது வன்னி ராச்சியத்தை நிறுவுகிறார். தமிழ் நாட்டின் மத்தியிலிருந்து கொண்டு பிரபாகரன் படிப்படியா தொண்டை நாடு நாஞ்சில் நாடு சேர நாடு என அனைத்து தமிழ் நாடுகளையும் கைப்பற்றுகிறார். பிறகு முழு பாரத தேசத்தையும் கைப்பற்றி முடிவாக கி.பி 2020 ம் ஆண்டு கங்கை கொண்டு கடாரம் வெல்கிறார். அதாவது கி.பி 2020 ம் ஆண்டில் இமயத்தில் புலிக்கொடியைப்பறக்கவிடுகிறார். ஆம் இரண்டாம் சோழப்பேரரசு உதயமாகிறது.

ஷோபா: (கி.பி அரவிந்தனையும் பார்த்தபடி) நீங்கள் இருவரும் சாதியப்போராட்டத்தை புறக்கணித்து தேசிய போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தீர்கள். சாதிய அடக்கு முறைக்கு உங்களது தீர்வு என்ன?

எஸ்.பொ: தம்பி சாதி அடக்கு முறைக்கு தீர்வு ஒவ்வொரு தலித்தும் என்னைப்போல ஒரு வெள்ளாடிச்சியை கிளப்பிக்கொண்டுபோய்க் கட்டுவதுதான். இவ்விதம் சாதியை ஒழித்த பின்னர் அனைவரும் புலிகளின் பின்னால் அணிதிரவேண்டும்.

ஷோபா: எல்லா தலித்துக்கும் ஒரு வெள்ளாடிச்சி கிடைப்பது சாத்தியமா?

கி.பி.அரவிந்தன்: வெள்ளாடிச்சி கிடைக்காத தலித்துகள் என்னைப்போல ஒரு இசை வெள்ளாடிச்சியோடு செட்டில் ஆகலாம்.

(ஷோபா சக்திக்கு இந்தப்பதில்களால் தன்னுடைய சிரிப்பை அடக்கமுடியவில்லை. சங்கிலிக்கோர்வையாக மிக ஏளனமாக விரிந்த சிரிப்பை ஒரு மாதிரியாக அடக்குகிறார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.பொவும் அரவிந்தனும் கோரஸ் ஆக பின்வருமாறு ஷோபா சக்தியை வைகிறார்கள்.)

“ எடேய் தீவான் ஷோபாசக்தி நீ செய்கிற சுத்துமாத்து எங்களுக்கு நல்லா தெரியும். நீ உண்மையில ஒரு தீவு வெள்ளாளன். ஆனால் நீ எழுத வந்த நாளில இருந்து நீ ஒரு தலித் என்ட மாயைப்பிரமையை வலு கவனமாய் கட்டிவச்சிருக்கிறாய். உண்மையிலேயே நீ ஒரு தலித் ஆக வேணுமெண்டால் ஒரு தலித் பெண்ணை கலியாணம் கட்டி கட்டுறது மட்டுமில்லாமல் அவளுக்கு விசுவாசமாக இருந்து குடும்பம் நடத்திக்காட்டு. அதுக்குப்பிறகு நாங்கள் அகில இலங்கை சிறுபான்மை மகாசபையினரைக் கூட்டி உனக்கு Freehold ஆன தலித் சேட்டிபிக்கேட் வாங்கிக்குடுக்கிறம”

(மூவருக்கும் கீறல். கீறல் குறைவான ஷோபாசக்தி ஆற்றில் பாய்ந்து எஸ்கேப்.)

யாழ்நகரில் கவிஞர் சேரனை Tigers of Lanka என்ற புத்தகத்தை எழுதிவரும் நாராயன் சுவாமி பேட்டி காண்கிறார். குறித்த புத்தகத்தில் தன்னுடைய பெயர் வரவேண்டுமென்பதற்காக சேரன் தான் உரும்பிராய் பொன் சிவகுமாரனுடன் நெருங்கிப்பழகியதாக கயிறு விடுகிறார். பின்னர் சேரன் தான் Saturday Review Deputy editor என சாமிக்கு வாய்க்குள் வைக்கிறபோது சேரனின் மடியிலிருந்து “ரெபிடெக்ஸ் இங்கிலிஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ்” என்ற புத்தகம் தவறுதலாக விழுகிறது. அப்புத்தகத்தை சுவாமி ஆச்சரியமாகப் பார்க்கவே சேரன் இது எனக்கில்லை என்ரை Girl Friend க்கு என்று தன் முகத்தில் அசடு வழிய சமாளிக்கிறார்.

சாமி படத்தின் காட்சிகளை பலவற்றை இப்படத்தில் அப்பட்டமாகக் காப்பியடித்திருக்கிறார் இயக்குனர். சாமி படத்தில் வில்லன் எல்லாப்பாதைகளும் அடைபட தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒதுங்கி ஆற்றில் பாய்ந்து நீந்தித் தப்புகிறபோது ஹீரோ கூடவே நீந்தித்துரத்தி வில்லனோடு ஆற்றில் சண்டைபோட்டு வில்லனை அடித்துக்கொல்லுகிறான. சாமி படத்தில் வில்லன் ஹீரோவின் சாதி என்னவென்று கேட்கிறான். வில்லன் இன்னொரு கட்டத்தில் “அவனும் நம்ம ஜாதியாத்தான் இருக்கணும்” என்று ஹீரோவின் சாதியை உய்த்தறிகிறான். இப்படத்திலும் எல்லாப்பாதைகளும் அடைபட பிரபாகரன் நந்திக்கடலோரம் ஒதுங்கி நந்திக்கடலில் பாய்ந்து நீந்தித் தப்புகிறபோது கூடவே நீந்தித்துரத்தி பிரபாகரனோடு நீர்ச்சண்டைபோட்டு பிரபாகரனை அடித்துக்கொல்லுகிறான் சரத் பொன்சேகா. இப்படத்திலும் சரத் பொன்சேகா “நீயும் கரையான்தான்ரா நானும் கரையான்தான்ரா எந்தக்கரையான் வெல்றான் எண்டு பாத்திடுவோமடா” என்று பிரபாகரனோடு நந்திக்கடலில் சண்டை போடுகிற போது பப்பிளிக்காகவே பஞ்ச் டயலாக் பேசுகிறான்.

ஓளி மெல்ல மெல்ல வருகிற ஒரு தமிழ் இளவேனிற்கால காலையின் பின்னணியில் பல்லாயிரம் இளம் படையினர்; ஒரு குறித்த இடத்துக்கு பரவசத்தோடு விரைகிறார்கள். அங்கு கோவண ஆண்டியாக பிரபாகரனின் சடலம் இருக்கிறது. அவர்களுக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. உடல் மொழிதான் பேசுகிறது. உலகின் அற்புதமான சினிமாச்சட்டகங்களுக்கு ஒலி ஏது? பின்னர்தான் மசாலாத்தனங்கள் அத்து மீறுகிறது. காலனித்துவ எஜமானர்கள் போர்த்துக்கீசர் கொணர்ந்த பைலா பாட்டு அபசுரமாக ஒலிக்க அதற்கு யாவாரத்தனமாக ஆடுகிறார்கள் சிங்களத்து கிராமப்பையன்கள.எங்கிருந்தோ புதுவை இரத்தின துரை வருகிறார். ஆவர் மடிச்சுக்கட்டின கிப்ஸ் சாரம் மட்டுமே கட்டியிருக்கிறார். “லொக்காட்ட சிந்து ஏக் கியண்ட மச்சாங்” என்று இராணுவ அதிகாரிகள் அவரை வேண்டுகிறார்கள். தலைவனுக்கு மரியாதையாக தன் கோவணமும் குண்டியும் கூட தெரியுமாறு சாரத்தை மேலும் தொப்பூளுக்மேல் உயர்த்திக்கட்டுகிறார். பிறகு குனிந்து நந்திக்கடல் மண்ணைத்தொட்டு நெற்றியில் பூசுகிறார். துரைக்கு பரவசத்தால் கண்கள் பனிக்கின்றன. திருச்சிற்றம்பலம் சொல்லிக்கொண்டு தலைவருக்காக தான் முன்னர் இயற்றிய “உலகமுள்ளவரை உனக்கு வயது” என்ற கவிதையை பாடுகிறார் புதுவை.

ஐய நின் மேனியின் அழகதும்
நெஞ்சினில்
அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்
அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்
அரவணைக்கின்ற பேரழகும்
வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்
விரிகின்ற கோபத்தின் அழகும்
விடுதலைக் கானநேர் வீதியை என்றுமே
விட்டறி யாதநின் அழகும்
பொய்யறி வின்றியே போரறிவோடெமைப்
புலியென நிமிர்த்திய அழகும்
புவியினில் இன்றுள தமிழரின் வாயெல்லாம்
பேசிடும் உன்பெயர் அழகும்
வையகம் உள்ளள வாகுக அதுவரை
வயதுனக் காகுக அழகா
வாயெடுத்தாயிரம் வாழ்த்துரைத்தோம்
தமிழ் வாசலில் வாழுக தலைவா

புதுவை ஒவ்வொரு வரியையும் பாட இராணுவத்தினரும் கோரஸாகப் பாடுகிறார்கள். பாடி முடிய தலைவரின் சடலத்தைப்பார்த்துக்கொண்டு “ஓழான் ஓழான் எண்டியளே. இப்ப ஓத்து விட்டான் கண்டியளே” என்று புதுவை நெஞ்சிலடித்துக்கொண்டு புலம்ப அவரை இழுத்துச் செல்கிறார்கள் மிலிட்டரி பொலீசார்.

பின்னர் பத்து மிலிட்டரி பொலீசார் வந்து “பிரபாகரனின் சடலத்தை உடனடியாக யாகசாலைக்குக் கொண்டுவருமாறு உத்தரவு. விலகுங்கள்” என்று கூவியபடியே தாங்கள் கொணர்ந்த உரச்சாக்காலும் பூவரசங்கம்புகளாலும் ஆக்கப்பட்ட பாடையில் சடலத்தை ஏற்றுகிறார்கள். சடலத்தைக்காவிக்கொண்டு படம் பிடிக்கிற ஒரு மூவாயிரம் படையினரையும் தாண்டி அதனை கொண்டு செல்ல முயலுகிற போது “இப்படியே சடலத்தை கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். நீராட்டி சீருடை உடுத்தித்தான் யாகசாலைக்கு அனுமதிப்போம்” என்று கிளர்ச்சி செய்கிறார்கள் இளம்படையினர். ஒரே களேபரம் ஏற்படுகிறது. மிலிட்டரி பொலீசாரை தள்ளி விழுத்தி சடலத்தை கைப்பற்றிய படையினர் ஒரு சூரன் போர் ஆட்டமே காட்டுகிறார்கள். Aerial shots, Crane shots என்று Long shot காட்சிகள் விரிகின்றன. உன்னிகிருஷ்ணன் மது பாலகிருஷ்ணன் விஜே ஜேசுதாஸ் மஞ்சரி ஆஷா காயத்திரி ஆகிய பாடகர்களும் கோரசுமாக பாடுகிற இளையராஜாவின் திருவாசகம் சிம்பனியின் ஐந்தாவது பகுதியாகிய திருப்பொற்சுண்ணம் ஒலிக்க ஒரு மூவாயிரம் உரல்களில் திருப்பொற்சுண்ணம் இடிக்கின்றனர் படையினர். பிரபாகரனின் கறைகளைக்கழுவ ஒரு உரலில் இடித்த பொற்சுண்ணம் காணாது என்பதை இயக்குனர் சிம்போலிக்காகக் காட்டியுள்ளார். மிலிட்டரி பொலிசார் செய்வதறியாது பார்த்திருக்க படையினர் தாமிடித்தெடுத்த பொற்சுண்ணம் பூசி சடலத்தை நீராட்டுகிறபோது தேசியத்தலைவனால் மே மாதத்தில் படுகொலை செய்யப்பட்ட அனுராதபுர அப்பாவிச் சிங்களக் குடியானவர்கள் ரெலோ போராளிகள் ராஜீவ் காந்தி பாரிஸ் சபாலிங்கம் ஆகிய தேவர்கள் வானில் தோன்றி பூமாரி பொழிகிறார்கள். இக்காட்சிகளில் வரும் ஒளிப்பதிவும் மகோன்னதம். தமிழ் இளவேனிற்காலத்தின் (இளவேனில் எனப்படுவ ஓராயிரம் வண்ணங்கோள் சித்திரை வைகாசி ஆதிய என இயம்பும் தொல்காப்பியம்) ஓராயிரம் வண்ணங்களையும் தன் கமெராவில் பதிந்திருக்ககிறார் ஒளிப்பதிவாளர். ஆதிச்சங்ககால நிலவுருக்கொண்ட வன்னியின் ஒவ்வொரு பாலை முதிரை மருது பனிச்சை மரங்களிலும் ஒரு மேப்பிள் மரத்தை தனது லென்சுக்கூடாக கடைந்து சிருஷ்டித்திருப்பதைக்காணக் கண் கோடி வேண்டும்.

இளையராஜாவின் மேற்குறித்த திருவாசகம் சிம்பனிதான் படத்தின் Title music உ ஆகவும் இருப்பிறது. அதிலும் திருப்பொற்சுண்ணம் Sonata ஒன்றுக்கு புலிகளின் முன்னைநாள் Runner up ஆஸ்தான கவியும் தற்போதைய virtual தமிழீழம் (நாடுகடந்த தமிழீழ அரசு) தத்துவாசிரியருமான கவிஞர் சேரனின் அரும்பதவுரை பொழிப்புரையை இங்கே தருதல் பொருத்தம்.

வட்ட மலர்க் கொன்றை மாலை பாடி
மத்தமும் பாடி மதியும் பாடி
சிட்டர்கள் வாழும் தென் தில்லைபாடிச்
சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடிக்
கட்டடிய மாசுணக் கச்சை பாடிக்
கங்கணம் பாடிக்கவித்த கைம்மேல்
இட்டு நின்று ஆடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே

அரும்பதவுரை மத்தம் – கார்த்திகைப்பூ. மதி – மதிவதனி. சிட்டர்கள்- பொட்டருடைய சீடர்களானகரும்புலிகள் மற்றும் புலனாய்வுக் காய்கள். தென்தில்லை – தென்னிலங்கை.சிற்றம்பலம் – Diaspori-City. கச்சை – கோவணம். கங்கணம் – சரண். கவித்த கை – கும்பிட்ட கை. அரவம் – நஞ்சுடையது இங்கே சயனைட் குப்பி என அர்த்தம்.

பொழிப்புரை தேசியத் தலைவர் அணிந்திருக்கிற தேசிய மலரான கார்த்திகைப் பூமாலை அவரது காதலியான மதிவதனி தென்னிலங்கையில் கரந்துறையும் கரும்புலிகள் மற்றும் இன்ரெலிச்சன் காய்கள் ஏழு கடல்களிலும் லண்டன் சீமை முதலிய எழுபது Diaspori-City களிலும் இருக்கிற விடுதலைப்புலிகளின் செல்வங்கள் தலைவர் முள்ளி வாய்க்காலில் எழுந்தருளிய போது கட்டிய கோவணம் சரணடையும்போது கூப்பிய கை தலைவர் அணிந்திருக்கிற சயனைட் இவை யாவும் பாடிப் பொற்சுண்ணம் இடிப்போம்.

(நாடு கடந்த தமிழீழ அரசு என்கிற வீடியோ கேம்கூட இந்த மே 18 இல் உலகமெங்கும் வெளிவருகிறது என்பது புக்கே நகர வீதியொன்றில் எனக்குக்கிடைத்த Gossip)

“பேய்க்குப்படிச்சு தாய்க்குவிட்ட” பிரபாகரன் மீதான பேயோட்டத்தை (Exorcising Prabhakaran) இத்திரைப்படத்தில் ஆரம்பித்து வைக்கிறார் இயக்குனர்.

படத்தின் இறுதியில் தொண்ணூறு செக்கன்களுக்கு நந்திக்கடலோரம் அமைக்கப்பட்டிருக்கும் பிரபாகரனின் கல்லறை சைலன்ஸ் ஆகக் காட்டப்படுகிறது. அவரது கல்லறை வாசகமாக பின்வருவன பொறிக்கப்பட்டுள்ளன.

No cash or valuables kept inside
புதையல் வேட்டைக்காரர்கள்
இக்கல்லறையில் உறங்குபவரின் தூக்கத்தை கலைக்காது
நெடியவன் காஸ்ரோவின் ஆட்கள்
மற்றும் புலத்திலுள்ள புலிகளின் கப்பக் காரரை அணுகவும்
(கல்லறை உபயம் : ஐக்கிய ராச்சியம் மற்றும் கனேடிய வல்வை நலன்புரி சங்கம்)

(விமர்சனம் முற்றிற்று)

(Arun Ambalavanar)