புலேந்திரன், குமரப்பாவுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததும் இந்தியப்படையினர்

புலிப்பயங்கரவாதிகள் தாங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது போல நடித்தார்கள். தங்களிடமிருந்த சில ஆயுதங்களைக் கையளித்தார்கள். பின்பு புலேந்திரன், குமரப்பா உட்பட 12 பேர் ஆயுதங்களைக் கடத்திக்கொண்டிருந்த போது கடலில் கைதானார்கள்.

ஒப்பந்தத்தை மீறி ஆயுதங்களைக் கடத்தியதற்காக 12 பேரும் கடலில் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விரும்பினால் உங்கள் பிஸ்டல்களுடன் நீங்கள் போகலாம் என்று கடற்படையினர் சொன்னபோது தாங்கள் ஆயுதங்களை விட்டு விட்டு போக முடியாது என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையுடையவர்கள் ஏன் கைது செய்யப்பட்டபோதே சயனைட் கடிக்கவில்லை, சமாதான ஒப்பந்தம் தங்களுக்குச் சார்பாக இருக்குமென அவர்கள் நம்பினார்கள். அவர்களிடம் இருந்த சயனைட் கைப்பற்றப்பட்டுவிட்டது.

பலாலியில் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தபோது அவர்களைச் சந்திக்கச் சென்ற அன்ரன் பாலசிங்கமே அவர்களுக்குச் சயனைட்டை சாப்பாட்டுப் பார்சலுக்குள் வைத்துக் கொடுத்திருந்தார். அவர்களைச் சயனைட் கடித்துத் தற்கொலை செய்ய நிர்ப்பந்தித்தது புலிகளின் தலைமைப் பீடமே!

அவர்களை கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டப் போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தாலும் அவர்கள் விடுதலையாகும் வாய்ப்புக்கள் இருந்தன. அவர்கள் விடுதலையாகி வந்திருந்தாலும் கூட பிரபாகரனால் அவர்களுக்கு மரண தண்டனை வழ‌ங்கப்பட்டிருக்கும். காரணம் அவர்கள்: ஆயுதங்களைப் பறி கொடுத்தமையே! பிரபாகரன் ஆயுதங்களுக்குக் கொடுக்கும் மதிப்பு தனது உறுப்பினர்களுக்குக் கொடுப்பதில்லை. இந்தியப்படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் பிடிபடும்போது சயனைட் கடித்து தற்கொலை செய்யாததற்காக‌ புலிகளால் கொல்லப்பட்டார்கள்.

புலேந்திரன், குமரப்பாவுக்கு திருமணமாகி ஒரு சில நட்களே! தங்களது ஹெலிகொப்டரில் அழைத்துச் சென்று அவர்களது திருமணத்தை நடத்தி வைத்ததும் இந்தியப்படையினர்தான். பலாலியிலிருந்து அவர்களை கொழுப்புக்கு அழைத்துச் சென்றால் டாங்கியால் விமானத்தைத் தடுத்து நிறுத்துவேன் என்று இந்தியப்படைத் தளபதியான “றொட்றிகோஸ்” கூறியதாக “முறிந்த பனை”நுலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது உறுப்பினர்கள் இந்தியப்படையுடன் நெருக்கமாக உறவாடுவதை பிரபாகரன் விரும்பவில்லை. எவ்வழியிலும் இந்தியப்படையினருடன் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். அதற்கான சந்தர்ப்பங்களைத் தயார் படுத்தினார். திலீபனின் உண்னாவிரதமும், புலேந்திரன் குமரப்பா ஆகியோரின் தற்கொலையும் அவைகளில் ஒன்று.

(Rahu Rahu Kathiravel)