இலங்கையின் ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து பலத்த சேதமடைந்ததாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்து சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
டிஜிட்டல் யுகத்தில் வாசிப்புப் பண்பாட்டைப் பாதுகாப்பது அவசியம்
மாறிவரும் நவீன வாழ்க்கை முறையும், டிஜிட்டல் ஊடகங்களின் அதிகரித்த ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆழமான வாசிப்புப் பண்பாட்டை மீளக் கட்டியெழுப்புவது காலத்தின் அவசியமாகும் எனத் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் பெருமளவில் கரை ஒதுங்கும் இறந்த மீன்கள்
முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு இந்நாட்களில் பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான இறந்த மீன்கள் கடந்த சில நாட்களாகக் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன.
6 ஆலயங்களில் ஒரே இரவில் தொடர் திருட்டு
அம்பிட்டியே சுமணரதன தேரர் கைது: நாளை வரை விளக்கமறியல்
பச்சை நிற நம்பர் பிளேட்டால் குழப்பம்
நீர்வளக் கண்காட்சி
யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற நீர்வளக் கண்காட்சிக்குச் சென்றபோது, எமது குளங்களையும், அவற்றுடன் தொடர்புடைய நிலத்தடி நீர்வளத்தையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக மிகவும் பயனுள்ளதொரு அறிவூட்டலான அமர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் தெளிவாகவும், எளிமையாகவும் பல முக்கியமான விடயங்களை விளக்கிக் கூறினார்கள்.

22Aக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சட்ட மாஅதிபர்
உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பலமான (அரசியலமைப்புச்) சரத்தையும் திருத்துவதைக் கோரவில்லை என்பதால், அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் தேவையில்லை என்று சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பாலா தம்பு: தொழிலாளர்களுக்காக அறுபத்தாறு ஆண்டுகள் ஒலித்த குரல்
ஒரே தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக அறுபத்தாறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய ஒருவரை உலகத் தொழிற்சங்க வரலாற்றிலேயே காண்பது அரிது. அந்தச் சாதனைக்குரியவர் இலங்கையின் பாலா தம்பு. 1948-ஆம் ஆண்டு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2014-ஆம் ஆண்டு தனது 92-ஆவது வயதில் மறையும் வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.

