வடக்கில் அதிகரிக்கும் கடும் வெப்பம்…பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்…..!! பிள்ளைகள் அவதானம்…!

அதிக வெப்­பத்­தால் ஏற்­ப­டும் பாதிப்­புக்­களை கீழ்க் கண்­ட­வாறு வகைப்­ப­டுத்­த­லாம். வெப்­பத்­தால் ஏற்­ப­டும் பிடிப்­புக்­கள் பயிற்­சி­க­ளின் போது வெப்­பத்­தால் தசை­க­ளில் ஏற்­ப­டும் வலி, தசை இறுக்­கம். கை, கால் வயிற்றுப் பகு­தி­க­ளில் இடம்பெறலாம்.

உடல் இயக்­கங்­க­ளில் ஈடு­ப­டு­வதை விடுத்­துக் குளிர்ச்­சி­யான இடத்­தில் போது­மான ஓய்வு எடுப்­ப­தன் ஊடா­க­வும், போது­மான நீரைப் பரு­கு­வ­தன் ஊடா­க­வும் இதனைத் தவிர்க்­க­லாம்.

தவிர்க்க வேண்­டி­யவைவெப்­பத்­தால் ஏற்­ப­டும் அதிக சோர்வு – அதிக வெப்­பம் கார­ண­மாக ஏற்­ப­டும் அதிக சோர்வு. அதிக வியர்வை, அதிக உடற் சோர்வு கார­ண­மாக மயக்­கம் ஏற்­ப­ட­லாம். உடல் இயக்­கங்­க­ளில் ஈடு­ப­டு­வதை விடுத்­துக் குளிர்ச்­சி ­யான இடத்­தில் போது­மான ஓய்வு எடுக்க வேண்­டும்.

போது­மான நீரை ( 15 நிமி­டத்­து்­ககு ஒரு தடவை அரைக் கிளாஸ் நீர்) பருக வேண்­டும். உட­லைக் குளிர் நீரால் துடைக்க வேண்­டும்.

அதிக வெப்­பத்­தால் ஏற்­ப­டும் உடல் அதிர்ச்சி – அதிக வெப்­பத் தாக்­கம் கார­ண­மாக உடல் வெப்ப நிலை­யைச் சீரா­கப் பேண முடி­யாத அதிர்ச்சி. உடல் வெப்­ப­நிலை அதி­க­ரித்­தல், இத­யத் துடிப்பு விகி­தம், சுவாச விகி­தம் அதி­க­ரித்­தல், மனக் குழப்­பம், தலை­வலி, வலிப்பு, மயக்க நிலை என்­பன ஏற்­ப­டும்.

பாதிப்­ப­டைந்­த­வ­ரைக் குளிர்ச்­சி­யான இடத்­துக்கு மாற்­றல், இறுக்­க­மான ஆடை­க­ளைத் தளர்த்­தல், உட­லைக் குளிர்ந்த நீரால் துடைத்­தல், தேவை எனில் 1990 எனும் தொலை­பேசி இலக்­கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி நோயா­ளர் காவு வண்­டியை அழைத்து அவ­சர மருத்­துவ உதவி வழங்க ஏற்­பாடு செய்­தல் ஆகி­ய­வற்­றின் மூலம் இவற்­றைத் தவிர்க்க முடி­யும்.

பாட­சா­லை­க­ளில் பின்­வ­ரும் நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வ­தன் ஊடாக இடர்­க­ளைத் தவிர்க்க முடி­யும்.பாட­சா­லை­க­ளில் மாண­வர்­கள் வெளி­யி­டங்­க­ளில், விளை­யாட்டு மைதா­னங்­க­ளில் விளை­யா­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டும். இடை­வே­ளை­யின் போதும் ஏனைய சந்­தர்ப்­பங்­க­ளின் போதும் மாண­வர்­கள் வெயி­லில் அதிக நேரம் செல­வி­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டும்.

மாண­வர்­கள் நீர் பரு­கு­வ­தற்­கும், ஓய்வு எடுப்­ப­தற்­கும் வச­தி­யாக 2 மேல­தி­க­மான இடை­வே­ளையை ஏற்­பாடு செய்­தல். வெயி­லில் காணப்­ப­டும்­போது அதிக வெப்­பத் தாக்­கத்­தைத் தவிர்ப்­ப­தற்­காக பாட­சா­லை­யி­லும், வீட்­டி­லும் மாண­வர்­க­ளைத் தேவை­யின்றி வெளியே அழைத்­துச் செல்­வ­தைத் தவிர்க்க வேண்­டும்.

அதிக வெப்­ப­மான காலத்­தில் பாட­சாலை இல்ல விளை­யாட்­டுப் போட்­டி­க­ளை­யும், விளை­யாட்­டுப் பயிற்­சி­க­ளை­யும் தவிர்க்க வேண்­டும்.

வச­தி­களை ஏற்­ப­டுத்­தல்

போது­மான குடி தண்­ணீரை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­வ­து­டன், வழ­மையை விட அதி­க­ள­வான நீரைப் பரு­கு­வ­தற்கு ஊக்­கப்­ப­டுத்த வேண்­டும்.

பாட­சா­லை­க­ளில் போது­மான குடி தண்­ணீர் வசதி இல்­லா­த­வி­டத்து, தேவை­யான குடி தண்­ணீரை வழங்க மாற்று ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்­டும். இதற்­காக மாவட்­டச் செய­ல­ரின் உத­வியுடன், மாவட்ட இடர் முகா­மைத்­துவ இணைப்­பா­ள­ரின் உத­வி­யைப் பெற­லாம்.

போது­மான காற்­றோட்ட வச­தி­களை வகுப்­ப­றை­க­ளில் ஏற்­ப­டுத்த வேண்­டும். மின் விசி­றியை உப­யோ­கிக்க வேண்டி இருப்­பின் காற்­றோட்­டத்தை உறு­திப்­ப­டுத்தக் கத­வு­கள், யன்­னல்­களை முற்­றா­கத் திறக்க வேண்­டும். அடுக்கு மாடி­கள், தக­ரத் தக­டு­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட வகுப்­ப­றை­க­ளைப் போது­மான நிழ­லுள்ள, காற்­றோட்­ட­முள்ள வகுப்­ப­றை­க­ளுக்­குத் தற்­கா­லி­க­மாக இட­மாற்ற வேண்­டும்.

சிறப்பு ஆயத்­தங்­கள்
கழுத்­துப் பட்டி அணி­வ­தைத் தவி­ர்ப்­ப­து­டன், இய­லு­மா­ன­வரை இடுப்­புப் பட்டி அணி­வ­தை­யும் தவிர்க்க வேண்­டும். வெளி­யி­டங்­க­ளுக்­குச் செல்­லும்­போது தொப்­பியை அணிந்து அல்­லது குடை பிடித்­துச் செல்ல வேண்­டும்.கறுப்பு நிற ஆடை­களை அணி­வ­தைத் தவிர்க்க வேண்­டும். வழ­மையை விட அதிக நீரைப் பருக வேண்­டும்.

நீருக்­குப் பதி­லாக இள­நீ­ரைப் பரு­க­லாம். அதிக சீனியை உள்­ள­டங்­கிய காற்­ற­டைத்த பானங்­க­ளைப் பரு­கு­வ­தைத் தவிர்க்க வேண்­டும்.மாண­வர் ஒரு­வ­ரின் உடல் நலம் பாதிக்­கப்­பட்ட அறி­கு­றியை அவ­தா­னிக்­கு­மி­டத்து, உட­ன­டி­யாக ஆசி­ரி­ய­ருக்கோ அல்­லது வயது வந்த நபர் ஒரு­வ­ருக்கோ தெரி­யப்­ப­டுத்­து­வ­து­டன் உட­ன­டி­யாக மரு­த்துவ சேவை­களை வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும் எனவும் குறித்த அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-uthayakumar ganeshalingam