வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு

யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இன்று (14) உயிரிழந்துள்ளார். பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அன்புள்ள மகளுக்கு உனது அம்மா எழுதும் கடிதம்…

(Poornima Karunaharan)

இந்த உலகில் நீ வாழ வேண்டுமெனில் எதையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கும் மனநிலை உனக்குள் வர வேண்டும். நீ நினைப்பது போலவோ, நானும் உன் தந்தையும் நினைத்தது போலவோ இந்த உலகில் வாழ்வது அவ்வளவு எளிதானது இல்லை.

தவறுகளின் மூலம் எங்கே? பொள்ளாச்சி

(Vijaya Baskaran)

சம்பவம் 1 பணத்திமிரும் வளர்ப்பும்

எனது சாவகச்சேரியில் ஒரு வசதிபடைத்த வர்த்தகர் ஒருவர் இருந்தார்.அவரது மகள் சைக்கிள் ஓட்டத்தில் ஆர்வம் மிக்கவர்.அவர் காலையில் தினமும் கொடிகாமம் நோக்கி சைக்கிள் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளுவார்.அவரது இரு பக்கமும் மோட்டார் சைக்கிளில் அண்ணன்களும் கூடவே வருவார்கள்.யாராவது தப்பித் தவறி அந்தப் பெண்ணைப் பார்த்தால் தூசண வார்த்தைகள் அண்ணன்கள் வாயிலிருந்து வரும்.இந்த அண்ணன்களோடு தடியன்களும் வருவதுண்டு.

2015 ம் ஆண்டில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் நடந்த சம்பவம்.

ஒரு பெண் இட்ட பதிவை கீழே பதிந்துள்ளேன். பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஒத்த சம்பவம் நம்மூரில் எப்போதோ நடந்து குற்றவாளி அரசியல் செல்வாக்குடன் இலகுவாகத் தப்பியிருக்கான். நம்மூரில் நம்பெண்களுக்கு கொடுமைநடந்தபோது கண்மூடி பாவிகளாய் இருந்துள்ளோம். சட்டத்தில் தண்டனை கொடுக்கமுடிவிட்டாலும் இனியாவது இந்தச்சம்பவத்தை ஆராய்ந்து ஊடகங்கள் குற்றவாளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும்.
குறிப்பிட்ட பதிவு. Kirishanth

ஆண்களுக்காக 7: உங்களுக்கு அந்த அலறல் கேட்கிறதா?

(பாரதி ஆனந்த்)

பெண்ணின் மாண்பைக் குறைக்கும் ஆண்களைப் பற்றியும், அவளை அடிமையாக்கும், ஆதிக்கம் செலுத்தும், அடக்கு முறை செய்யும், பண்டமாகப் பார்க்கும் ஆண்களைப் பற்றியும் எழுத வேண்டும் . ஆனால் அவர்களை குற்றவாளியாக மட்டுமே பார்க்கக் கூடாது, எழுதுவது எல்லாம் அறிவுரையாக அமைந்துவிடக்கூடாது. அதேவேளையில் அந்த எழுத்து குற்றமுள்ள நெஞ்சங்களைப் பதறவைக்க வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியில் தொடங்கப்பட்ட தொடர் இது.

போயிங்கின் 737 மக்ஸ் 8 பல நாடுகளால் தரையிறக்கம்

தங்களது விமானநிலையங்களுக்கு வரும், வெளியேறும் அனைத்து போயிங் 737 மக்ஸ் விமானங்களின் இயக்கங்களை சிங்கப்பூரும் அவுஸ்திரேலியாவும், நேற்று (12) இடைநிறுத்தியுள்ளன. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க நிறுவனமான போயிங்கின் புதிய விமானமான 737 மக்ஸ் ஆனது, ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது விபத்தைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தமது போயிங் 737 மக்ஸ் விமானங்களையும் இந்தோனேஷியாவும் சீனாவும் நேற்று முன்தினம் தரையிறக்கியிருந்தன,

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல்: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில், பாலியல் துன்புறுத்தல் வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரில், மூவருக்கான விளக்கமறியலை மேலும் 15 நாள்களுக்கு நீடித்து பொள்ளாச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மகாத்மாவின் ‘அன்பு இந்தியா’ வேண்டுமா, கோட்சேவின் ‘வெறுப்பு இந்தியா’ வேண்டுமா?- ராகுல் காந்தி கேள்வி

மகாத்மா காந்தியின் அன்பு நிறைந்த இந்தியா அல்லது, வெறுப்பு நிறைந்த நாதுராம் கோட்சேவின் இந்தியா இதில் எது வேண்டும் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் நாளை முதல் அதிகளவிலான வெப்பநிலையுடனான வானிலை தொடருமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலைமையின் காரணமாக வரட்சி மற்றும் உடல் சோர்வுகள் அதிகளவில் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுமெனவும், இதனால் அதிகளவில் நீரை பருகுதல் என்பவற்றில் அதிகளவு அவதானத்துடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரிக்கும் கடும் வெப்பம்…பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்…..!! பிள்ளைகள் அவதானம்…!

வடக்கு மாகா­ணத்­தில் தற்­போது காணப்­ப­டும் அதிக வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக உடல் நல­னில் பாதிப்­புக்­கள் ஏற்­ப­ட­லாம். வெப்­ப­மான கால­நிலை நில­வும்­போது, தேவை­யான ஆயத்­தங்­க­ளைச் செய்­வ­து­டன் உரிய அறி­வு­றுத்­தல்­க­ளைப் பின்­பற்­று­வ­தன் ஊடாக பாதிப்­புக்­க­ளைத் தவிர்க்க முடி­யும் என்று வடக்கு மாகாண சுகா­தா­ரச் சேவை­கள் பணிப்­பா­ளர் மருத்­துவர் ஆ.கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுரை
இது தொடர்­பாக அவர் அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,