Putin to U.S.: I’m ready for another Cuban Missile crisis if you want one

By Andrew Osborn,Reuters 

MOSCOW, Feb 21 (Reuters) – President Vladimir Putin has said that Russia is militarily ready for a Cuban Missile-style crisis if the United States is foolish enough to want one and that his country currently has the edge when it comes to a first nuclear strike.

நாடாளுமன்றத் தேர்தல்: அமைந்தது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி

(எம். காசிநாதன்)
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம், களைகட்டி விட்டது. இரு பிளவுகளான அ.தி.மு.கவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.கவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் முதலில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. நேற்று வரை கடுமையாக, அ.தி.மு.க ஆட்சியை விமர்சித்துக் கொண்டிருந்த டொக்டர் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துக் கூட்டணி அமைத்தார். அக்கூட்டணி, அ.தி.மு.க அலுவலகத்திலோ, பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்திலோ நடைபெறவில்லை.

வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

வடமாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த அளவில் கல்வி கற்று வரும் அரசாங்க பாடசாலைகளை மூடுவதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நாயகனும் கைக்கூலியும்

– எஸ்.பி.ராஜேந்திரன்
35 வயதே நிரம்பிய அந்த ரகசிய மனிதன், யாருக்கும் தெரியாமல் அந்த அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறான். இரண்டு வாரம் அவனுக்கு அவகாசம் தரப்படுகிறது. அவனும் உறுதியளிக்கிறான். என்ன உதவி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்; என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; ‘அவன்’ பதவியிலிருக்கக் கூடாது என உத்தரவிடுகிறார்கள். உன்னை ஜனாதிபதியாக்குகிறோம் என்கிறார்கள். வாயெல்லாம் பல்லாக, கெக்கெலி கொட்டிச் சிரித்தவாறு கை கொடுத்து விடைபெறுகிறான்.

யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அரியாலை கிழக்கு மனித நேய வேலை திட்டத்துக்காக இராணுவத்தால் தத்தெடுப்பு

யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அரியாலை கிழக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான கேந்திர பிரதேசமாக தத்தெடுக்கப்பட்டு உள்ளது.

சர்ச்சைக்கு உரிய காரைதீவு பிரதேச சபையிலே மீண்டும் பரபரப்பு, பிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை

வரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு பிரதேச சபையில் பிரதி தவிசாளர் ஏ. எம். ஜாஹீர் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் அட்டப்பள்ளம் பிலோமினாவுக்கு தேசிய சாதனை விருது

விழாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு வீட்டில் வறுமை

நாடளாவிய ரீதியில் இந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆக்க திறன் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அட்டப்பள்ளத்தை சேர்ந்த சிறுமி ஜெ. பிலோமினா மகத்தான வெற்றி ஈட்டி தேசிய சாதனை புரிந்து உள்ளார்.

‘‘மன்னிக்க முடியாது’’ – வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வெனிசுலாவிடம் இருந்து பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

நெடுந்தீவில் 5 ஆண்டுகளாக வைத்தியர் இல்லை

நெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் போதனா வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு திறப்பு

யாழ் போதனா வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இன்று (14) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவும் கலந்து கொண்டிருந்தார். குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.